எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
மு.வ உரை உரை:
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி் முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
கலைஞர் உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி் வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி் தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி் தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி் வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தி்த் தானே அழிவான்.
Explanation:
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
No comments:
Post a Comment