For this Day:

;

Thought for Today

"Life is a tragedy when seen in close-up, but a comedy in long-shot."
- Charlie Chaplin

A Thought for Today

"A man can be himself only so long as he is alone."
- Arthur Schopenhauer

Thirukural : Veruvantha seiyaamai - 9

செருவந்த போழ்தி்ற் சிறைசெய்யா வேந்தன்  வெருவந்து வெய்து கெடும்.

மு.வ உரை உரை:
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தி்ல் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

கலைஞர் உரை:
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

Explanation:
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

A Thought for Today

"An idea is a point of departure and no more. As soon as you elaborate it, it becomes transformed by thought."
- Pablo Picasso

Thirukural : Veruvantha seiyaamai - 8

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

மு.வ உரை உரை:
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தி்ன் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

கலைஞர் உரை:
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்தி்ற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தி்த் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

Explanation:
The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

Thirukural : Veruvantha seiyaamai - 7

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

மு.வ உரை உரை:
கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

கலைஞர் உரை:
கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

Explanation:
Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).

Thought for Today

"There must be a reason why some people can afford to live well. They must have worked for it. I only feel angry when I see waste. When I see people throwing away things that we could use."
- Mother Teresa

A Thought for Today

"Law and order exist for the purpose of establishing justice and when they fail in this purpose they become the dangerously structured dams that block the flow of social progress."
- Martin Luther King

Thirukural : Veruvantha seiyaamai - 6

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்  நீடின்றி ஆங்கே கெடும்.

மு.வ உரை உரை:
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

கலைஞர் உரை:
கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

Explanation:
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

Thought for Today

"May you live your life as if the maxim of your actions were to become universal law."
- Immanuel Kant

A Thought for Today

"No person was ever honored for what he received. Honor has been the reward for what he gave."
- Calvin Coolidge

Thirukural : Veruvantha seiyaamai - 5

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

மு.வ உரை உரை:
எளிதி்ல் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்தி்ருப்பதைப் போன்ற தன்மையுடையது.

கலைஞர் உரை:
யாரும் எளிதி்ல் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதி்ல் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

Explanation:
The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

Thirukural : Veruvantha seiyaamai - 4

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

மு.வ உரை உரை:
நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

கலைஞர் உரை:
கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி?ல் அழியும்.

Explanation:
The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

Thirukural : Veruvantha seiyaamai - 3

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

மு.வ உரை உரை:
குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

கலைஞர் உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

சாலமன் பாப்பையா உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

Explanation:
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

Thirukural : Veruvantha Seiyaamai - 2

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

மு.வ உரை உரை:
ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

Explanation:
Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

Thirukural : Veruvantha seiyaamai - 1

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

மு.வ உரை உரை:
செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

கலைஞர் உரை:
நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

Explanation:
He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

Thought for Today

"Never give up on the things that make you smile."

A Thought for Today

"Always and never are two words you should always remember never to use."
- Wendell Johnson

Thirukural : Kannottam - 10

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

மு.வ உரை உரை:
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

கலைஞர் உரை:
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்தி்க் களிப்படைவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லாராலும் விரும்பத்தக்க நாகரிகத்தை விரும்புபவர், தமக்கு நெருக்கமானவர் நஞ்சையே தருகிறார் என அறிந்தும் கண்ணோட்டம் காரணமாக அதை உண்டு அவருடன் பழகுவர்.

Explanation:
Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.

Thirukural : Kannottam - 9

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.

மு.வ உரை உரை:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்தி்லும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

கலைஞர் உரை:
அழிக்க நினைத்தி்டும் இயல்புடையவரிடத்தி்லும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்தி்லும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

Explanation:
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.

A Thought for Today

'You start with a bag full of luck and an empty bag of experience. The trick is to fill the bag of experience before you empty the bag of luck.'
– Unknown

Thought for Today

"I never did anything worth doing by accident, nor did any of my inventions come by accident; they came by hard work."
-Thomas Alva Edison

Thirukural : Kannottam - 8

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்தி்வ் வுலகு.

மு.வ உரை உரை:
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

கலைஞர் உரை:
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதி்லும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.

Explanation:
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).

A Thought for today

"Art is the elimination of the unnecessary."
-Pablo Picasso, painter, and sculptor (1881-1973)

Thirukural : Kannottam - 7

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.

மு.வ உரை உரை:
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா தி்ருத்தலும் இல்லை.

கலைஞர் உரை:
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

Explanation:
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.

Thirukural : - 6

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ  டியைந்துகண் ணோடா தவர்.

மு.வ உரை உரை: கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடுப் பொருந்தி் இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரததைப் போன்றவர்.

கலைஞர் உரை:
ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:
கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

Explanation:
He resemble the trees of the earth, who although have eyes, never look kindly (on others).

Thought for Today

"What is important in life is life, and not the result of life."
- Johann Wolfgang von Goethe

A Thought for Today

"I love what I do. I take great pride in what I do. And I can't do something halfway, three-quarters, nine-tenths. If I'm going to do something, I go all the way."
- Tom Cruise

Thirukural : Kannottam - 5

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.

மு.வ உரை உரை:
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.

கலைஞர் உரை:
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.

Explanation:
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.

Thirukural : Kannottam - 4

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.

மு.வ உரை உரை:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தி்ல் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

கலைஞர் உரை:
அகத்தி்ல் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள் முகத்தி்ல் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப்பயனும் இல்லாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?

Explanation:
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?

Thirukural : Kannottam - 3

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.

மு.வ உரை உரை:
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

கலைஞர் உரை:
இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி் வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி் வராத இசையும் பயன் தராதவையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?

Explanation:
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.

Thought for Today

"Revolutions go not backward."
- Ralph Waldo Emerson

A Thought for Today

"Being ignorant is not so much a shame, as being unwilling to learn."
- Benjamin Franklin

Thirukural : Kannottam - 2

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்்
உண்மை நிலக்குப் பொறை.

மு.வ உரை உரை:
கண்ணோட்டத்தி்னால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்தி்ற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

கலைஞர் உரை:
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.

Explanation:
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.

Thirukural : Kannottam - 1

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.

மு.வ உரை உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

கலைஞர் உரை:
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது.

சாலமன் பாப்பையா உரை:
முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

Explanation:
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.

Thirukural : Ottraadal -10

சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின்  புறப்படுத்தான் ஆகும் மறை.

மு.வ உரை உரை:
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது, செய்தால் மறைபொருளைத்தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

கலைஞர் உரை:
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
மறைவாக நிகழ்வனவற்றைஅறிந்து செல்லும் ஒற்றருக்குப் பரிசு தருக; மறைவாகவே தருக; ஊர் அறியத் தருவது மறைவையும் ஒற்றரையும் தானே வெளிப்படுத்தியது போல் ஆகும்.

Explanation:
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.

Thirukural : Ottraadal - 9

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

மு.வ உரை உரை:
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆள வேண்டும், அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும.்

கலைஞர் உரை:
ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை:
ஒற்றரை இயக்கும்போது ஓர் ஒற்றரை இன்னுமோர் ஒற்றர் அறிந்துகொள்ளாதபடி இயக்குக; ஒரு காரியத்திற்கு மூவர் சொல்லும் ஒன்றுபோலவே இருந்தாலும் அதையும் ஆய்ந்து பிறகு ஏற்றுக்கொள்க.

Explanation:
Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.

Thirukural : Ottraadal - 8

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

மு.வ உரை உரை:
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றுமோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்தி்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.

Explanation:
Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.

Thought for Today

"Anyone who tells a lie has not a pure heart, and cannot make a good soup."
- Beethoven

A Thought for Today

"The 'kingdom of Heaven' is a condition of the heart - not something that comes 'upon the earth' or 'after death.' "
- Friedrich Nietzsche

Thirukural : Ottraadal - 7

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மு.வ உரை உரை:
மறைந்த செய்தி்களையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்தி்களை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

கலைஞர் உரை:
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும திறனாகும்.்

சாலமன் பாப்பையா உரை:
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.

Explanation:
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.

Thirukural : Ottraadal - 6

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.

மு.வ உரை உரை:
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

கலைஞர் உரை:
ஆராய்ந்தி்ட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதி்ல் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.

சாலமன் பாப்பையா உரை:
செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தி்ல் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

Explanation:
He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.

Thirukural : Ottraadal - 5

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

மு.வ உரை உரை:
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்தி்லும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

கலைஞர் உரை:
சந்தேகப்பட முடியாத தோற்றத்துடனும் அப்படிச் சந்தேகப்பட்டுப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமலும், என்ன நேர்ந்தாலும் மனத்தில் உள்ளதை வெளிப்படுத்தாமலும் உள்ளவர்களே ஒற்றர்களாகப் பணியாற்ற முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சந்தேகப்படாத வேடத்தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

Explanation:
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).

Thought for Today

"So, to praise others for their virtues can but encourage one's own efforts."
- Nagarjuna

A Thought for Today

"I think that in the discussion of natural problems we ought to begin not with the Scriptures, but with experiments, and demonstrations."
- Galileo

Thirukural : Ottraadal - 4

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு  அனைவரையும் ஆராய்வது ஒற்று.

மு.வ உரை உரை:
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

கலைஞர் உரை:
ஓர் அரசில் உளவறியும் ஒற்றர் வேலை பார்ப்பவர்கள், வேண்டியவர், வேண்டாதவர், சுற்றத்தார் என்றெல்லாம் பாகுபாடு கருதாமல் பணிபுரிந்தால்தான் அவர்களை நேர்மையான ஒற்றர்கள் எனக் கூற முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
அரசுப் பணியாளர், ஆளும் கட்சி, அதன் எதி்ர்கட்சியினர், அயலவர் என்று அனைவரின் சொல், செயல் கொண்டு அவர்தம் மனக்கருத்தை அறிபவரே ஒற்றர்.

Explanation:
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.

A Thought for Today

"Preparing food is not just about yourself and others. It is about everything!"
- Shunryu Suzuki

Thought for Today

"The observer, when he seems to himself to be observing a stone, is really, if physics is to be believed, observing the effects of the stone upon himself."
- Bertrand Russell

Thirukural : Ottraadal - 3

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.

மு.வ உரை உரை:
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றிபெறத்தக்க வழி வேறு இல்லை.

கலைஞர் உரை:
நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
எல்லார் இடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றரைக் கொண்டு அறிந்து, நடப்பை தெரிந்து கொள்ளாத ஆட்சி, நிலைத்து வெற்றி பெற வேறொரு வழியே இல்லை.

Explanation:
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.

A Thought for Today


In everyone's life, at some time, our inner fire goes out. It is then burst into flame by an encounter with another human being. We should all be thankful for those people who rekindle the inner spirit. 
-Albert Schweitzer, philosopher, physician, musician, Nobel laureate (1875-1965) 

Thirukural: Ottraadal- 2

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

மு.வ உரை உரை:
எல்லாரிடத்தி்லும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்தி்லும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

கலைஞர் உரை:
நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்தி்லும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்தி்லும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.

Explanation:
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.