For this Day:

;

Thought for Today

"There is no need for temples, no need for complicated philosophies. My brain and my heart are my temples; my philosophy is kindness."
- Dalai Lama

Thirukural : Mannarai Sernthozudhal - 5

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

மு.வ உரை உரை:
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

கலைஞர் உரை:
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

Explanation:
(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).

A Thought For Today

"Critics! Those cut-throat bandits in the paths of fame."
- Robert Burns

Thought for Today

"Most people say that is it is the intellect which makes a great scientist. They are wrong: it is character."
- Albert Einstein

Thirukural : Mannarai Sernthozudhal - 4

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

மு.வ உரை உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தி்ல் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

கலைஞர் உரை:
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்தி்டல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

Explanation:
While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.

Thought for Today

"To practice five things under all circumstances constitutes perfect virtue; these five are gravity, generosity of soul, sincerity, earnestness, and kindness."
- Confucius

A Thought for Today

"The debt we owe to the play of imagination is incalculable."
- Carl Jung

Thirukural : Mannarai Sernthozudhal - 3

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

மு.வ உரை உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக் கொள்ள விரும்பினால் அரியத் தவறுகள் நேராமல் காத்துக்கொள்ள வேண்டும், ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

கலைஞர் உரை:
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்தி்லிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுவோர் தம்மைக் காக்கக் கருதி்னால் மோசமான பிழைகள் தம் பங்கில் நேர்ந்து விடாமல் காக்க; பிழைகள் நேர்ந்துவிட்டதாக ஆட்சியாளர் சந்தேகப் பட்டுவிட்டால் அவரைத் தெளிவிப்பது எவர்க்கும் கடினம்.

Explanation:
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.

Thought for Today

I have learnt silence from the talkative, toleration from the intolerant, and kindness from the unkind; yet strange, I am ungrateful to these teachers.
 -Kahlil Gibran, poet, and artist (1883-1931)

A Thought for Today

"One-fifth of the people are against everything all the time."
- Robert Kennedy

Thirukural : Mannarai Sernthozudhal - 2

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

மு.வ உரை உரை:
அரசர் விரும்புகின்றவர்களைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்தி்ருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

கலைஞர் உரை:
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகுபவர் ஆட்சியாளர் எவற்றை விரும்புகிறாரோ அவற்றை விரும்பாமல் இருப்பது, அவருக்கு ஆட்சியாளரால் நிலைத்த செல்வத்தைக் கொடுக்கும்.

Explanation:
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

Thought for Today

"I not only use all the brains that I have, but all that I can borrow."
- Woodrow Wilson

A Thought for Today

"All our knowledge begins with the senses, proceeds then to the understanding, and ends with reason. There is nothing higher than reason."
- Immanuel Kant

Thirukural : Sernthozudhal - 1

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

மு.வ உரை உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர் போல இருக்க வேண்டும்.

கலைஞர் உரை:
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதி்கமாக நெருங்கிவிடாமலும், அதி்கமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக.

Explanation:
Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.

Thought for Today

"Wrinkles should merely indicate where smiles have been."
- Mark Twain

A Thought for Today

"Tomorrow is the most important thing in life. Comes into us at midnight very clean. It's perfect when it arrives and it puts itself in our hands. It hopes we've learned something from Yesterday."
- John Wayne

Thirukural : Kuripparithal - 10

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

மு.வ உரை உரை:
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

கலைஞர் உரை:
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தி்ல் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.

Explanation:
The measuring-scale (instrument) of those (ministers) who say we are acute will on inquiry be found to be their (own) eyes and nothing else.

Thought for Today

"Everything we hear is an opinion, not a fact. Everything we see is a perspective, not the truth."
- Marcus Aurelius

A Thought for Today

"Only the wisest and stupidest of men never change."
- Confucius

Thirukural : Kuripparithal - 9

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.

மு.வ உரை உரை:
கண்பார்வையின் வேறுபாடுகளை உணரவல்லவரைப் பெற்றால்( ஒருவனுடைய மனதி்ல் உள்ள) கையையும் நட்பையும் அவனுடைய கண்களே சொல்லி விடும்.

கலைஞர் உரை:
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தி்ல் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்களின் பார்வை வேறுபடுவதைக் கொண்டே அவர்தம் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்க்கு, பகைமையையும் நட்பையும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும் அவர்தம் கண்களே சொல்லிவிடும்.

Explanation:
If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship.

Thought for Today

"When you are content to be simply yourself and don't compare or compete, everybody will respect you."
- Lao Tzu

A Thought for Today

"There can be economy only where there is efficiency."
- Benjamin Disraeli

Thirukural : Kuripparithal - 8

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

மு.வ உரை உரை:
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

கலைஞர் உரை:
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர் ஒருவரின் முகத்துக்கு எதரில் நின்றாலே போதுமானது.

சாலமன் பாப்பையா உரை:
தன் மனத்தைக் குறிப்பால் அறிந்து தான் எண்ணியதை அறிபவரைத் துணையாகப் பெற்றால், அவர்களின் முகத்தை அவன் பார்த்து நின்றாலே போதும்.

Explanation:
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face.

Thought for Today

"The art of acting consists in keeping people from coughing."
- Benjamin Franklin

A Thought for Today

Too often we enjoy the comfort of opinion without the discomfort of thought.
-John F. Kennedy, 35th US president (1917-1963)

Thirukural : Kuripparithal - 7

முகத்தி்ன் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

மு.வ உரை உரை:
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

கலைஞர் உரை:
உள்ளத்தி்ல் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்தி்க் கொண்டு வெளியிடுவதி்ல் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் மனத்தால் விரும்பினாலும் வெறுத்தாலும் அதை வெளிக்காட்டுவதி்ல் முந்தி் நிற்கும் முகத்தைக் காட்டிலும் அறிவு மிக்கது வேறு உண்டோ?

Explanation:
Is there anything so full of knowledge as the face ? (No.) it precedes the mind, whether (the latter is) pleased or vexed.

Thought for Today

"Whenever the people are well-informed, they can be trusted with their own government."
- Thomas Jefferson

A Thought for Today

"And so I wait. I wait for time to heal the pain and raise me to my feet once again -- so that I can start a new path, my own path, the one that will make me whole again."
- Jack Canfield

Thought for Today

"Just as no one can be forced into belief, so no one can be forced into unbelief."
- Sigmund Freud

Thirukural : Kuripparithal - 6

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

மு.வ உரை உரை:
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

கலைஞர் உரை:
கண்ணாடி, தனக்கு உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மன்தி்ல் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.

Explanation:
As the mirror reflects what is near so does the face show what is uppermost in the mind.

Thirukural : Kuripparithal - 5

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.

மு.வ உரை உரை:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.

கலைஞர் உரை:
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தி்ல் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?

Explanation:
Of what use are the eyes amongst one's members, if they cannot by their own indications dive those of another ?

A Thought for Today

"The way to get started is to quit talking and begin doing. "

- Walt Disney

Thought for Today

"Risk comes from not knowing what you're doing."
- Warren Buffett

Thirukural : Kuripparithal - 4

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.

மு.வ உரை உரை:
ஒருவன் மனதி்ல் கருதி்யதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.

கலைஞர் உரை:
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தி்ல் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.

Explanation:
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).

A Thought for Today

"Don't get the impression that you arouse my anger. You see, one can only be angry with those he respects."
- Richard Nixon

A Thought for Today

"A sense of duty is useful in work but offensive in personal relations. People wish to be liked, not to be endured with patient resignation."
- Bertrand Russell

Thirukural : Kuripparithal - 3

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

மு.வ உரை உரை:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் தி்றம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Explanation:
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.

Thought for Today

"If we call ourselves children of God, then others are also children of God."
- Sri Chinmoy

Thirukural : Kuripparithal - 2

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

மு.வ உரை உரை:
ஐயப்படாமல் மனத்தி்ல் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவன் மனத்தி்ல் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி் தெய்வத்தி்ற்கே உண்டு என்று கூறினால், அந்தத் தி்றமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்தி்ற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்தி்ற்குச் சமமாக மதி்க்க வேண்டும்.

Explanation:
He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).

A Thought for Today

"Muddy water is best cleared by leaving it alone."
- Alan Watts

Thought for Today

"Humor must not professedly teach and it must not professedly preach, but it must do both if it would live forever."
- Mark Twain

Thirukural : Kuripparithal - 1

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

மு.வ உரை உரை:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதி்ய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்தி்ற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

கலைஞர் உரை:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்தி்ற்கே அணியாவான்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

Explanation:
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

A Thought for Today

"The best thinking has been done in solitude. The worst has been done in turmoil."
- Thomas A Edison

Thought for Today

"Write it on your heart that every day is the best day in the year."
- Ralph Waldo Emerson

Thirukural : Avaiyarithal - 10

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

மு.வ உரை உரை:
தன் இனத்தார் அல்லாதவரின் கூட்டத்தி்ல் முன் ஒரு பொருளைப்பற்றி பேசுதல், தூய்மையில்லாத முற்றத்தி்ல் சிந்தி்ய அமிழ்தம் போன்றது.

கலைஞர் உரை:
அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தி்ல் சிந்தி்டும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்குச் சமம் அற்றவர் கூடியுள்ள அவையில் எதையும் பேச வேண்டா; பேசினால் அப்பேச்சு சாக்கடையுள் கொட்டிய அமிழ்தம் போல ஆகும்.

Explanation:
To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the ground.

A Thougjt for Today

"Medicine heals doubts as well as diseases."
- Karl Marx

Thought for Today


Patience is also a form of action.
-Auguste Rodin, sculptor (1840-1917)

Thought for Today

"He is happiest, be he king or peasant, who finds peace in his home."
- Johann Wolfgang von Goethe

Thirukural : Avaiyarithal - 9

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

மு.வ உரை உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதி்ல் பதி்யுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தி்ல் மறந்தும் பேசக் கூடாது.

கலைஞர் உரை:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தி்ல் பதி்யும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.

சாலமன் பாப்பையா உரை:
நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் தி்றம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் தி்றம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

Explanation:
Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low.

A Thought for Today

"The only limit to our realization of tomorrow will be our doubts of today."
- Franklin D Roosevelt

Thought for Today

"To raise new questions, new possibilities, to regard old problems from a new angle, requires creative imagination and marks real advance in science."
- Albert Einstein

Thirukural : Avaiyarithal - 8

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தி்யுள் நீர்சொரிந் தற்று.

மு.வ உரை உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தி்யில் நீரைச் சொரிந்தாற் போன்றது.

கலைஞர் உரை:
உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தி்யில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் தி்றம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தி்யில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.

Explanation:
Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves).

A Thought for Today

"It all depends on how we look at things, and not how they are in themselves."
- Carl Jung

Thought for Today

"Battles are won by slaughter and maneuver. The greater the general, the more he contributes in maneuver, the less he demands in slaughter."
- Winston Churchill

Thirukural : Avaiyarithal - 7

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

மு.வ உரை உரை:
குற்றமறச்சொற்களை ஆராயவதி்ல் வ ல்ல அறிஞர்களிடத்தி்ல் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

கலைஞர் உரை:
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்தி்றம் அனைவருக்கும் விளங்கும்.

Explanation:
The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words.

A Thought for Today

"A casual stroll through the lunatic asylum shows that faith does not prove anything."
- Friedrich Nietzsche

Thirukural : Avaiyarithal - 6

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

மு.வ உரை உரை:
விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலைத் தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

கலைஞர் உரை:
அறிவுத்தி்றனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்பொருள்களைக் கேட்டு உணரும் தி்றம் மிக்கவர்முன்னே ஆற்றல்மிக்க பேச்சாளன் சொல்லால் சிறுமைப்படுவது மேலான நெறியிலிருந்து நிலைதவறி விழுவதைப் போல ஆகும்.

Explanation:
(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue).

Thought for Today

"Joy in looking and comprehending is nature's most beautiful gift."
- Albert Einstein

A Thought for Today

"The heart will break, but broken live on."
- Lord Byron

Thirukural : Avaiyarithal - 5

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

மு.வ உரை உரை:
அறிவு மிகுந்தவரிடையே முந்தி்ச் சென்று பேசாத அடக்கம் ஒருவனுக்கு நன்மை என்று சொல்லப்பட்டவை எல்லாவற்றிலும நல்லது.

கலைஞர் உரை:
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தி்ல் முந்தி்ரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அறிவினுக்கும் மேலான அறிஞர் கூடியுள்ள அவையில் அவர் பேசுவதற்கு முன்பாகப் பேசாமல் அடங்கி இருப்பது, நல்லது என்று சொல்லப்பட்ட குணங்களுள் எல்லாம் நல்லது.

Explanation:
The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualities.

A Thought for Today

"The pendulum of the mind oscillates between sense and nonsense, not between right and wrong."
- Carl Jung

Favourite quote

"Knowing your own darkness is the best method for dealing with the darknesses of other people."
- Carl Jung

Thirukural : Avaiyarithal - 4

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

மு.வ உரை உரை:
அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

கலைஞர் உரை:அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக.

Explanation:
Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of fools.

Thought for Today

"It is requisite for the relaxation of the mind that we make use, from time to time, of playful deeds and jokes."
- Thomas Aquinas

A Thought for Today

"To see the right and not to do it is cowardice."
- Confucius

A Thought for Today

"You'll never get ahead of anyone as long as you try to get even with him."
- Lou Holtz

A Thought for Today

"We are masters of the unsaid words, but slaves of those we let slip out."
- Winston Churchill

Thought for Today

"Honesty is the first chapter in the book of wisdom."
- Thomas Jefferson

Thirukural : Avaiyarithal - 3

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

மு.வ உரை உரை:
அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.

கலைஞர் உரை:
அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் தி்றமையும் கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
தம் பேச்சைக் கேட்கும் சபையின் இயல்பை அறியாமல் தொடர்ந்து பேசத் தொடங்குபவர், சொற்களின் கூறம் தெரியாதவர்; சொல்லும் தி்றமும் இல்லாதவர்.

Explanation:
Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning).

A Thought for Today

It came to me that reform should begin at home, and since that day I have not had time to remake the world.
-Will Durant, historian (1885-1981)

A Thought for Today

"Self-worth comes from one thing - thinking that you are worthy."
- Wayne Dyer

Thought for Today

"Man, the living creature, the creating individual, is always more important than any established style or system."
- Bruce Lee

Thirukural : Avaiyarithal - 2

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

மு.வ உரை உரை:
சொற்களின் தன்மையை ஆராய்ந்த நன்மை உடையவர், அவையின் செவ்வியை ஆராய்ந்து நன்றாக உணர்ந்து சொல்ல வேண்டும்.

கலைஞர் உரை:
சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா:
மூவகைச் சொற்களும் பொருள் தரும் போக்கை நன்கு தெரிந்து கொண்ட நல்லறிவு படைத்தவர், சொற்குற்றமும் பொருட்குற்றமும் வந்துவிடாமல், கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து பேசுக.

Explanation:
Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court).

Thought for Today

"It is amazing what you can accomplish if you do not care who gets the credit."
- Harry S Truman

Thirukural : Avaiyarithal - 1

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

மு.வ உரை உரை:
சொற்களின் தொகுதி் அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தி்ன் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

கலைஞர் உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் - தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல்; ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது; பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர், தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை, சமமானவர் அவை, குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் தி்றத்தை ஆராய்ந்து பேசுக.

Explanation:
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

A Thought for Today

"Anything you're good at contributes to happiness."
- Bertrand Russell

Thirukural : Avaiyarithal - 1

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

மு.வ உரை உரை:
சொற்களின் தொகுதி் அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தி்ன் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

கலைஞர் உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
செஞ்சொல் பொருள் வெளிப்படையான சொல் - தாய் இலக்கணச் சொல்.(வெளிப்படையான பொருளை விட்டுவிட்டு வேறொன்றை உணர்த்தும் சொல்; ஊர் தூங்குகிறது) குறிப்புச் சொல் வெளிப்படையான பொருளை விட்டுவிட்டுக் குறிப்பால் வேறொரு பொருள் தருவது; பொன்காக்கும் பூதம் அவன்) ஆகிய சொற்களின் கூட்டத்தை அறிந்த மனத்தூய்மையை உடையவர், தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை, சமமானவர் அவை, குறைவான கல்வியாளர் அவை என அவற்றின் தரம் அறிந்து அங்கே பேசும் தி்றத்தை ஆராய்ந்து பேசுக.

Explanation:
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).

Thought for Today

"First appearance deceives many."
- Ovid

Thirukural : Avaianjaamai - 10

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

மு.வ உரை உரை:அவைக்களத்தி்ற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தி்ல்) பதி்யுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.

கலைஞர் உரை:
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.

Explanation:
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

A Thought for Today

"If you go looking for a friend, you're going to find they're very scarce. If you go out to be a friend, you'll find them everywhere."
- Zig Ziglar

Thought for Today

"Discipline is the soul of an army. It makes small numbers formidable; procures success to the weak, and esteem to all."
- George Washington

A Thought for Today

"Vitality shows in not only the ability to persist but the ability to start over."
- F Scott Fitzgerald

A Thought for Today

"Awareness is the power that is concealed within the present moment. … The ultimate purpose of human existence, which is to say, your purpose, is to bring that power into this world."
- Eckhart Tolle

Thirukural : Avaianjaamai - 9

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

மு.வ உரை உரை:
நூல்களைக் கற்றிந்த போதி்லும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.

கலைஞர் உரை:
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதி்லும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.

Explanation:
They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate.

Thought for Today

"The mind can go in a thousand directions, but on this beautiful path, I walk in peace. With each step, the wind blows. With each step, a flower blooms."
- Thich Nhat Hanh

A Thought for Today

"A creative man is motivated by the desire to achieve, not by the desire to beat others."
- Ayn Rand

Thirukural : Avaianjaamai - 8

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

மு.வ உரை உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதி்ல் பதி்யுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

கலைஞர் உரை:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தி்ல் பதி்யும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

Explanation:
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.

Thought for Today

"It's not that I'm so smart, it's just that I stay with problems longer."
- Albert Einstein