For this Day:

;

Thirukural : Kuripparithal - 1

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.

மு.வ உரை உரை:
ஓருவர் சொல்லாமலே அவறுடைய முகத்தை நோக்கி அவர் கருதி்ய குறிப்பை அறிகின்றவன் எப்போதும் உலகத்தி்ற்க்கு ஓர் அணிகலன் ஆவான்.

கலைஞர் உரை:
ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார் என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்தி்ற்கே அணியாவான்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் வாயால் சொல்லாமல் இருக்க, அவனுடைய முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவன் மனக்கருத்தை அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் வளைக்கப்பட்ட இவ்வுலகத்தவர்க்கு ஆபரணம் போன்றவன்.

Explanation:
The minister who by looking (at the king) understands his mind without being told (of it), will be a perpetual ornament to the world which is surrounded by a never-drying sea.

No comments: