For this Day:

;

Thought for Today

"Rascals are always sociable, more's the pity! and the chief sign that a man has any nobility in his character is the little pleasure he takes in others' company."
- Arthur Schopenhauer

Thirukural : Neethaar Perumai - 5

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

மு.வ உரை உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.

Explanation:
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses.

A Thought for Today

"If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader."
- John Quincy Adams

Thirukural : Neethaar Perumai - 4

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

மு.வ உரை உரை:
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

கலைஞர் உரை:
உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்.

சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி,  நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

Explanation:
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven.

A Thought for Today

"Please don't ask me to do that which I've just said I'm not going to do, because you're burning up time."
- George H W Bush

Thirukural : Neethaar Perumai - 3

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

மு.வ உரை உரை:
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தி்ல் உயர்ந்தது.

கலைஞர் உரை:
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.

Explanation:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).

Thought for Today

"You can employ men and hire hands to work for you, but you will have to win their hearts to have them work with you." 
- William J. H. Boetcker

Leadership Quotes


"The task of Leadership is not to put greatness into people but to elicit it. For the greatness is there already."
           John Buchan

 

"If I have seen farther than others, it is because I was standing on the shoulders of giants."
           Isaac Newton

 

"In a world of change, the learners shall inherit the earth, while the learned shall find themselves perfectly suited for a world that no longer exists."
           Eric Hoffer

 

"Some disappointment is always the price of brave dreaming."
           Robin Sharma

A Thought for Today

"Put two or three men in positions of conflicting authority. This will force them to work at loggerheads, allowing you to be the ultimate arbiter."
- Franklin D Roosevelt

Thirukural : Neethaar Perumal - 2

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

மு.வ உரை உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

கலைஞர் உரை:
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

Explanation:
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.

A Thought for Today

"Either you run the day or the day runs you."
- Jim Rohn

Thought for Today

There comes a time in a man's life when to get where he has to -- if there are no doors or windows -- he walks through a wall. 
-Bernard Malamud, novelist and short-story writer (1914-1986) 

Thirukural : Neethaar Perumai - 1

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

மு.வ உரை உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

கலைஞர் உரை:
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

சாலமன் பாப்பையா உரை:
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

Explanation:
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

Thought for Today

"Who is rich?
He that is content.
Who is that?
Nobody."
-Benjamin Franklin

Thirukural : Aran Valiyuruththal - 10

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

மு.வ உரை உரை:
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

கலைஞர் உரை:
பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

Explanation:
That is virtue which each ought to do, and that is vice which each should shun.

Thought for Today

"It all depends on how we look at things, and not how they are in themselves."
- Carl Jung

A Thought for Today

"We do not hate as long as we still attach a lesser value, but only when we attach an equal or a greater value."
- Friedrich Nietzsche

Merry Christmas


Thought for Today

"It is not because men's desires are strong that they act ill; it is because their consciences are weak."
- John Stuart Mill

Thirukural : Aran Valiyuruththal - 8

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

மு.வ உரை உரை:
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

கலைஞர் உரை:
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தை செய்யாது விட்ட நாள் இல்லை என்று சொல்லும்படி ஒருவன் அறம் செய்தால், அச்செயலே, அவன் தி்ரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்.

Explanation:
If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

My favourite quote

"Every great movement must experience three stages: ridicule, discussion, adoption."
- John Stuart Mill

Thought for Today

"Half the world is composed of people who have something to say and can't, and the other half who have nothing to say and keep on saying it."
- Robert Frost

My favourite quote

"Never be bullied into silence. Never allow yourself to be made a victim. Accept no one's definition of your life; define yourself."
- Robert Frost

Thirukural : Aran Valiyuruththal - 7

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

மு.வ உரை உரை:
பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறததின் பயன் இஃது என்று கூறவேண்டா.

கலைஞர் உரை:
அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி் மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்தி்க் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலிம் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

Explanation:
The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

A Thought for Today

"And all people live, Not by reason of any care they have for themselves, But by the love for them that is in other people."
- Leo Tolstoy

Thought for Today

"Employ your time in improving yourself by other men's writings, so that you shall gain easily what others have labored hard for."
- Socrates

Thirukural : Aran Valiyuruththal - 6

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

மு.வ உரை உரை:
இளைஞராக உள்ளவர், பிற்காலத்தி்ல் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தி்ல் அழியா துணையாகும்.

கலைஞர் உரை:
பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

Explanation:
Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

A Thought for Today

"You have to learn the rules of the game. And then you have to play better than anyone else."
-Albert Einstein

Thirukural : Aran Valiyuruththal - 5

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

மு.வ உரை உரை:
பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.

கலைஞர் உரை:
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தி்ல் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம.

்Explanation:
That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

Thought for Today

"It's not what you've got, it's what you use that makes a difference."
- Zig Ziglar

A Thought for Today

"Condemn none: if you can stretch out a helping hand, do so. If you cannot, fold your hands, bless your brothers, and let them go their own way."
- Swami Vivekananda

Thirukural : Aran Valiyuruththal - 4

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

மு.வ உரை உரை:
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

கலைஞர் உரை:
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

Explanation:
Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

Thought for Totay

Love truth, but pardon error. 
-Voltaire, philosopher and writer (1694-1778) 

Thought for Today

"Trying to predict the future is like trying to drive down a country road at night with no lights while looking out the back window."
- Peter Drucker

A Thought for Today

"Quality is not an act, it is a habit."
- Aristotle

Thirukural : Aran Valiyuruththal - 3

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

மு.வ உரை உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்க.

Explanation:
As much as possible, in every way, incessantly practise virtue.

Thought for Today

"Beware the barrenness of a busy life."
- Socrates

A Thought for Today

"An absolute can only be given in an intuition, while all the rest has to do with analysis."
- Henri Bergson

Thirukural : Aran Valiyuruththal - 2

அறத்தி்னூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

மு.வ உரை உரை:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

கலைஞர் உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதி்யும் இல்லை.

Explanation:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

Thought for Today

"Take no thought of who is right or wrong or who is better than. Be not for or against."
- Bruce Lee

A Thought for Today

"My mother said I must always be intolerant of ignorance but understanding of illiteracy. That some people, unable to go to school, were more educated and more intelligent than college professors."
- Maya Angelou

Thirukural : Aran Valiyuruththal - 1

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தி்னூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

மு.வ உரை உரை:
அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?

கலைஞர் உரை:
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

சாலமன் பாப்பையா உரை:
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

Explanation:
Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

Thought for Today

"It is easier to do a job right than to explain why you didn't."
- Martin Van Buren

Thirukural : Uuzh - 10

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

மு.வ உரை உரை:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

கலைஞர் உரை:
இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்தி்ட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?

சாலமன் பாப்பையா உரை:
விதி்யை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்; ஆகவே விதி்யை விட வேறு எவை வலிமையானவை?

Explanation:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).

Thirukural : Uuzh - 9

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

மு.வ உரை உரை:
நல்வினை விளையும் போது நல்லவை எனக் கருதி் மகிழ்கின்றனர், தீவினை விளையும் போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ.

கலைஞர் உரை:
நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?

சாலமன் பாப்பையா உரை:
நல்லது நடக்கும்போது மட்டும் நல்லது என அனுபவிப்பவர், தீயது நடக்கும்போது மட்டும் துன்பப்படுவது ஏன்?

Explanation:
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?

My favourite quote

"I am the captain of my soul."
- Nelson Mandela

Thirukural : Uuzh - 8

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

மு.வ உரை உரை:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

கலைஞர் உரை:
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதி்யினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்.

சாலமன் பாப்பையா உரை:
துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி், ஏழைகளைத் தடுத்தி்ருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்.

Explanation:
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.

Nelson Mandela quote

"Quitting is leading too."
- Nelson Mandela

Nelson Mandela

"(...) when a man is denied the right to live the life he believes in, he has no choice but to become an outlaw."
- Nelson Mandela

Thirukural : Uuzh - 7

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.

மு.வ உரை உரை:
ஊழ் ஏற்ப்படுத்தி்ய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கானப் பொருளைச் சேர்த்தவருக்கும் அவற்றை நுகர முடியாது.

கலைஞர் உரை:
வகுத்து முறைப்படுத்தி்ய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:கோடிப்பொருள் சேர்ந்தி்ருந்தாலும் , இறைவன் விதி்த்த விதி்ப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்.

Explanation:
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).

My favourite quote

"There is no passion to be found playing small - in settling for a life that is less than the one you are capable of living."
- Nelson Mandela

Favourite quote from Nelson Mandela

"We ask ourselves, who am I to be brilliant, gorgeous, handsome, talented and fabulous? Actually, who are you not to be?"
- Nelson Mandela

Thirukural : Uuzh - 6

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

மு.வ உரை உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்தி்க்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

கலைஞர் உரை:
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை காத்தாலும் நமக்கு விதி் இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி் இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

Explanation:
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

Nelson Mandela

"One of the things I learned when I was negotiating was that until I changed myself, I could not change others."
- Nelson Mandela

My favourite quote

"Where you stand depends on where you sit."
- Nelson Mandela

Thirukural : Uuzh - 5

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

மு.வ உரை உரை:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

கலைஞர் உரை:
நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி் குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி் வருமானால் லாபம் உண்டாகும்.

Explanation:
Let In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).

Nelson Mandela Quotes

"After climbing a great hill, one only finds that there are many more hills to climb."
- Nelson Mandela

My favourite quote

"Resentment is like drinking poison and then hoping it will kill your enemies."
- Nelson Mandela

Nelson Mandela Quotes

"If the United States of America or Britain is having elections, they don't ask for observers from Africa or from Asia. But when we have elections, they want observers."
- Nelson Mandela

Thirukural : Uuzh - 4

இருவேறு உலகத்து இயற்கை தி்ருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

மு.வ உரை உரை:
உலகத்தி்ன் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.

கலைஞர் உரை:
உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதி்யும், அறிஞரை ஆக்கும் விதி்யும் வேறு வேறாம்.

Explanation:
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.

My favourite quote : Nelson Mandela

"Appearances matter and remember to smile."
- Nelson Mandela

My favourite quote - Mandela

"If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his language, that goes to his heart."
- Nelson Mandela

Thirukural : Uuzh - 3

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.

மு.வ உரை உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

கலைஞர் உரை:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதி்லும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
பேதை ஆக்குவதற்கு உரிய விதி் நமக்கு இருந்தால், நுட்பமான கருத்துக்களை உடைய பல நூல்களைக் கற்றாலும் இயல்பான அறிவே இருக்கும். ( அறிவு விரிவ பெறாது).

Explanation:
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.

Thirukural : Uuzh - 2

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

மு.வ உரை உரை:
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.

கலைஞர் உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி் இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி் இருந்தால் அறிவு விரிவு பெறும்.

Explanation:
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.

Quote from Nelson Mandela

"It always seems impossible until it's done."
- Nelson Mandela

Favourite quote : Nelson Mandela

"There is nothing like returning to a place that remains unchanged to find the ways in which you yourself have altered."
- Nelson Mandela

My favourite quote

"Lead from the back and let others believe they are in front"
- Nelson Mandela

Favourite quote : Nelson Mandela

"A good head and good heart are always a formidable combination. But when you add to that a literate tongue or pen, then you have something very special."
- Nelson Mandela

Thirukural : Uuzh - 1

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.

மு.வ உரை உரை:
கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

கலைஞர் உரை:
ஆக்கத்தி்ற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும். ஊக்கத்தி்ன் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்.

சாலமன் பாப்பையா உரை:
பணம் சேர்வதற்கு உரிய விதி் நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி் இருந்தால் சோம்பல் உண்டாகும்.

Explanation:
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.

Quote from Nelson Mandela

"Education is the most powerful weapon which you can use to change the world."
- Nelson Mandela

R.I.P. Nelson Mandela

If you want to make peace with your enemy, you have to work with your enemy. Then he becomes your partner.
-Nelson Mandela, activist, South African president, Nobel Peace Prize (1918-2013)

Thought for Today

"Real learning comes about when the competitive spirit has ceased."
- Jiddu Krishnamurti

My favourite quote

"The family is one of nature's masterpieces."
- George Santayana

Thirukural : Mannarai Sernthozudhal - 10

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

மு.வ உரை உரை:
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதி்த் தகுதி் அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.

கலைஞர் உரை:
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தி்னாலேயே தகாத செயல்களைச் செய்தி்ட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதி்யையே தரும்.

Explanation:
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.

My favourite quote

"Some days you're the bug, some days you're the windshield."
- Steven Tyler

A Thought for Today

"If it's a penny for your thoughts and you put in your two cents worth, then someone, somewhere is making a penny."
- Steven Wright

Thirukural : Mannarai Sernthozudhal - 9

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.

மு.வ உரை உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால் மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

Explanation:
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) We are esteemed by the king.

Thought for Today

"The real measure of your wealth is how much you'd be worth if you lost all your money."
-Anonymous

A Thought for Today

"There are two educations. One should teach us how to make a living and the other how to live."
- John Adams

Thought for Today

"I never attempt to make money on the stock market. I buy on the assumption that they could close the market the next day and not reopen it for five years."
- Warren Buffett

Thirukural : Mannarai Sernthozudhal - 8

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

மு.வ உரை உரை:
(அரசரை) எமக்கு இளையவர், எமக்கு இன்ன முறை உடையவர் என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

கலைஞர் உரை:
எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருடன் பழகும்போது இவர் என்னைக் காட்டிலும் வயதி்ல் சிறியவர்; இவர் உறவால் எனக்கு இன்ன முறை வேண்டும் என்று எண்ணாமல், ஆட்சியாளர் இருக்கும் பதவியை எண்ணி அவருடன் பழகுக.

Explanation:
Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, He is our junior (in age) and connected with our family!

A Thought for Today

"Every man is guilty of all the good he did not do."
- Voltaire

Thought for Today

"One may sometimes tell a lie, but the grimace that accompanies it tells the truth."
- Friedrich Nietzsche

Thirukural : Mannarai Sernthozudhal - 7

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

மு.வ உரை உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதி்லும் சொல்லாமல் விட வேண்டும்.

கலைஞர் உரை:
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்தி்களை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்தி்களை எப்போதும் சொல்லாது விடுக.

Explanation:
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

A Thought for Today

"Mastering others is strength. Mastering yourself is true power."
- Lao Tzu

Thought for Today

"I play to win, whether during practice or a real game. And I will not let anything get in the way of me and my competitive enthusiasm to win."
- Michael Jordan

Thirukural : Mannarai Sernthozudhal - 6

குறிப்பறிந்து காலங் கருதி் வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

மு.வ உரை உரை:
அரசருடையக் குறிப்பை அறிந்து தக்கக் காலத்தை எதி்ர்நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறுச் சொல்ல வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு எதையேனும் சொல்ல விரும்பினால், ஆட்சியாளரின் அப்போதைய மனநிலையை அறிந்து தான் சொல்லக் கருதி்ய செய்தி்க்கு ஏற்ற சமயத்தையும் எண்ணி ஆட்சியாளருக்கு வெறுப்புத் தராததும், வேண்டியதும் ஆகிய காரியத்தை அவர் விரும்புமாறு சொல்லுக.

Explanation:
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.

A Thought for Today

"What is deservedly suffered must be borne with calmness, but when the pain is unmerited, the grief is resistless."
- Ovid

Thought for Today

"Nothing has such power to broaden the mind as the ability to investigate systematically and truly all that comes under thy observation in life."
- Marcus Aurelius