For this Day:

;

A Thought for Today

"It's always funny until someone gets hurt. Then it's just hilarious."
- Bill Hicks

Thought for Today

"When you keep company with an eminent master, his qualities will automatically influence you. "
- Padmasambhava

A Thought for Today

"The chains of habit are too weak to be felt until they are too strong to be broken."
- Samuel Johnson

Thirukural : Otrraadal - 1

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

மு.வ உரை உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதி்நூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும்.

கலைஞர் உரை:
நேர்மையும் தி்றனும் கொண்ட ஒற்றரும், நீதி்யுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒற்று, புகழும் தெளிவும் உள்ள நீதி்நூல் இவ்விரண்டும் ஆட்சியாளரின் இரு கண் என்று அறிக.

Explanation:
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.

Thirukural : Madiyinmai - 10

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

மு.வ உரை உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவியப் பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான்.

கலைஞர் உரை:
சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும், சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.

Explanation:
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.

Thought for Today

"Put your heart, mind, and soul into even your smallest acts. This is the secret of success."
- Swami Sivananda

Thought for Today

"There are two ways of being happy: We must either diminish our wants or augment our means - either may do - the result is the same and it is for each man to decide for himself and to do that which happens to be easier."
- Benjamin Franklin

Thirukural : Madiyinmai - 9

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

மு.வ உரை உரை:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

கலைஞர் உரை:
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

Explanation:
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.

A Thought for Today

Ambition is like hunger; it obeys no law but its appetite. 
-Josh Billings, columnist and humorist (1818-1885) 

Thirukural : Madiyinmai - 8

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு  அடிமை புகுத்தி விடும்.

மு.வ உரை உரை:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால் அஃது அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

கலைஞர் உரை:
பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பத்தானுக்குச் சோம்பல் சொந்தமானால் அது அவனை அவனுடைய பகைவரிடத்தில் அடிமை ஆக்கிவிடும்.

Explanation:
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.

Thirukural : Madiyinmai - 7

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

மு.வ உரை உரை:
சோம்பலை விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

கலைஞர் உரை:
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச் சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

Explanation:
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.

Thirukural : Madiyinmai - 6

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

மு.வ உரை உரை:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவுத் தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

கலைஞர் உரை:தகுதி்யுடையவரின் அன்புக்குப் பாத்தி்ரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலம் முழுவதும் ஆண்ட மன்னர்களின் செல்வம் எல்லாம் சேர்ந்தி்ருந்தாலும், சோம்பலை உடையவர் நல்ல பயனை அடைவது அரிது.

Explanation:
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.

A Thought for Today

Walking is also an ambulation of mind. 
-Gretel Ehrlich, novelist, poet, and essayist (b. 1946) 

Thought for Today

"There is no greater agony than bearing an untold story inside you."
- Maya Angelou

A Thought for Today

"Wherever you go, go with all your heart."
- Confucius

Thirukural : Madiyinmai - 5

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

மு.வ உரை உரை:
காலம் நீட்டித்தல், சோம்பல், மறதி், அளவு மீறியத் தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

கலைஞர் உரை:
காலம் தாழ்த்துதல், மறதி், சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!.

சாலமன் பாப்பையா உரை:
காலம் தாழ்த்தி் செய்வது, மறதி், சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.

Explanation:
Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.

Thirukural : Madiyinmai - 4

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

மு.வ உரை உரை:
சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

கலைஞர் உரை:
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

Explanation:
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.

Thirukural : Madiyinmai - 3

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

மு.வ உரை உரை:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவவில்லாதவன் பிறந்த குடி அவனுக்கு முன் அழிந்துவிடும்.

கலைஞர் உரை:
அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை:
விட்டுவிட வேண்டிய சோம்பலைத் தனக்குள்ளே கொண்டு வாழும் அறிவற்றவன் பிறந்த குடும்பம் அவனுக்கும் முன்பே அழிந்துவிடும்.

Explanation:
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.

See no evil, Hear no evil, Speak no evil. - Japanese pictorial maxim (the Three Wise Monkeys)





See no evil, Hear no evil, Speak no evil.
- Japanese pictorial maxim (the Three Wise Monkeys)


Thought for Today

It has been said that a pretty face is a passport. But it's not, it's a visa, and it runs out fast. 
-Julie Burchill, writer and journalist (b. 1959) 

A Thought for Today

"Only buy something that you'd be perfectly happy to hold if the market shut down for 10 years."
– Warren Buffett

A Thought for Today

"I am up and about when I am ill, and in the most appalling weather. I am on horseback when other men would be flat out on their beds, complaining. We are made for action, and activity is the sovereign remedy for all physical ills."
- Frederick The Great

Thirukural : Madiyinmai - 2

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

மு.வ உரை உரை:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.

கலைஞர் உரை:
குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

Explanation:
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.

A Thought for Today

There is a foolish corner in the brain of the wisest man.
 -Aristotle, philosopher (384-322 BCE)

Thought for Today

"All children are artists. The problem is how to remain an artist once he grows up."
- Pablo Picasso

A Thought for Today

"No pessimist ever discovered the secret of the stars, or sailed to an uncharted land, or opened a new doorway for the human spirit."
- Helen Keller

Thirukural : Madiyinmai - 1

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

மு.வ உரை உரை:
ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

கலைஞர் உரை:
பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

Explanation:
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.

Thirukural : Aalvinaiyudamai - 10

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

மு.வ உரை உரை:
சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர்,(செயலுக்கு இடையூறாக வரும்)ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும்.

கலைஞர் உரை:
ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர், விதியையும் புறமுதுகு காட்டக் காண்பர்.

Explanation:
They who labour on, without fear and without fainting will see even fate (put) behind their back.

Thought for Today

"By three methods we may learn wisdom: First, by reflection, which is noblest; Second, by imitation, which is easiest; and third by experience, which is the bitterest."
- Confucius

A Thought for Today

"Instead of comparing our lot with that of those who are more fortunate than we are, we should compare it with the lot of the great majority of our fellow men. It then appears that we are among the privileged."
- Helen Keller

Thought for Today

"By three methods we may learn wisdom: First, by reflection, which is noblest; Second, by imitation, which is easiest; and third by experience, which is the bitterest."
- Confucius

A Thought for Today


We are like tenant farmers chopping down the fence around our house for fuel when we should be using Nature's inexhaustible sources of energy -- sun, wind and tide. ... I'd put my money on the sun and solar energy. What a source of power! I hope we don't have to wait until oil and coal run out before we tackle that. 
-Thomas Edison, inventor (1847-1931) 

Thirukural : Aalvinaiyudamai - 9

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

மு.வ உரை உரை:
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்தி்ய வருத்தத்தி்ன் கூலியையாவது கொடுக்கும்.

கலைஞர் உரை:
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
விதி் நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

Explanation:
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.

Thought for Today

"When I hear music, I fear no danger. I am invulnerable. I see no foe. I am related to the earliest times, and to the latest."
- Henry David Thoreau

A Thought for Today

"The best thing one can do when it's raining is to let it rain."
- Henry Wadsworth Longfellow

Thirukural : Aalvinaiyudamai - 8

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

மு.வ உரை உரை:
நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதி்ருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதி்ருத்தலே பழி.

கலைஞர் உரை:
விதி்ப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

Explanation:
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.

Article: Overwhelmed And Stressed Out? Try The 24/6 Trick

http://www.forbes.com/sites/learnvest/2013/03/15/overwhelmed-and-stressed-out-try-the-246-trick/

Article: How To Be More Interesting (In 10 Simple Steps)

http://www.forbes.com/sites/jessicahagy/2011/11/30/how-to-be-interesting/

Thirukural : Aalvinaiyudamai - 7

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

மு.வ உரை உரை:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலோ திருமகள் வாழ்கின்றாள்.

கலைஞர் உரை:
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் தி்ருமகள் தங்குவாள் என்பர்.

Explanation:
They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious.

Thirukural : Aalvinaiyudamai - 6

முயற்சி தி்ருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி் விடும்.

மு.வ உரை உரை:
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதி்ருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

கலைஞர் உரை:
முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

Explanation:
Labour, hard work will produce wealth; idleness will bring poverty.

Thirukural : Aalvinaiyudamai - 5

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.

மு.வ உரை உரை:
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

கலைஞர் உரை:
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.

சாலமன் பாப்பையா உரை:
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தி்ன் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.

Explanation:
He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.

Thought for Today

"Live with passion!"
- Tony Robbins

A Thought for Today

"A man should never neglect his family for business."
- Walt Disney

Thirukural : Aalvinaiyudamai - 4

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை  வாளாண்மை போலக் கெடும்.

மு.வ உரை உரை:
முயற்சி இல்லாதவன் உதவிசெய்பவனாக இருத்தல், பேடி தன் கையில் வாளை எடுத்தும் ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.

கலைஞர் உரை:
ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி இல்லாதவன், பிறர்க்கு உதவுவேன் என்பது, படை கண்டு நடுங்கும் பேடி, களத்துள் நின்று தன் கை வாளைச் சுழற்றுதல் போல ஒரு பயனும் இல்லாமல் போகும்.

Explanation:
The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who has a sword in its hand.

Thought for Today

"When you are offended at any man's fault, turn to yourself and study your own failings. Then you will forget your anger."
- Epictetus

A Thought for Today

"A good traveler has no fixed plans, and is not intent on arriving."
- Lao Tzu

Thirukural : Aalvinaiyudamai - 3

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.

மு.வ உரை உரை:
பிறர்க்கு உதவிசெய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்தி்ருக்கின்றது.

கலைஞர் உரை:
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தி்ல்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை, நிலைபெற்றிருக்கிறது.

Explanation:
The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.

Thirukural : Aalvinaiyudamai - 2

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

மு.வ உரை உரை:
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதி்ருத்தலை ஒழிக்க வேண்டும்.

கலைஞர் உரை:
எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

Explanation:
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work.

Thirukural : Aalvinaiyudamai - 1

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.

மு.வ உரை உரை:
இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.

கலைஞர் உரை:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.

Explanation:
Yield not to the feebleness which says, this is too difficult to be done; labour will give the greatness (of mind) which is necessary (to do it).

A Thought for Today

"As a man is said to have a right to his property, he may be equally said to have a property in his rights."
- James Madison

Thirukural : idukkanizhiyamai - 10

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

மு.வ உரை உரை:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதி்க்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

கலைஞர் உரை:
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி் கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதி்க்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

Explanation:
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.

A Thought for Today

"Each year one vicious habit discarded, in time might make the worst of us good."
- Benjamin Franklin

Thirukural : idukkanizhiyamai - 9

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.

மு.வ உரை உரை:
இன்பம் வந்தி்க் காலத்தி்ல் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தி்ல் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

கலைஞர் உரை:
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதி்க்கு இது எடுத்துக்காட்டு.

சாலமன் பாப்பையா உரை:
தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

Thought for Today

"Never say no when a client asks for something, even if it is the moon. You can always try, and anyhow there is plenty of time afterwards to explain that it was not possible."
- Richard Nixon

A Thought for Today

"Financial well-being is simply not thinking about money you haven't earned, to buy things you don't need, to impress people you don't like."
- Deepak Chopra

Thirukural : Idukkanazhiyaamai - 8

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

மு.வ உரை உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்தி்ருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.

கலைஞர் உரை:
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதி்ப்கொள்பவன் அந்தத் துன்பத்தி்னால் துவண்டு போவதி்ல்லை.<

சாலமன் பாப்பையா உரை:
உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

Explanation:
That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man).

Thought for Today

"Without a sense of caring, there can be no sense of community."
- Anthony J D Angelo

A Thought for Today

"Problems are the price of progress. Don't bring me anything but trouble. Good news weakens me."
- Charles Kettering

Thirukural : Idukkanazhiyaamai - 7

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

மு.வ உரை உரை:
மேலோர், உடம்பு துன்பத்தி்ற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்த போது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டர்.

கலைஞர் உரை:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
உடம்பு துன்பத்தி்ற்கு இடமாவதே என்று தெளிந்த மேன்மக்கள், உடம்பிற்கு வந்த துன்பத்தைப் துன்பமாக எண்ணி மனந் தளரமாட்டார்.

Explanation:
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.

Thirukural: Idukkanazhiyaamai - 6

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

மு.வ உரை உரை:
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

கலைஞர் உரை:
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்தி்ட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?

சாலமன் பாப்பையா உரை:
பணம் இருந்த காலத்தி்ல் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தி்ல் வரும் துன்பத்தி்னால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?

Explanation:
Will those men ever cry out in sorrow, we are destitute who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.

A Thought for Today

"Thinking is easy, acting is difficult, and to put one's thoughts into action is the most difficult thing in the world."
- Johann Wolfgang von Goethe

Thirukural : Idukkanizhiyamai - 5

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.

மு.வ உரை உரை:
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதி்லும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.

கலைஞர் உரை:
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

Explanation:
The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him, does not abandon (his purpose).

A Thought for Today

"Character, in great and little things, means carrying through what you feel able to do."
- Johann Wolfgang von Goethe

A Thought for Today

Errors like straws upon the surface flow: 
Who would search for pearls must dive below.
 -John Dryden, poet and dramatist (1631-1700) 

Thirukural : Idukkanazhiyaamai - 4

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

மு.வ உரை உரை:
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

கலைஞர் உரை:
தடங்கல் நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

Explanation:
Troubles will vanish (i.e., will be troubled) before the man who (struggles against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.

Thought for Today

"A house is not a home unless it contains food and fire for the mind as well as the body."
- Benjamin Franklin

A Thought for Today

'Worry' is a word that I don't allow myself to use.
- Dwight D Eisenhower

Thirukural : Idukkanazhiyaamai -3

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

மு.வ உரை உரை:
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்தி்க் கலங்காதவர் அந்தத் துன்பத்தி்ற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.

கலைஞர் உரை:
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தி்ல் ஆழ்த்தி் அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
வரும் துன்பத்தி்ற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்தி்ற்குத் துன்பம் தருவர்.

Explanation:
They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

Thirukural : Idikkanazhiyaamai - 2

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தி்ன் உள்ளக் கெடும்.

மு.வ உரை உரை:
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தி்னால் அத் துன்பத்தி்ன் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

கலைஞர் உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த  மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.

Explanation:
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.

Thought for Today


It is not so much our friends' help that helps us as the confident knowledge that they will help us.
-Epicurus, philosopher (c. 341-270 BCE)

A Thought for Today


'Wealth creation is the art of buying a rupee for 40 paise.'
– Annonymous

Thirukural : Idukkanazhiyaamai - 1

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

மு.வ உரை உரை:
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து் வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

கலைஞர் உரை:
சோதனைகளை எதி்ர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.

Explanation:
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.