அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
மு.வ உரை உரை:
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
கலைஞர் உரை:
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்தி்ட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
சாலமன் பாப்பையா உரை:
பணம் இருந்த காலத்தி்ல் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தி்ல் வரும் துன்பத்தி்னால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?
Explanation:
Will those men ever cry out in sorrow, we are destitute who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.
No comments:
Post a Comment