For this Day:

;

Thought for Today

Whenever anyone has offended me, I try to raise my soul so high that the offense cannot reach it.
-Rene Descartes, philosopher and mathematician (1596-1650)

Thirukural : iniyavai kooral - 9

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

மு.வ உரை உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

கலைஞர் உரை:
இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?

சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?

Explanation:
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

Thought for Today

"Words are like money ... it is the stamp of custom alone that gives them circulation or value. "
-William Hazlitt, essayist (1778-1830)

A Thought for Today

"There’s no shortage of remarkable ideas, what’s missing is the will to execute them."
-Seth Godin

Thought for Today

"Art flourishes where there is a sense of adventure."
- Alfred North Whitehead

Thirukural : iniyavai kooral - 7

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.

மு.வ உரை உரை:
பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

கலைஞர் உரை:
நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுககும்.

்Explanation:
That speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world).

A Thought for Today

The mind is the effect, not the cause.
-Daniel C. Dennett, philosopher (b. 1942)

Thought for Today

"Thank God men cannot fly, and lay waste the sky as well as the earth."
- Henry David Thoreau

Thirukural : iniyavai kooral - 6

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

மு.வ உரை உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

கலைஞர் உரை:
தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி் நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

Explanation:
If a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase.

A THOUGHT FOR TODAY

"The more sand that has escaped from the hourglass of our life, the clearer we should see through it."
-Jean-Paul Sartre, writer and philosopher (1905-1980)

Thought for Today

"To maintain a joyful family requires much from both the parents and the children. Each member of the family has to become, in a special way, the servant of the others."
- Pope John Paul II

Thirukural : Iniyavaikooral - 5

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

மு.வ உரை உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

கலைஞர் உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
தகுதி்க்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Explanation:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

A Thought for Today

"Change before you have to."
- Jack Welch

Thought for Today

"It is sadder to find the past again and find it inadequate to the present than it is to have it elude you and remain forever a harmonious conception of memory."
- F Scott Fitzgerald

Thirukural : Iniyavaikooral - 4

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

மு.வ உரை உரை:
யாரிடத்தி்லும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதி்படுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

கலைஞர் உரை:
இன்சொல் பேசி எல்லோரிடத்தி்லும் கனிவுடன் பழகுவோர்க்கு நட்பில் வறுமை எனும் துன்பமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

Explanation:
Sorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech.

A Thought for Today

"It takes a great man to be a good listener."
- Calvin Coolidge

Thought for Today

"If there is any one secret of success, it lies in the ability to get the other person's point of view and see things from that person's angle as well as from your own."
- Henry Ford

Thirukural : iniyavai kooral - 3

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.

மு.வ உரை உரை:
முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

கலைஞர் உரை:
முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.

Explanation:
Sweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue.

A Thought for Today

"In formal logic, a contradiction is the signal of defeat, but in the evolution of real knowledge it marks the first step in progress toward a victory."
- Alfred North Whitehead

Thirukural : Iniyavaikooral - 2

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

மு.வ உரை உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

கலைஞர் உரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது.

Explanation:
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind.

Thought for Today

"One test of the correctness of educational procedure is the happiness of the child."
- Maria Montessori

A Thought for Today

"Lack of direction, not lack of time, is the problem. We all have twenty-four hour days."
- Zig Ziglar

Thirukural : Iniyavai kooral - 1

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

மு.வ உரை உரை:
ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.

கலைஞர் உரை:
அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.

Explanation:
Sweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous.

Thought for Today

"There’s no shortage of remarkable ideas, what’s missing is the will to execute them."
-Seth Godin

Thought for Today

"I'm sorry I wrote you such a long letter; I didn't have time to write a short one."
- Blaise Pascal

Thirukural : Virunthombal - 10

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்தி்ரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.

மு.வ உரை உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தி்னர் வாடி நிற்பார்.

கலைஞர் உரை:
அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகங்கோணி வரவேற்றாலே விருந்தி்னர் வாடிவிடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
தொட்டு மோந்து பார்த்த அளவில் அனிச்சப்பூ வாடும்; நம் முகம் வேறுபட்டுப் பார்த்த அளவில் விருந்து வாடும்.

Explanation:
As the Anicham flower fades on smelling it, so fades the guest when the face is turned away.

A Thought for Today

"There is nothing better than a friend, unless it is a friend with chocolate."
- Charles Dickens

Thought for Today

"I'm a slow walker, but I never walk back."
- Abraham Lincoln

Thirukural : Virunthombal - 9

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

மு.வ உரை உரை:
செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

கலைஞர் உரை:
விருந்தி்னரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்தி்ரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தி்னரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும்.

Explanation:
That stupidity which excercises no hospitality is poverty in the midst of wealth. It is the property of the stupid.

A Thought for Today

"The true entrepreneur is a doer, not a dreamer."

Thought for Today

"A great city is not to be confounded with a populous one."
- Aristotle

Thirukural : Virunthombal - 8

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

மு.வ உரை உரை:
விருந்தி்னரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்தி்க்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

கலைஞர் உரை:
செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னரைப் பேணி, அந்த யாகத்தி்ன் பயனைப் பெறும் பேறு அற்றவர். செல்வத்தைச் சிரமப்பட்டுக் காத்தும் அதனை இழக்கும் போது, இப்போது எந்தத் துணையும் இல்லாதவராய்ப் போனோமே என்று வருந்துவர்.

Explanation:
Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, we have laboured and laid up wealth and are now without support.

A Thought for Today

"Academic qualifications are important and so is financial education. They're both important and schools are forgetting one of them."
- Robert Kiyosaki

Thirukural : Virunthombal - 7

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தி்ன்
துணைத்துணை வேள்விப் பயன்.

மு.வ உரை உரை:
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி் கூறத்தக்கது அன்று, விருந்தி்னரின் தகுதி்க்கு ஏற்ற அளவினதாகும்.

கலைஞர் உரை:
விருந்தி்னராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னரைப் பேணுவதும் ஒரு யாகமே. அதைச் செய்வதால் வரும் நன்மை இவ்வளவு என்று அளவிட முடியாது; வரும் விருந்தி்னரின் தகுதி் அளவுதான் நன்மையின் அளவாகும்.

Explanation:
The advantages of benevolence cannot be measured; the measure (of the virtue) of the guests (entertained) is the only measure.

A Thought for Today

"The belief that all genuine education comes about through experience does not mean that all experiences are genuinely or equally educative."
- John Dewey

Thought for Today

"The great mistake is to anticipate the outcome of the engagement; you ought not to be thinking of whether it ends in victory or defeat. Let nature take its course, and your tools will strike at the right moment."
- Bruce Lee

Thirukural : Virunthombal - 6

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.

மு.வ உரை உரை:
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

கலைஞர் உரை:
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர் நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்.

சாலமன் பாப்பையா உரை:
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

Explanation:
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven.

A Thought for Today

"You've got to do your own growing, no matter how tall your grandfather was."
-Irish Proverb

Speech on...

"Did you ever think that making a speech on economics is a lot like pissing down your leg? It seems hot to you, but it never does to anyone else."
- Lyndon B Johnson

Thirukural : Virunthombal - 5

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

மு.வ உரை உரை:
விருந்தி்னரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தி்ல் விதையும் விதைக்க வேண்டுமோ?

கலைஞர் உரை:
விருந்தி்னர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்தி்ற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தி்ல் விதைக்கவும் வேண்டுமா?

Explanation:
Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?

Association

"Associate with men of good quality if you esteem your own reputation; for it is better to be alone than in bad company."
- George Washington

Thirukural : Virunthombal - 4

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

மு.வ உரை உரை:
நல்ல விருந்தி்னராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து தி்ருமகள் வாழ்வாள்.

கலைஞர் உரை:
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தி்னரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் தி்ருமகள் வாழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:
இனிய முகத்தோடு தக்க விருந்தி்னரைப் பேணுபவரின் வீட்டில் தி்ருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

Explanation:
Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.

A Road. ...

"He who chooses the beginning of the road chooses the place it leads to."
- Harry Fosdick

A Thought for Today

Few people are capable of expressing with equanimity opinions which differ from that of their social environment.
-Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955)

Thirukural : Virunthombal - 3

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

மு.வ உரை உரை:
தன்னை நோக்கி வரும் விருந்தி்னரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்தி்க் கெட்டுப் போவதி்ல்லை.

கலைஞர் உரை:
விருந்தி்னரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதி்ல்லை.

சாலமன் பாப்பையா உரை:
நாளும் வரும் விருந்தி்னரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.

Explanation:
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.

A Friend..

"A friend should be a master at guessing and keeping still."
- Friedrich Nietzsche

Thout for Today : Offended

"Whenever anyone has offended me, I try to raise my soul so high that the offense cannot reach it."
- Rene Descartes

Thirukural : Virunthombal - 2

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

மு.வ உரை உரை:
விருந்தி்னராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

கலைஞர் உரை:
விருந்தி்னராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

சாலமன் பாப்பையா உரை:
விருந்தி்னர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் தனித்து உண்பது, சாவைத் தடுக்கும் மருந்தே என்றாலும், விரும்பத் தக்கது அன்று.

Explanation:
It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality.

Thought for Today

"In order that people may be happy in their work, these three things are needed: they must be fit for it; they must not do too much of it; and they must have a sense of success in it."
-John Ruskin, author, art critic, and social reformer (1819-1900)

A Thought for Today

"In this world, you must be a bit too kind to be kind enough."
-Pierre Carlet de Chamblain de Marivaux, dramatist and novelist (1688-1763)

Thirukural : Virunthombal - 1

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

மு.வ உரை உரை:
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தி்னரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.

கலைஞர் உரை:
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தி்னரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

சாலமன் பாப்பையா உரை:
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தி்னரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.

Explanation:
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.

John Lenon : possibilities

"The thing the sixties did was to show us the possibilities and the responsibility that we all had. It wasn't the answer. It just gave us a glimpse of the possibility."
- John Lennon

Mistakes ....

"You just keep pushing. You just keep pushing. I made every mistake that could be made. But I just kept pushing."
- Rene Descartes

Thirukural : Anbudamai - 9

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

Explanation:
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.

Who am I

"I'd rather be hated for who I am, than loved for who I am not."
- Kurt Cobain

A Thought for Today

"Unless you make a daily effort to see the world as God sees it, you will never get beyond mere appearances."
- Michel Quoist

Thirukural : Anbudamai - 10

அன்பின் வழியது உயிர்நிலை அஃதி்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

மு.வ உரை உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.

கலைஞர் உரை:
அன்புநெஞ்சத்தி்ன் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்தி்ய வெறும் உடலேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தி்யது போன்றது ஆகும்.

Explanation:
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.

Thought for Today

"A happy person is not a person in a certain set of circumstances, but rather a person with a certain set of attitudes."

Religions

"Rivers, ponds, lakes and streams - they all have different names, but they all contain water. Just as religions do - they all contain truths."
- Muhammad Ali

Thirukural : Anbudamai - 8

அன்பகத் தி்ல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

மு.வ உரை உரை:
அகத்தி்ல் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தி்ல் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

கலைஞர் உரை:
மனத்தி்ல் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தி்ல் பட்டமரம் தளிர்த்தது போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
மனத்தி்ல் அன்பு இல்லாமல் குடும்பத்தோடு வாழும் வாழ்க்கை, வறண்ட பாலை நிலத்தி்ல் காய்ந்து சுக்காகிப் போன மரம் மீண்டும் இலை விடுவது போலாம்.

Explanation:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

A Thought for Today

"The most important thing to do if you find yourself in a hole is to stop digging."
- Warren Buffett

Thought for Today

"All my life I have tried to pluck a thistle and plant a flower wherever the flower would grow in thought and mind."
- Abraham Lincoln

A Thought for Today

"Jokes of the proper kind, properly told, can do more to enlighten questions of politics, philosophy, and literature than any number of dull arguments."
-Isaac Asimov, scientist and writer (1920-92)

This week's sponsors

Thirukural : Anbudamai - 7

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

மு.வ உரை உரை:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

கலைஞர் உரை:
அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும்.

Explanation:
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.

Thought for Today

"No" is always an easier stand than "Yes."
- Rosabeth Moss Kanter

Thought for Today

"Worry' is a word that I don't allow myself to use."
- Dwight D Eisenhower

A Thought for Today

"'Born this Way' is about being yourself, and loving who you are and being proud."
- Lady Gaga

Women's Day

"A woman is the only thing I am afraid of that I know will not hurt me."
- Abraham Lincoln

Thirukural : Anbudamai - 6

அறத்தி்ற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்தி்ற்கும் அஃதே துணை.

மு.வ உரை உரை:
அறியாதவர், அறத்தி்ற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்தி்ற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

கலைஞர் உரை:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் தி்கழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தி்ற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்தி்ற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.

Explanation:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.

Women's Day special

"Give a girl an education and introduce her properly into the world, and ten to one but she has the means of settling well, without further expense to anybody."
- Jane Austen

For Women's Day

"If men knew all that women think, they would be twenty times more audacious."
- Alphonse Karr

Thirukural : Anbudamai - 5

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.

மு.வ உரை உரை:
உலகத்தி்ல் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி் வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.

கலைஞர் உரை:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தி்யதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.

Explanation:
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ears.

A Thought for Today

..from Vaagee's writings
.
Life is like GRAMMAR:
.
PAST-PERFECT,
.   
FUTURE-CONTINUOUS
.
&
.
PRESENT-TENSED...!

Also,
.
PAST-TENSED
.   
PRESENT-CONTINUOUS
.
&
.
FUTURE-PERFECT...¿

Thought for Today

Fame is very agreeable, but the bad thing is that it goes on 24 hours a day.
-Gabriel García Márquez, novelist, journalist, Nobel laureate (b. 1927)

Thirukural : Anbudamai - 4

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

மு.வ உரை உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

கலைஞர் உரை:
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும் அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

Explanation:
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.

Thought for Today

"Investigate, educate and organize the country must progress, productive works and industries are the main avenues at present next to education for the advancement of the country"
- Visvesvaraya

A Thought for Today

"Success in life depends on action, that is, on what you do, and not what you Feel or think, and the price of success is hard work."
- Visvesvaraya

Thirukural : Anbudamai - 3

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

மு.வ உரை உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி் இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி் வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

கலைஞர் உரை:
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்தி்ருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.

Explanation:
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).

A Thought for Today

"Of all the things I`ve lost I miss my mind the most."
- Ozzy Osbourne

Thought for Today

"If you keep saying things are going to be bad, you have a chance of being a prophet."
-Isaac B Singer

Thirukural : Anbudamai - 2

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

மு.வ உரை உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.

கலைஞர் உரை:
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

Explanation:
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.

A Thought for Today

"For every dark night, there's a brighter day."
- Tupac Shakur

Thought for Today

"Nature never excuses lapses."
- Visvesvaraya

Thirukural : Anbudamai - 1

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

மு.வ உரை உரை:
அன்புக்கும் அடைத்து வைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின் சிறு கண்ணீரே ( உள்ளே இருக்கும் அன்பைப் ) பலரும் அறிய வெளிப்படுத்தி்விடும்.

கலைஞர் உரை:
உள்ளத்தி்ல் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
அன்பிற்கும் கூடப் பிறர் அறியாமல் தன்னை மூடி வைக்கும் கதவு உண்டோ? இல்லை. தம்மால் அன்பு செய்யப்பட்டவரின் துன்பத்தைக் காணும்போது வடியும் கண்ணீரே அன்பு உள்ளத்தைக் காட்டிவிடும்.

Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

A Thought for Today

"We always overestimate the change that will occur in the next two years and underestimate the change that will occur in the next ten. Don't let yourself be lulled into inaction."
- Bill Gates

Thought for Today

"Run to meet the future or it's going to run you down."
- Anthony J D Angelo

Thirukural : puthalvaraip peruthal - 10

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.

மு.வ உரை உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

கலைஞர் உரை:
ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெரும்பேறு, என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

Explanation:
(So to act) that it may be said by what great penance did his father beget him, is the benefit which a son should render to his father.

Thought for Today

"To give real service, you must add something which cannot be bought or measured with money."
- Visvesvaraya

A Thought for Today

"Medicine heals doubts as well as diseases."
- Karl Marx