For this Day:

;

Thought for Today

"If you must tell me your opinions, tell me what you believe in. I have plenty of doubts of my own."
- Johann Wolfgang von Goethe

A Thought for Today

"When you fish for love, bait with your heart, not your brain."
- Mark Twain

Thirukural : Therinthu Thelithal - 9

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

மு.வ உரை உரை:
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

கலைஞர் உரை:
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

Explanation:
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.

A Thought for Today

A public-opinion poll is no substitute for thought.
-Warren Buffett

Thirukural : Therinthu Thelithal - 8

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

மு.வ உரை உரை:
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்தி்க் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

சாலமன் பாப்பையா உரை:
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தி்னால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

Explanation:
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

Thought for Today

"If you have the opportunity to play this game of life you need to appreciate every moment. a lot of people don't appreciate the moment until it's passed."
- Kanye West

A Thought for Today

"To be successful you have to be selfish, or else you never achieve. And once you get to your highest level, then you have to be unselfish. Stay reachable. Stay in touch. Don't isolate."
- Michael Jordan

Thirukural : Therinthu Thelithal - 7

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

மு.வ உரை உரை:
அறியவேண்டியவற்றை அறியாதி்ருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும்.

கலைஞர் உரை:
அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

சாலமன் பாப்பையா உரை:
அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும்.

Explanation:
To choose ignorant men, through partiality, is the height of folly.

Thought for Today

"Everything that can be counted does not necessarily count; everything that counts cannot necessarily be counted."
- Albert Einstein

A Thought for Today

"Believe you can and you're halfway there."
- Theodore Roosevelt

Thirukural : Therinthu Thelithal - 6

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

மு.வ உரை உரை:
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தி்ல் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.

கலைஞர் உரை:
நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.

Explanation:
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and therefore have no fear of crime.

Thirukural : Therinthu Thelithal - 5

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

மு.வ உரை உரை:
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே.

Explanation:
A man's deeds are the touchstone of his greatness and littleness.

Thirukural : Therinthu Thelithal - 4

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மு.வ உரை உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,  மிகுதி்யானவை எவையென ஆராய்ந்து, மிகுந்தி்ப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதி்யாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதி்கமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதி்யைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Explanation:
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

Thirukural : Therinthu Thelithal - 3

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

மு.வ உரை உரை:
அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்தி்லும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தி்ல் அறியாமை இல்லாதி்ருப்பது அருமையாகும்.

கலைஞர் உரை:
அரிய நூல்கள் பல கற்றவர் என்றும், எக்குறையும் அற்றவர் என்றும் புகழப்படுவோரைக்கூட ஆழமாக ஆராய்ந்து பார்க்கும்போது அவரிடம் அறியாமை என்பது அறவே இல்லை எனக் கணித்துவிட இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது.

Explanation:
When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.

A Thought for Today

'All that you do, do with all your might--Things done by half are never quite right.'
– Anonymous

Thirukural : Therinthu Thelithal - 2

குடிப்பிறந்து குற்றத்தி்ன் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

மு.வ உரை உரை:
நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

கலைஞர் உரை:
குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்தி்ட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Explanation:
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).

A Thought for Today

"The greatest gift that you can give yourself is a little bit of your own attention."
- Anthony J D Angelo

Thought for Today

"We must open the doors of opportunity. But we must also equip our people to walk through those doors."
- Lyndon B Johnson

Thirukural : Therinthu Thelithal - 1

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
தி்றந்தெரிந்து தேறப் படும்.

மு.வ உரை உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

கலைஞர் உரை:
அறவழியில் உறுதி்யானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதி்ப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

Explanation:
Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and fear of (losing) life.

A Thought for Today

"Believe the doctor's diagnosis, but not the doctor's prognosis."
- Deepak Chopra

Thirukural : Therinthu vinaiyaadal - 10

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

மு.வ உரை உரை:
தொழில் செய்கின்றவன் கோணாதி்ருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

கலைஞர் உரை:
உழைப்போர் உள்ளம் வாடாமல் இருக்கும் வரையில் உலகின் செழிப்பும் வாடாமல் இருக்கும். எனவே உழைப்போர் நிலையை ஒவ்வொரு நாளும் அரசினர் ஆய்தறிந்து ஆவன செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Explanation:
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

Thirukural : Therinthu vinaiyaadal - 9

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் தி்ரு.

மு.வ உரை உரை:
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

கலைஞர் உரை:
எடுத்த காரியத்தை முடிப்பதி்ல் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் பதவியில் செயல்தி்றம் உடையவன் நிர்வாகத்தி்ற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் தி்ருமகள் நீங்குவாள் .

Explanation:
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

A Thought for Today

When I feed the hungry, they call me a saint. 
When I ask why people are hungry, they call me a communist. 
-Helder Camara, archbishop (1909-1999) 

Thought for Today

"People who work together will win, whether it be against complex football defenses, or the problems of modern society."
- Vince Lombardi

A Thought for Today

"The thing the sixties did was to show us the possibilities and the responsibility that we all had. It wasn't the answer. It just gave us a glimpse of the possibility."
- John Lennon

Thirukural : Therinthu vinaiyaadal - 8

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

மு.வ உரை உரை:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈ.டுபடுவதற்கு ஏற்றவனா என்பதை ஆராய்ந்து அறிந்த பிறகே, அவனை அந்தச் செயலில் ஈ.டுபடுத்த வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

Explanation:
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.

A Thought for Today

"True friends stab you in the front."
- Oscar Wilde

Thirukural : Therinthu vinaiyaadal - 7

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

மு.வ உரை உரை:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

Explanation:
After having considered, this man can accomplish this, by these means, let (the king) leave with him the discharge of that duty.

Thirukural : Therinthu vinaiyaadal - 6

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.

மு.வ உரை உரை:
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.

கலைஞர் உரை:
செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
முதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதி்களை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதி்யையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி் எண்ணிச் செயல் செய்க.

Explanation:
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.

Thought for Today

"My fake flowering plants died because I did not pretend to water them."
- Mitch Hedberg

A Thought for Today

"All my life I have tried to pluck a thistle and plant a flower wherever the flower would grow in thought and mind."
- Abraham Lincoln

Thirukural : Therinthu vinaiyaadal - 5

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

மு.வ உரை உரை:
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி் ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

கலைஞர் உரை:
ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி் ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
செய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் தி்றமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.

Explanation:
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.

Thirukural : Therinthu vinaiyaadal - 4

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.

மு.வ உரை உரை:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தி்ல் பலர் உண்டு.

கலைஞர் உரை:
எவ்வளவுதான் வழிமுறைகளை ஆராய்ந்து தெளிந்து தேர்ந்தெடுத்தாலும் செயல்படும் பொழுது வேறுபடுகிறவர்கள் பலர் இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் தி்றத்தால், எதி்ர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.

Explanation:
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).

ஆமாம் போட்ட அர்ஜுனன்!


ஒருநாள் கிருஷ்ணரும் அர்ஜுனனும் சோலை வழியே நடந்து போனார்கள். சற்றுத் தொலைவில் பறந்து போய்க்கொண்டிருந்த ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணர், "அர்ஜுனா, அது காகம் தானே?" என்று கேட்டார்.

"ஆமாம் கிருஷ்ணா, காகம்தான்" என்றான் அர்ஜுனன்.

"இல்லையே அர்ஜுனா... அது காகம் போலத் தெரியவில்லையே,..? புறா போலிருக்கிறதே..."என்றார் கிருஷ்ணர்.

"ஆமாம், ஆமாம் அது புறாதான்" என்று ஆமோதித்தான் அர்ஜுனன். 

உடனே, "இல்லை அர்ஜுனா, அது காகமும் இல்லை, புறாவும் இல்லை, அது ஒரு கழுகு" என்றார் கிருஷ்ணர்.

"ரொம்ப சரி" இதையும் ஆமோதித்தான் அர்ஜுனன்.

"என்ன அர்ஜுனா இது? நான் எதைச் சொன்னாலும் அப்படியே ஆமோதிக்கிறாயா?" என்று கேட்டார் கிருஷ்ணர்.

"பகவானே, நான் கண்ணால் காண்பதைவிட உங்கள் வார்த்தைகளில் அதிக நம்பிக்கை உள்ளவன். ஏனென்றால் என்னென்ன பறவைகளைச் சொல்கிறாயோ, அந்தந்தப் பறவைகளாகவே அவற்றை மாற்றிவிடக் கூடிய வல்லமை படைத்தவன் நீ. அதனால் நீ என்ன சொல்லுகிறாயோ, அதுதான் சரி" என்று பதில் அளித்தான் அர்ஜுனன்.

A Thought for Today

If you tell the Truth, it becomes a part of your Past.
But, If you tell a Lie, it becomes a part of your future..!!
Choice is yours.!!!

Thirukural : Therinthu vinaiyaadal - 3

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்  நன்குடையான் கட்டே தெளிவு.

மு.வ உரை உரை:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

கலைஞர் உரை:
அன்பு, அறிவு, செயலாற்றும் தி்றமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

சாலமன் பாப்பையா உரை:
நிர்வாகத்தி்ன்மேல் அன்பு, நிர்வாகத்தி்ற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி், பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

Explanation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

Thought for Today

"Ideas won't keep; something must be done about them."
- Alfred North Whitehead

A Thought for Today

"Just because something doesn't do what you planned it to do doesn't mean it's useless."
- Thomas A Edison

Thirukural : Therinthu vinaiyaadal - 2

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.

மு.வ உரை உரை:
பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:
வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளையும் ஆராய்ந்து நீக்கிட வல்லவனே செயலாற்றும் தி்றனுடையவன்.

சாலமன் பாப்பையா உரை:
பொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.

Explanation:
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).

Thirukural : Therinthu vinaiyaadal - 1

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.

மு.வ உரை உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.

கலைஞர் உரை:
நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி் பெற்றவராவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.

Explanation:
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.

Thirukural : Sutranthazhaal - 1

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

மு.வ உரை உரை:
ஒருவன் வறியவனான காலத்தி்லும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.

கலைஞர் உரை:
ஒருவருக்கு வறுமை வந்த நேரத்தி்லும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.

Explanation:
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).

A Thought for Today


"Whatever you truly conceive of in the mind, is possible."
-Edwin Hubbel Chapin

Thirukural : Sutranthazhaal - 2

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

மு.வ உரை உரை:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.

கலைஞர் உரை:
எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.

Explanation:
If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.

Thirukural : - 3

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

மு.வ உரை உரை:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,  குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.

கலைஞர் உரை:
உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தி்ல் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
சுற்றத்தாரோடு மனந்தி்றந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்தி்ருப்பது போன்றது.

Explanation:
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.

Thirukural : Sutranthazhaal - 4

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

மு.வ உரை உரை:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதி்லும் குறையாகிவிடும்.

கலைஞர் உரை:
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தி்னால் கிடைத்தி்டும் பயனாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

Explanation:
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.

Thirukural : Sutranthazhaal - 5

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

மு.வ உரை உரை:
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.

கலைஞர் உரை:
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.

Explanation:
He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.

Thirukural : Sutranthazhaal - 6

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

மு.வ உரை உரை:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தி்ல் யாரும் இல்லை.

கலைஞர் உரை:
பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

Explanation:
No one, in all the world, will have so many relatives, as he who makes large gift, and does not give way to anger.

Thirukural : Sutranthazhaal - 7

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

மு.வ உரை உரை:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

கலைஞர் உரை:
தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும். அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

Explanation:
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).

Thirukural : Sutranthazhaal - 8

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

மு.வ உரை உரை:
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

கலைஞர் உரை:
அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்தி்க் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

சாலமன் பாப்பையா உரை:
சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதி்க்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

Explanation:
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.

Thought for Today

"Friendship is a plant of slow growth and must undergo and withstand the shocks of adversity before it is entitled to the appellation."
- George Washington

A Thought for Today

"The shoe that fits one person pinches another; there is no recipe for living that suits all cases."
- Carl Jung

Thirukural : Sutranthazhaal - 9

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

மு.வ உரை உரை:
முன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

கலைஞர் உரை:
உறவினராக இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு தன் அரசியல் இயக்கத்தி்ல் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே தி்ரும்ப வருவர்.

Explanation:
Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.

Thought for Today

"Sometimes our light goes out, but is blown again into instant flame by an encounter with another human being."
- Albert Schweitzer

A Thought for Today

"Each player must accept the cards life deals him or her: but once they are in hand, he or she alone must decide how to play the cards in order to win the game."
- Voltaire

Thirukural : Sutranthazhaal - 10

உழைப்பிரிந்து காரணத்தி்ன் வந்தானை வேந்தன்  இழைத்தி்ருந்து எண்ணிக் கொளல்.

மு.வ உரை உரை:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் தி்ரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
ஏதோ காரணம் கற்பித்துப் பிரிந்து போய், மீண்டும் தலைவனிடம் தக்க காரணத்தி்னால் வந்தவரை, நன்கு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு தி்ரும்ப வந்தான் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.

Explanation:
When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.