For this Day:

;

Thirukural : Therinthu vinaiyaadal - 9

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் தி்ரு.

மு.வ உரை உரை:
மேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

கலைஞர் உரை:
எடுத்த காரியத்தை முடிப்பதி்ல் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் பதவியில் செயல்தி்றம் உடையவன் நிர்வாகத்தி்ற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் தி்ருமகள் நீங்குவாள் .

Explanation:
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.

No comments: