ஒருநாள் கிருஷ்ணரும் அர்ஜுனனும் சோலை வழியே நடந்து போனார்கள். சற்றுத் தொலைவில் பறந்து போய்க்கொண்டிருந்த ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணர், "அர்ஜுனா, அது காகம் தானே?" என்று கேட்டார்.
"ஆமாம் கிருஷ்ணா, காகம்தான்" என்றான் அர்ஜுனன்.
"இல்லையே அர்ஜுனா... அது காகம் போலத் தெரியவில்லையே,..? புறா போலிருக்கிறதே..."என்றார் கிருஷ்ணர்.
"ஆமாம், ஆமாம் அது புறாதான்" என்று ஆமோதித்தான் அர்ஜுனன்.
உடனே, "இல்லை அர்ஜுனா, அது காகமும் இல்லை, புறாவும் இல்லை, அது ஒரு கழுகு" என்றார் கிருஷ்ணர்.
"ரொம்ப சரி" இதையும் ஆமோதித்தான் அர்ஜுனன்.
"என்ன அர்ஜுனா இது? நான் எதைச் சொன்னாலும் அப்படியே ஆமோதிக்கிறாயா?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
"பகவானே, நான் கண்ணால் காண்பதைவிட உங்கள் வார்த்தைகளில் அதிக நம்பிக்கை உள்ளவன். ஏனென்றால் என்னென்ன பறவைகளைச் சொல்கிறாயோ, அந்தந்தப் பறவைகளாகவே அவற்றை மாற்றிவிடக் கூடிய வல்லமை படைத்தவன் நீ. அதனால் நீ என்ன சொல்லுகிறாயோ, அதுதான் சரி" என்று பதில் அளித்தான் அர்ஜுனன்.
No comments:
Post a Comment