For this Day:

;

Thirukural : Therinthu Thelithal - 8

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

மு.வ உரை உரை:
மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்தி்க் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

சாலமன் பாப்பையா உரை:
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தி்னால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

Explanation:
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.

No comments: