For this Day:

;

Thirukural : Yil Vaazhkai - 5

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.

மு.வ உரை உரை:
இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

கலைஞர் உரை:
இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை.

சாலமன் பாப்பையா உரை:
மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

Explanation:
If the married life possess love and virtue, these will be both its duty and reward.

Thought for Today

War is the unfolding of miscalculations. 
-Barbara Tuchman, historian (1912-1989) 

Thirukural : Yil Vaazhkai - 4

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

மு.வ உரை உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.

கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது பாவததிற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருக்காலும் அழிவதில்லை.

Explanation:
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).

A Thought for Today

"Success is liking yourself, liking what you do, and liking how you do it."
-Maya Angelou

Thought for Today

"Success is liking yourself, liking what you do, and liking how you do it."
-Maya Angelou

Thirukural : Yil Vaazhkai - 3

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு  ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

மு.வ உரை உரை:
தென்புலத்தார், தெய்வம,் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

கலைஞர் உரை:
வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.

சாலமன் பாப்பையா உரை:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

Explanation:
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.

Thought for Today

"It is divinity that shapes, not only your ends, but also your acts, your words and thoughts."
- Swami Sivananda

Thirukural : yil Vaazhkai - 2

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

மு.வ உரை உரை:
துறந்தவர்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும் இல்லறம் மேற்கொண்டு வாழ்கிறவன் துணையாவான்.

கலைஞர் உரை:
பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.

Explanation:
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.

My favourite quote

"Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life."
- Swami Vivekananda

Thirukural : Yil Vaazhkai - 1

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

மு.வ உரை உரை:
இல்லறத்தி்ல் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

கலைஞர் உரை:
பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.

Explanation:
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.

A Thought for Today

"The best revenge is massive success."

-Frank Sinatara

Thirukural : Kadavul Vaazhthu - 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

மு.வ உரை உரை:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

கலைஞர் உரை:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக்கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

Explanation:
None can swim the great sea of births but those who are united to the feet of God.

A Thought for Today

"Do one thing at a time, and while doing it put your whole soul into it to the exclusion of all else."
- Swami Sivananda

Thought for Today

"There are two kinds of light -- the glow that illuminates, and the glare that obscures."
-James Thurber, writer and cartoonist (1894-1961)

Thirukural : Kadavul Vaazhthu - 9

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

மு.வ உரை உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

கலைஞர் உரை:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

Explanation:
The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

Thought for Today

Most people think that shadows follow, precede, or surround beings or objects. The truth is that they also surround words, ideas, desires, deeds, impulses and memories.
-Elie Wiesel, writer, Nobel laureate (b. 1928)

My favourite quote

"Memory... is an internal rumour."
- George Santayana

Thirukural : Kadavul Vaazhthu - 8

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

மு.வ உரை உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி. நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

Explanation:
None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

Thought for Today

"Almost every wise saying has an opposite one, no less wise, to balance it."
- George Santayana

A Thought for Today

"To know what people really think, pay regard to what they do, rather than what they say."
- George Santayana

Thirukural : Kadavul Vaazhthu - 7

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

மு.வ உரை உரை:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

கலைஞர் உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தி்ய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

Explanation:
Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

Thirukural : Kadavul Vaazhthu - 6

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வ உரை உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதி்ர் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

My favourite quote

"You cannot change your destination overnight, but you can change your direction overnight"
- Jim Rohn

A Thought for Today

"There are two educations. One should teach us how to make a living and the other how to live."
- John Adams

Thirukural : Kadavul Vaazhthu - 5

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

மு.வ உரை உரை:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

கலைஞர் உரை:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

Explanation:
The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

Thought for Today

"I write with experiences in mind, but I don't write about them, I write out of them."
- John Ashbery

Thirukural : Kadavul Vaazhthu - 4

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

மு.வ உரை உரை:
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

கலைஞர் உரை:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
எதிலும்  விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

Explanation:
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

Thought for Today

"To succeed… You need to find something to hold on to, something to motivate you, something to inspire you."
- Tony Dorsett

Thirukural : Kadavul Vaazhthu - 3

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மு.வ உரை உரை:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

கலைஞர் உரை:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

Explanation:
They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

A Thought for Today

"Success is walking from failure to failure with no loss of enthusiasm."
- Winston Churchill

Thought for Today

"There are no problems we cannot solve together, and very few that we can solve by ourselves."
- Lyndon B Johnson

Thought for Today

"Those who have knowledge, don't predict. Those who predict, don't have knowledge."
- Lao Tzu

Thirukural : Kadavul Vaazhthu - 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

மு.வ உரை உரை:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல   திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

கலைஞர் உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

Explanation:
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

A Thought for Today

"Never take anything for granted."
- Benjamin Disraeli

Thought for Today

"We must adjust to changing times and still hold to unchanging principles."
- Jimmy Carter

Thirukural : Kadavul Vaazhthu - 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

மு.வ உரை உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

கலைஞர் உரை:
அகரம் எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Explanation:
As all letters have the letter A for their beginning, so the world has the eternal God for its beginning.

A Thought for Today

"Man will occasionally stumble over the truth, but most of the time he will pick himself up and continue on."
- Winston Churchill

A Thought for Today

"Today, many companies are reporting that their number one constraint on growth is the inability to hire workers with the necessary skills."
- Bill Clinton

Thought for Today

"Although personally I am quite content with existing explosives, I feel we must not stand in the path of improvement."
- Winston Churchill

Thirukural : Vaan Sirappu - 10

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

மு.வ உரை உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

Explanation:
If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.

Thought for Today

Several excuses are always less convincing than one. 

-Aldous Huxley, novelist (1894-1963) 

A Thought for today

"Most people would rather give than get affection."
- Aristotle

Thirukural : Vaan Sirappu - 9

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

மு.வ உரை உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தி்ல் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

கலைஞர் உரை:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்தி்ற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தி்ல் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

Explanation:
If rain fall fails, penance and alms-deeds will not dwell within this spacious world.

Thought for Today

"The most efficient way to produce anything is to bring together under one management as many as possible of the activities needed to turn out the product."
- Peter Drucker

A Thought for Today

"If you are the master be sometimes blind, if you are the servant be sometimes deaf."
- Richard Buckminster Fuller

Thirukural : Vaan Sirappu - 8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மு.வ உரை உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தி்ல் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

கலைஞர் உரை:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?

சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

Explanation:
If the heavenly rains dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

Thought for Today

"Sometimes your joy is the source of your smile, but sometimes your smile can be the source of your joy."
- Thich Nhat Hanh

Thirukural : Vaan Sirappu - 7

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மு.வ உரை உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்தி்லேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்தி்லிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்தி்ற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

Explanation:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

A Thought for Today

"He that respects himself is safe from others. He wears a coat of mail that none can pierce."
- Henry Wadsworth Longfellow

Thirukural : Vaan Sirappu - 6

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

மு.வ உரை உரை:
வானத்தி்லிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தி்ல் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மேகத்தி்லிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

Thought for Today

"If you don't make things happen then things will happen to you."

-Robert Collier 

Thought for Today

"The beginning of thought is in disagreement - not only with others but also with ourselves."
- Eric Hoffer

A Thought for Today

"The most creative act you will ever undertake is the act of creating yourself."
- Deepak Chopra

Thirukural : Vaan Sirappu - 5

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

மு.வ உரை உரை:
பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

கலைஞர் உரை:
பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திரத்துவதும் எல்லாமே மழைதான்.

Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

Thought for Today

"Nothing is at last sacred but the integrity of your own mind."
- Ralph Waldo Emerson

A Thought for Today

"I have never killed a man, but I have read many obituaries with great pleasure."
- Clarence Darrow

Thought for Today

"We make war that we may live in peace."
- Aristotle

Thirukural : Vaan Sirappu - 4

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மு.வ உரை உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தி்ல் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

Explanation:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

Thought for Today

"The aim of the wise is not to secure pleasure, but to avoid pain."
- Aristotle

A Thought for Today

"No one saves us but ourselves. No one can and no one may. We ourselves must walk the path."
- Buddha

Thirukural : Vaan Sirappu - 3

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

மு.வ உரை உரை:
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

கலைஞர் உரை:
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில்  வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress even the sea-girt spacious world.

Thought for Today

"Nobody is forgotten when it is convenient to remember him."
- Benjamin Disraeli

A Thought for Today

"Only a man who knows what it is like to be defeated can reach down to the bottom of his soul and come up with the extra ounce of power it takes to win when the match is even."
- Muhammad Ali

Thirukural : Vaan Sirappu - 2

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

மு.வ உரை உரை:
உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

கலைஞர் உரை:
யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி, அரிய தி்யாகத்தைச் செய்கிறது.<

சாலமன் பாப்பையா உரை:
நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

Explanation:
Rain produces good food, and is itself food.

Thought for Today

"The worst form of inequality is to try to make unequal things equal."
- Aristotle

Thirukural : Vaan Sirappu - 1

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

மு.வ உரை உரை:
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

கலைஞர் உரை:
உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்தி்ருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

சாலமன் பாப்பையா உரை:
உரிய காலத்தி்ல் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

Explanation:
The world its course maintains through life that rain unfailing gives; Thus rain is known the true ambrosial food of all that lives.

A Thought for Today

"What we anticipate seldom occurs: but what we least expect generally happens."
- Benjamin Disraeli

Thirukural : Neethaar Perumai - 10

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

மு.வ உரை உரை:
எல்லா உயிர்களிடத்தி்லும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

கலைஞர் உரை:
அனைத்து உயிர்களிடத்தி்லும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்தி்லும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Explanation:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

Thought for Today

"The most common way people give up their power is by thinking they don't have any."

-Alice Walker

A Thought for Today

"If the facts don't fit the theory, change the facts."
- Albert Einstein

Thirukural : Neethaar Perumai - 9

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

மு.வ உரை உரை:
நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதி்லிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

கலைஞர் உரை:குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தி்ல் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

சாலமன் பாப்பையா உரை:நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம்.

Explanation:
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.

Thought for Today

"Nine-tenths of wisdom is being wise in time."
- Theodore Roosevelt

A Thought for Today

Sin is geographical.
-Bertrand Russell, philosopher, mathematician, author, Nobel laureate (1872-1970) 

Thirukural : Neethaar Perumai - 8

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

மு.வ உரை உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தி்ல் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

கலைஞர் உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்தி்ரச் சொற்்களே அடையாளம் காட்டிவிடும்.

Explanation:
The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.

My favourite quote

"Intellectuals solve problems, geniuses prevent them. "
- Albert Einstein

A Thought for Today

"Wisdom is not the product of schooling, but of the lifelong attempt to acquire it."
- Albert Einstein

My favourite quote

"A question that sometimes drives me hazy: Am I, or the others, crazy?"
- Albert Einstein

Thirukural : Neethaar perumai - 7

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

மு.வ உரை உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று செ?ல்லப்படும் ஐந்தி்ன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

கலைஞர் உரை:
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் தி்றன் கொண்டவனையே உலகம் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

Explanation:
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

A Thought for Today

The art of progress is to preserve order amid change, and to preserve change amid order. 
-Alfred North Whitehead, mathematician and philosopher (1861-1947) 

Thought for Today

"Giving connects two people, the giver and the receiver, and this connection gives birth to a new sense of belonging."
- Deepak Chopra

Thirukural : Neethaar Perumal - 6

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

மு.வ உரை உரை:
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

கலைஞர் உரை:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

Explanation:
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.