For this Day:

;

A Thought for Today

"I don't look to jump over 7-foot bars: I look around for 1-foot bars that I can step over."
-Warren Buffet



Thirukural : Kelvi - 01

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

மு.வ உரை உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.

கலைஞர் உரை:
செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
செவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.

Explanation:
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.

Thought for Today

"Drop the idea that you are Atlas carrying the world on your shoulders. The world would go on even without you. Don't take yourself so seriously."
- Norman Vincent Peale

A Thought for Today

"Many a man will have the courage to die gallantly, but will not have the courage to say, or even to think, that the cause for which he is asked to die is an unworthy one."
- Bertrand Russell

Thirukural : Kelvi - 02

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

மு.வ உரை உரை:
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

கலைஞர் உரை:
செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:
செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

Explanation:
When there is no food for the ear, give a little also to the stomach.

Thought for Today

"It's good to know how to read, but it's dangerous to know how to read and not how to interpret what you're reading."
- Mike Tyson

A Thought for Today

"The worst disease which can afflict executives in their work is not, as popularly supposed, alcoholism; it's egotism."
- Robert Frost

Thirukural : Kelvi - 03

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

மு.வ உரை உரை:
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தி்ல் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

கலைஞர் உரை:
குறைந்த உணவருந்தி் நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.

Explanation:
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.

A Thought for Today

"It's easy to have faith in yourself and have discipline when you're a winner, when you're number one. What you got to have is faith and discipline when you're not a winner."
- Vince Lombardi

Thought for Today

"But
words are things,
and a
small drop of ink,
Falling like dew,
upon a thought,
produces That which makes thousands,
perhaps millions,
to think."
- George Byron

A Thought for Today

"Because we cannot know what God is, but only what He is not, we cannot consider how He is but only how He is not."
-Thomas Aquinas

Thirukural : Kelvi - 4

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தி்ன் ஊற்றாந் துணை.

மு.வ உரை உரை:
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

கலைஞர் உரை:
நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
கல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்தி்களைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.

Explanation:
Although a man be without learning, let him listen (to the teachings of the learned); that will be to him a staff in adversity.

Thought for Today

"When you're curious, you find lots of interesting things to do."
- Walt Disney

A Thought for Today

"What we anticipate seldom occurs: but what we least expect generally happens."
- Benjamin Disraeli

Thirukural : Kelvi - 5

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

மு.வ உரை உரை:
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தி்ல் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.

கலைஞர் உரை:
வழுக்கு நிலத்தி்ல் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

சாலமன் பாப்பையா உரை:
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தி்ல் உதவும்.

Explanation:
The words of the good are like a staff in a slippery place.

Thirukural : Kelvi - 6

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

மு.வ உரை உரை:
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

கலைஞர் உரை:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
சிறிது நேரமே என்றாலும் உறுதி் தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Explanation:
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.

Thirukural : Kelvi - 7

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

மு.வ உரை உரை:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்தி்ருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

கலைஞர் உரை:
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்தி்ருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.

Explanation:
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).

A Thought for Today

"The word 'happiness' would lose its meaning if it were not balanced by sadness."
- Carl Jung

A Thought for Today


"Someone's sitting in the shade today because, someone planted a tree a long time ago."
- Warren Buffet 

Thirukural : Kelvi - 8

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

மு.வ உரை உரை:
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

Explanation:
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.

Thirukural : Kelvi - 9

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

மு.வ உரை உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் செ?ற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதி்யான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

Explanation:
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

Thirukural : Kelvi - 9

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

மு.வ உரை உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் செ?ற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதி்யான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

Explanation:
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

<br/><br/>Shared from https://market.android.com/details?id=com.softcraft.thirukural<br/><br/>www.softcraftsystems.com<br/><br/></html>

Thought for Today

"Enthusiasm for a cause sometimes warps judgment."
- William Howard Taft

A Thought for Today

"To affect the quality of the day, that is the highest of arts."
- Henry David Thoreau

Thought for Today

"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind."
- Mahatma Gandhi

A Though for Today

"To capture the enemy's entire army is better than to destroy it; to take intact a regiment, a company, or a squad is better than to destroy them. For to win one hundred victories in one hundred battles is not the supreme of excellence. To subdue the enemy without fighting is the supreme excellence."
- Sun Tzu

Thirukural : Kelvin - 10

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் 
அவியினும் வாழினும் என்.

மு.வ உரை உரை:
செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.

கலைஞர் உரை:
செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

சாலமன் பாப்பையா உரை:
செவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?

Explanation:
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?

Thirukural : Nalguravu - 10

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

மு.வ உரை உரை:
, நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

கலைஞர் உரை:
ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

சாலமன் பாப்பையா உரை:
உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதி்ுப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

Explanation:
The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.

Thought for Today

"The more things change, the more they are the same."
- Alphonse Karr

A Thought for Today

"Reading, after a certain age, diverts the mind too much from its creative pursuits. Any man who reads too much and uses his own brain too little falls into lazy habits of thinking."
- Albert Einstein

Thirukural : Nalguravu - 9

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

மு.வ உரை உரை:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

கலைஞர் உரை:
நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

சாலமன் பாப்பையா உரை:
யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

Explanation:
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

Thirukural : Nalguravu

இன்றும் வருவது கொல்லோ நெருநலும் Nalguravu
கொன்றது போலும் நிரப்பு.

மு.வ உரை உரை:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்தி்ய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

கலைஞர் உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்தி்ய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

சாலமன் பாப்பையா உரை:
நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?

Explanation:
Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

A Thought for Today


To read fast is as bad as to eat in a hurry.
-Vilhelm Ekelund, poet (1880-1949)

Thought for Today

"Each year one vicious habit discarded, in time might make the worst of us good."
- Benjamin Franklin

A Thought for Today

"Anyone who stops learning is old, whether at twenty or eighty. Anyone who keeps learning stays young. The greatest thing in life is to keep your mind young."
- Henry Ford

Thirukural : Nalguravu - 7

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

மு.வ உரை உரை:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

கலைஞர் உரை:
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போல்தான் கருதுவாள்.

சாலமன் பாப்பையா உரை:
நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

Explanation:
He that is reduced to absolute poverty will be regarded as a stranger even by his own mother.

Thirukural : Nalguravu - 6

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

மு.வ உரை உரை:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதி்லும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

கலைஞர் உரை:
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து செ?ன்னாலும், செ?ல்பவர் ஏழை என்றால் அவர் செ?ல் மதி்க்கப் பெறாது.

Explanation:
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression.

Thought for Today

"If we can really understand the problem, the answer will come out of it, because the answer is not separate from the problem."
- Jiddu Krishnamurti

A Thought for Today

"Wealth, like happiness, is never attained when sought after directly. It comes as a by-product of providing a useful service."
- Henry Ford

Thirukural : Nalguravu - 4

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.

மு.வ உரை உரை:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்தி்லும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.

கலைஞர் உரை:
இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்தவரிடம் கூட, இல்லாமை வந்து விட்டால், இழிவான செ?ற்களைச் செ?ல்லும் தளர்ச்சியை உண்டாக்கி விடும்.

Explanation:
Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.

Thought for Today

"The more boundless your vision, the more real you are."
- Deepak Chopra

A Thought for Today

"The finest workers in stone are not copper or steel tools, but the gentle touches of air and water working at their leisure with a liberal allowance of time."
- Henry David Thoreau

Thirukural : Nalguravu - 3

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

மு.வ உரை உரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

கலைஞர் உரை:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்று செ?ல்லப்படும் மன ஆசை எவரிடம் இருக்கிறதோ, அவரின் பழம் குடும்பப் பெருமையையும் சிறந்த பாராட்டுக்களையும் அது மொத்தமாக அழித்து விடும்.

Explanation:
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech.

Thought for Today

"A man who has not passed through the inferno of his passions has never overcome them."
- Carl Jung

A Thought for Today

"Art washes away from the soul the dust of everyday life."
- Pablo Picasso

Thirukural : Nalguravu - 2

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

மு.வ உரை உரை:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

கலைஞர் உரை:
பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்தி்லும், வருங்காலத்தி்லும் நிம்மதி் என்பது கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
இல்லாமை என்ற ஒரு பாவி ஒருவனிடத்தி்ல் சேர்ந்தால், அவன் பிறர்க்குக் கொடுக்க இல்லாதவன் ஆவதால் அவனுக்கு மறுமை இன்பமும் இல்லை; தானே அனுபவிக்க ஏதும் இல்லாததால் இம்மை இன்பமும் இல்லை.

Explanation:
When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).

Thirukural : Nalkuravu - 1

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

மு.வ உரை உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

கலைஞர் உரை:
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

Explanation:
There is nothing that afflicts (one) like poverty.

Thirukural : Nalkuravu - 1

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

மு.வ உரை உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

கலைஞர் உரை:
வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத் துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

Explanation:
There is nothing that afflicts (one) like poverty.

Thirukural : Uzhavu - 8

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

மு.வ உரை உரை:
ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

கலைஞர் உரை:
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

சாலமன் பாப்பையா உரை:
உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

Explanation:
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

A Thought for Today

"If you're totally illiterate and living on one dollar a day, the benefits of globalization never come to you."
-Jimmy Carter

Thought for Today

"Off with you! You're a happy fellow, for you'll give happiness and joy to many other people. There is nothing better or greater than that!"
-Beethoven

A Thought for Today

"If you're totally illiterate and living on one dollar a day, the benefits of globalization never come to you."
-Jimmy Carter

Thirukural : Uzhavu - 10

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

மு.வ உரை உரை:
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

கலைஞர் உரை:
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

சாலமன் பாப்பையா உரை:
நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

Explanation:
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle, lazy life.

A Thought for Today

"Do not try to approach God with your thinking mind. It may only stimulate your intellectual ideas, activities, and beliefs. Try to approach God with your crying heart. It will awaken your soulful, spiritual consciousness."
- Sri Chinmoy

Thought for Today

"What is wanted is not the will to believe, but the will to find out, which is the exact opposite."
- Bertrand Russell

Thirukural : Uzhavu - 9

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

மு.வ உரை உரை:
நிலத்தி்ற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

கலைஞர் உரை:
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தி்ற்கு உரியவன் நாளும் நிலத்தி்ற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

Explanation:
If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

Thought for Today

"What is wanted is not the will to believe, but the will to find out, which is the exact opposite."
- Bertrand Russell

A Thought for Today

"Do not try to approach God with your thinking mind. It may only stimulate your intellectual ideas, activities, and beliefs. Try to approach God with your crying heart. It will awaken your soulful, spiritual consciousness."
- Sri Chinmoy

A Thought for Today

"The higher the sun ariseth, the less shadow doth he cast; even so the greater is the goodness, the less doth it covet praise; yet cannot avoid its rewards in honours."
-Lao Tzu

Thought for Today

"Everything has its wonders, even darkness and silence, and I learn, whatever state I may be in, therein to be content."
- Helen Keller

A Thought for Today

"The higher the sun ariseth, the less shadow doth he cast; even so the greater is the goodness, the less doth it covet praise; yet cannot avoid its rewards in honours."
-Lao Tzu

Thirukural : Uzhavu - 7

தொடிப்புழுதி் கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

மு.வ உரை உரை:
ஒரு பலம் புழுதி் கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தி்ல் பயிர் செலுத்தி் செழித்து விளையும்.

கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி், காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி், 8.75 கிராம் புழுதி் ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதி்கம் விளையும்.

Explanation:
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

A Thought for Today

"All truth is simple... is that not doubly a lie?"
- Friedrich Nietzsche

A Thought for Today

"All truth is simple... is that not doubly a lie?"
- Friedrich Nietzsche

Thirukural : Uzhavu - 7

தொடிப்புழுதி் கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

மு.வ உரை உரை:
ஒரு பலம் புழுதி் கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தி்ல் பயிர் செலுத்தி் செழித்து விளையும்.

கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி், காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி், 8.75 கிராம் புழுதி் ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதி்கம் விளையும்.

Explanation:
If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure.

Thirukural : Uzhavu - 6

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

மு.வ உரை உரை:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

கலைஞர் உரை:
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதி்ர்பார்த்துதான் வாழ வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தி்ல் நிலைத்து நிற்க முடியாது.

Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail.

A Thought for Today

"The most efficient way to produce anything is to bring together under one management as many as possible of the activities needed to turn out the product."
- Peter Drucker

Thought for Today

"Life is not fair; get used to it."
- Bill Gates

A Thought for Today

"The most efficient way to produce anything is to bring together under one management as many as possible of the activities needed to turn out the product."
- Peter Drucker

Thirukural : Uzhavu - 6

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

மு.வ உரை உரை:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

கலைஞர் உரை:
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதி்ர்பார்த்துதான் வாழ வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தி்ல் நிலைத்து நிற்க முடியாது.

Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail.

Thirukural : Uzhavu - 6

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

மு.வ உரை உரை:
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

கலைஞர் உரை:
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதி்ர்பார்த்துதான் வாழ வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
உழுபவர் கை மட்டும் வேலை செய்யாது மடங்கிவிட்டால், எல்லாரும் விரும்பும் உணவையும், நாம் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவியரும்கூட அவரது அறத்தி்ல் நிலைத்து நிற்க முடியாது.

Explanation:
If the farmer's hands are slackened, even the ascetic state will fail.

A Thought for Today

"The devil has put a penalty on all things we enjoy in life. Either we suffer in health or we suffer in soul or we get fat."
-Albert Einstein

Thought for Today

"There are horrible people who, instead of solving a problem, tangle it up and make it harder to solve for anyone who wants to deal with it. Whoever does not know how to hit the nail on the head should be asked not to hit it at all."
-Friedrich Nietzsche

A Thought for Today

"The devil has put a penalty on all things we enjoy in life. Either we suffer in health or we suffer in soul or we get fat."
-Albert Einstein

Thirukural : Uzhavu - 5

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

மு.வ உரை உரை:
கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

கலைஞர் உரை:
தாமே தொழில் செய்து ஊதி்யம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

சாலமன் பாப்பையா உரை:
தம் கையால் உழுது உண்ணும் இயல்பை உடையவர் பிறரிடம் பிச்சை கேட்கமாட்டார்; தம்மிடம் கேட்டு வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கவும் செய்வர்.

Explanation:
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.

Thirukural : Uzhavu - 4

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

மு.வ உரை உரை:
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்தி்ய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

கலைஞர் உரை:
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

சாலமன் பாப்பையா உரை:
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

Explanation:
The Patriotic farmers desire to bring all other states under the control of their own king.

விஸ்வரூபம் – திரை விமர்சனம்


New post on Balhanuman's Blog
விஸ்வரூபம் – திரை விமர்சனம்
by BaalHanuman

அமெரிக்காவிலிருந்து தி.சு.பா.

பொதுவாக அட்லாண்டாவில் (அமெரிக்கா) கோடி கோடியாக லாபம் குவிக்கும் நம் படங்களுக்குக் கூட தியேட்டரில் ஐந்தாறு பேர்தான் இருப்பார்கள். விஸ்வரூபத்துக்கு தியேட்டர் நிரம்பி வழிந்தது. எந்த இந்தியப் படத்துக்கும் இப்படி கூட்டம் சேர்ந்ததாக ஞாபகம் இல்லை. முதலில், இப்படம் ஜிஹாத்-ஆப்கான்-அமெரிக்கா சம்பந்தப்பட்ட கதைக்களத்தைக் கொண்டது. படத்தின் கதை

பெரும்பாலும் இணையம், செய்தித்தாள்களில் ஆங்காங்கே நாம் படித்த செய்திகளை மனத்தில் வைத்தே பின்னப்பட்டிருக்கிறது. பிராமண பாஷை பேசும் தம்பதிகளாக கமல், அவர் மனைவி பூஜா என்று ஆரம்பமாகிறது படம். தன் கணவர் கமலிடமிருந்து விவாகரத்துப் பெற விழைகிறார் பூஜா. உளவாளி ஒருவரை வைத்து கமலைப் பின்தொடர வைக்கிறார்.

கமல் ஓர் இஸ்லாமியர் என்று திடுதிப்பென்று தெரியவரும்போது கதை விறுவிறு என நகர்கிறது. கமலுக்கும், ஆப்கானிஸ்தானிலுள்ள தீவிரவாதி ராகுல் போஸுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அங்கே அமெரிக்காவுக்கும், அந்தத் தீவிரவாத இயக்கத்துக்கும் இடையே அமெரிக்கப் பிணைக் கைதிகளை விடுவிக்கப் போர் நடைபெறுகிறது. பின்னர் அவ்வியக்கம் அமெரிக்காவை பழிவாங்கத் திட்டம் தீட்டுகிறது. ராகுல் போஸ் இதன் மூளையாகச் செயல்படுகிறார். இந்தத் திட்டத்தை கமல் முறியடிக்கிறாரா? கமல் மெய்யாலுமே யார்? இந்தக் கேள்விகளுக்கான பதிலில்தான் படத்தின் சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது.

தீவிரவாத இயக்கம் தீட்டும் திட்டம் பற்றிய காட்சிகளில் நிறைய ஆராய்ச்சி செய்து நுணுக்கமாக எடுத்திருக்கிறார் கமல். சுருங்கச் சொன்னால், திரைக்கதையைச் செதுக்கியிருக்கிறார். கிளைமேக்ஸுக்கு முன்னால் ஆரவாரமில்லாத இடத்தில் தொழுகை நடத்தி நெஞ்சைத் தொடுகிறார் கமல். டூயட், ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் வைக்காமல், நடுத்தர வயது மனிதராக வரும் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்ல? கதக் நடன ஆசிரியராக வரும் கமல் கதாபாத்திரம் 10-15 நிமிடங்களே வந்தாலும், மனத்தைக் கொள்ளை கொள்கிறது. பெண் நளினத்தில் கமலைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அதே மனிதர் ஆண்மை பொங்க சும்மா பறந்து பறந்து காலைச் சுழற்றிச் சுழற்றி சண்டை போட்டு மிரள வைக்கிறார். ஆங்காங்கே நகைச்சுவை தெறிக்கும் கமலின் வசனங்களை ரசிக்க முடிகிறது. பூஜாவின் பிசிறு இல்லாத நடிப்பு மற்றும் பிராமண வசனங்களின் பின்புலத்தில் கமலின் மேற்பார்வை, செய்நேர்த்தியைக் காணமுடிகிறது. முழுக்க முழுக்க அரேபிய மொழி மட்டுமே பேசி நடிக்கிறார் நாசர். ராகுல் போஸ் தன் கோணல் வாய், செயற்கைக் கண் கொண்டே மிரட்டியிருக்கிறார். கமலுக்கு பாஸ் ஆக வரும் சேகர் கபூர் நடிப்பில் எந்தவிதக் குறையும் இல்லை.

கண்கொத்திப் பாம்பாக படத்தைப் பார்க்க வேண்டும். ஒரு விநாடி தலையை இப்படி அப்படித் திருப்பினால் போச்சு. படம் புரியாது. உதாரணமாக கிளைமாக்ஸ் முடிந்த பின்னர் வரும் மாண்டேஜ் காட்சிகளில் கூட ஒருசில விஷயங்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் குடும்பத்துடன் வசிக்கும் ராகுல் போஸ் மதுரையிலும், கோயம்புத்தூரிலும் ஒரு வருடம் இருந்தேன், அதனால் தமிழ் தெரியும் என்கிறார், சர்வ சாதாரணமாக.

எஃப்.பி.ஐ.யை டம்மிபீஸ் போல் காட்டியிருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கூலாக இந்தியர்களான கமல், பூஜா என எல்லோரையும் நம்பிவிடுவதெல்லாம் கொஞ்சம் டூ மச்.

பலம் - இயக்குனர் கமல், சலீம் என்ற வேடத்தில் நடித்த அந்த இளைஞர், வில்லன் ராகுல் போஸ், கலை இயக்குனர் இளையராஜா. விஷுவல் மற்றும் சவுண்ட் எபெக்ட்ஸ் அபாரம். குண்டு வெடிப்புக் காட்சிகளும் அவற்றைப் படமாக்கிய விதமும் தமிழ்சினிமாவுக்கு புதுசு. ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கலை இயக்குனரின் திறமை கண்முன்னே நிற்கிறது. ஒளிப்பதிவு நச். 'துப்பாக்கி எங்கள் தோளிலே' பாடல், காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பது அருமை. சங்கர் மஹாதேவன் - கோ பாடல்களில் காட்டிய திறமையைப் பின்னணி இசையில் காட்டியிருக்கிறார்களா என்பது விவாதத்துக்குரியது.

பலவீனம் - ஆண்ட்ரியா உல்லலாய்க்கு வந்துவிட்டுச் செல்கிறார். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆன பிறகு வரும் ஆப்கானிஸ்தான் காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. படத்தைப் பார்க்கும்பொழுதும், முடித்த பின்னரும் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஒருசில கேள்விகளுக்குப் படத்தில் பதில் இல்லை.

கடைசியாக சுபம் போடாமல் 'இரண்டாம் பாகம் விரைவில்' என்று போட்டு விடுகிறார்கள். ஒருவேளை எல்லா கேள்விகளுக்கும் பார்ட்-2வில் விடை கிடைக்கலாமோ?

இருந்தாலும், படம் முழுக்க கமலின் கடின உழைப்பும் மெனக்கெடலும் கண்கூடாகத் தெரிகிறது. கமல் கமல்தான்!

விஸ்வரூபம் - பிரம்மாண்டம்!

--நன்றி கல்கி

A Thought for Today

Never cut what you can untie. 
-Joseph Joubert, essayist (1754-1824) 

A Thought for Today

"Wise living consists perhaps less in acquiring good habits than in acquiring as few habits as possible."
-Eric Hoffer

Thought for Today

"Each one prays to God according to his own light."
- Mahatma Gandhi

Thirukural : Uzhavu - 3

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

மு.வ உரை உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

கலைஞர் உரை:
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்காகவும் உழுது தாமும் உண்டு வாழ்பவரே வாழ்பவர். மற்றவர் எல்லாரும் பிறரைத் தொழுது அவர் தருவதை உண்டு தருபவர் பின்னே செல்பவர் ஆவர்.

Explanation:
They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.