For this Day:

;

Thirukural : Adakkamudaimai - 5

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

மு.வ உரை உரை:
பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

கலைஞர் உரை:
பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

Explanation:
Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.

A Thought for Today

"Never explain―your friends do not need it and your enemies will not believe you anyway."
- Elbert Hubbard

Thought for Today

"Education is the kindling of a flame, not the filling of a vessel."
- Socrates

Thirukural : Adakkamudaimai - 4

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

மு.வ உரை உரை:
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

கலைஞர் உரை:
உறுதி்யான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானத.

Explanation:
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.

Thought for Today

"The only way to make sense out of change is to plunge into it, move with it and join the dance."
- Alan Watts

A Thought for Today

"Pollution is nothing but the resources we are not harvesting. We allow them to disperse because we've been ignorant of their value."
- R. Buckminster Fuller

Thirukural : Adakkamudaimai - 3

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

மு.வ உரை உரை:
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

கலைஞர் உரை:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

Explanation:
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.

Thought for Today

"Ideas in secret die. They need light and air or they starve to death."
-Seth Godin

A Thought for Today

"Weakness of attitude becomes weakness of character."
- Albert Einstein

Thirukural : Adakkamudaimai - 2

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

மு.வ உரை உரை:
அடக்கத்தை உறுதி்ப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.

கலைஞர் உரை:
மிக்க உறுதி்யுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.

Explanation:
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.

Thought for Today

"I have never developed indigestion from eating my words."
- Winston Churchill

A Thought for Today

"Some are made modest by great praise, others insolent."
- Friedrich Nietzsche

Thirukural : Adakkamudaimai - 1

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

மு.வ உரை உரை:
அடக்கம் ஒருவனை உயர்த்தி்த் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதி்ருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

கலைஞர் உரை:
அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

Explanation:
Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

Thought for Today

"Myth: we have to save the earth. Frankly, the earth doesn't need to be saved. Nature doesn't give a hoot if human beings are here or not. The planet has survived cataclysmic and catastrophic changes for millions upon millions of years. Over that time, it is widely believed, 99 percent of all species have come and gone while the planet has remained. Saving the environment is really about saving our environment -- making it safe for ourselves, our children, and the world as we know it. If more people saw the issue as one of saving themselves, we would probably see increased motivation and commitment to actually do so."
-Robert M. Lilienfeld, management consultant and author (b. 1953) and William L. Rathje, archaeologist and author (b. 1945)

Thirukural : Naduvu nilaimai - 10

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

மு.வ உரை உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.

கலைஞர் உரை:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி் நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.

Explanation:
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.

A Thought for Today

"Talk low, talk slow and don't say too much."
- John Wayne

Thirukural : Naduvu nilaimai - 9

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

மு.வ உரை உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

கலைஞர் உரை:
நேர்மையும் நெஞ்சுறுதி்யும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி் பிறக்காது; அதுவே நீதி்.

Explanation:
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

Thought for Today

"Rhythm is something you either have or don't have, but when you have it, you have it all over."
- Elvis Presley

A Thought for Today

"One thing you can't hide - is when you're crippled inside."
- John Lennon

Thought for Today

"An empty stomach is not a good political adviser."
- Albert Einstein

Thirukural : Naduvu nilaimai - 8

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை உரை:
முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

கலைஞர் உரை:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:
முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதி்க்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதி்பதி்களுக்கு அழகாம்.

Explanation:
To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

A Thought for Today

"Art is always and everywhere the secret confession, and at the same time the immortal movement of its time"
- Karl Marx

Thought for today

"Please think about your legacy, because you're writing it every day."
-Gary Vaynerchuk

Thirukural : Naduvu nilaimai - 7

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

மு.வ உரை உரை:
நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

சாலமன் பாப்பையா உரை:
நீதி் என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

Explanation:
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

A Thought for Today

"For all of its faults, it gives most hardworking people a chance to improve themselves economically, even as the deck is stacked in favor of the privileged few. Here are the choices most of us face in such a system: Get bitter or get busy."
-Bill O Reilly

Thirukural : Naduvu nilaimai - 6

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

மு.வ உரை உரை:
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் நெஞ்சம் நீதி்யை விட்டுவிட்டு அநீதி் செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

Explanation:
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, I shall perish..

Thought for Today

"To my mind to kill in war is not a whit better than to commit ordinary murder."
-Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955)

A Thought for Today

"Safeguarding the rights of others is the most noble and beautiful end of a human being."
- Khalil Gibran

Thirukural : Naduvu nilaimai - 5

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

கலைஞர் உரை:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி் காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி் தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

Explanation:
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

Thought for Today

"I am dying from the treatment of too many physicians."
- Alexander the Great

Thirukural : Naduvu nilaimai - 4

தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும்.

மு.வ உரை உரை:
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

கலைஞர் உரை:
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி் தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
இவர் நீதி்யாளர், இவர் நீதி்யற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.

Explanation:
The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.

A Thought for Today

A ytrue friend never gets in your way unless you happens to be going Down.

Thought for Today

As a well spent day brings happy sleep, so life well used brings happy death.
-Leonardo da Vinci (1452-1519)

Thirukural : Naduvu nilaimai - 3

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

மு.வ உரை உரை:
தீமை பயக்காமல் நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்.

கலைஞர் உரை:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நன்மையே தருவதாக இருந்தாலும் நீதி்யை விட்டு விலகுவதால் வரும் லாபத்தை, அப்பொழுதே விட்டு விடுக.

Explanation:
Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.

A Thought for Today

"One of the penalties for refusing to participate in politics is that you end up being governed by your inferiors."
- Plato

Thought for Today

"The doorstep to the temple of wisdom is a knowledge of our own ignorance."
- Benjamin Franklin

Thirukural : Naduvu Nilaimai - 2

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்தி்ற் கேமாப்பு உடைத்து.

மு.வ உரை உரை:
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதி்யான நன்மை தருவதாகும்.

கலைஞர் உரை:
நடுவுநிலையாளனின் செல்வத்தி்ற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நீதி்யை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

Explanation:
The wealth of the man of rectitude will not perish, but will bring happiness also to his posterity.

A Thought for Today

"Holding on to anything is like holding on to your breath. You will suffocate. The only way to get anything in the physical universe is by letting go of it. Let go & it will be yours forever."
- Deepak Chopra

Thought for Today

"The winners in life think constantly in terms of I can, I will, and I am. Losers, on the other hand, concentrate their waking thoughts on what they should have or would have done, or what they can't do."
-Dennis Waitley

Thirukural : Naduvu Nilaimai - 1

தகுதி் எனவொன்று நன்றே பகுதி்யால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

மு.வ உரை உரை:
அந்தந்தப் பகுதி்தோறும் முறையோடு பொருந்தி் ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.

கலைஞர் உரை:
பகைவர், அயலார், நண்பர் எனப்பகுத்துப் பார்த்து ஒருதலைச் சார்பாக நிற்காமல் இருத்தலே நன்மை தரக்கூடிய நடுவுநிலைமை எனும் தகுதி்யாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி் தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

Explanation:
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.

A Thought for Today

"I do not feel obliged to believe that the same God who has endowed us with sense, reason, and intellect has intended us to forgo their use."
-Galileo Galilei, physicist and astronomer (1564-1642)

Thirukural : seinandri arithal - 10

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை  செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

மு.வ உரை உரை:
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.

கலைஞர் உரை:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

Explanation:
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

Thought for Today

"I may not be better than other people, but at least I'm different."
- Jean-Jacques Rousseau

A Thought for Today

"If your business is only to sweep a crossing, remember it is your duty to make that crossing the best swept of the world."
- Visvesvaraya

Thought for Today

"Those are my principles, and if you don't like them...well I have others."
- Groucho Marx

Thirukural : seinandri arithal - 9

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

மு.வ உரை உரை:
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

Explanation:
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.

Thought for Today

"Success is doing ordinary things extraordinarily well."
- Jim Rohn

A Thought for Today

"When you jump for joy, beware that no one moves the ground from beneath your feet."
- Stanislaw Jerzy Lec

Thirukural : seinandri arithal - 8

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

மு.வ உரை உரை:
ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.

கலைஞர் உரை:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்தி்ருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்.

Explanation:
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).

Thought for Today

"Sometimes when you innovate, you make mistakes. It is best to admit them quickly and get on with improving your other innovations"
-Steve Jobs

A Thought for Today

"To be honest, one must be inconsistent."
- H.G. Wells

A Thought for Today

"A good idea is never lost. Even though its originator or possessor may die without publicizing it, it will someday be reborn in the mind of another...."
- Thomas A. Edison

Thought for Today

Success introduces you to the world,
Failure introduces the World to you.

Thirukural : Seinandri Arithal - 7

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

மு.வ உரை உரை:
தம்முடைய துன்பத்தைப் போக்கி உதவியவரின் நட்பைப் பல்வேறு வகையான பிறவியிலும் மறவாமல் போற்றுவர் பெரியோர்.

கலைஞர் உரை:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்தி்ச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

சாலமன் பாப்பையா உரை:
தம் துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு பிறப்பிலும் நல்லவர் எண்ணுவர்.

Explanation:
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.

A Thought for Today

"The control of a large force is the same principle as the control of a few men: it is merely a question of dividing uptheir numbers."
- Sun Tzu

Thought for Today

"Music with dinner is an insult, both to the cook and the violinist."
- G.K Chesterton

Thirukural : seinandri arithal - 6

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

மு.வ உரை உரை:
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தி்ல் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

கலைஞர் உரை:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தி்ல் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே.

Explanation:
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.

A Thought for Today

"One of the things I learned when I was negotiating was that until I changed myself, I could not change others."
- Nelson Mandela

Thought for Today

"The worst form of inequality is to try to make unequal things equal."
- Aristotle

Thirukural : seinandri arithal - 5

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

மு.வ உரை உரை:
கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

கலைஞர் உரை:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதி்ல்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதி்ப்பிடப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவர் நமக்குச் செய்த உதவிக்குத் தி்ரும்ப நாம் செய்வது, அவர் செய்த உதவியின் காரணம், பொருள், காலம் பார்த்து அன்று; உதவியைப் பெற்ற நம் பண்பாட்டுத் தகுதி்யே அதற்கு அளவாகும்.

Explanation:
The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.

A Thought for Today

"Never interrupt your enemy when he is making a mistake."
-Napoleon Bonaparte

Thirukural : Iniyavai kooral - 5

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

மு.வ உரை உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.

கலைஞர் உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:
தகுதி்க்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Explanation:
Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

Thought for Today

"So long as the memory of certain beloved friends lives in my heart, I shall say that life is good."
- Helen Keller

A Thought for Today

"The human race has one really effective weapon, and that is laughter."
- Mark Twain

Thought for Today

"One must ask children and birds how cherries and strawberries taste."
- Johann Wolfgang von Goethe

Thirukural : seinandri arithal - 4

தி்னைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

மு.வ உரை உரை:
ஒருவன் தி்னையளவாகிய உதவியைச் செய்த போதி்லும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.

கலைஞர் உரை:
ஒருவர் செய்யும் தி்னையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

சாலமன் பாப்பையா உரை:
தி்னை அளவாக மிகச் சிறிய உதவியே செய்யப்பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர் அதைப் பனை அளவு மிகப் பெரிய உதவியாய்க் கருதுவர்.

Explanation:
Though the benefit conferred be as small as a millet seed, those who know its advantage will consider it as large as a palmyra fruit.

Thought for Today

There is no agony like bearing an untold story inside of you.
 -Maya Angelou, poet (b. 1928)

A Thought for Today

"All truth passes through three stages. First, it is ridiculed. Second, it is violently opposed. Third, it is accepted as being self-evident."
- Arthur Schopenhauer

Thirukural : seinandri arithal - 3

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

மு.வ உரை உரை:
இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும்.

கலைஞர் உரை:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

சாலமன் பாப்பையா உரை:
இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

Explanation:
If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea.

Thought for Today

"Poverty is uncomfortable; but nine times out of ten the best thing that can happen to a young man is to be tossed overboard and compelled to sink or swim."
- James A Garfield

Thirukural : Seinandri arithal - 2

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

மு.வ உரை உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.

கலைஞர் உரை:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
நமக்கு நெருக்கடியான நேரததில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்த பூமியை விட மிகப் பெரியதாகும்.

Explanation:
A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.

A Thought for Today

"We still do not know one thousandth of one percent of what nature has revealed to us."
- Albert Einstein

Thought for Today

"Content makes poor men rich; discontent makes rich men poor."
- Benjamin Franklin

Thirukural : Seinandri arithal - 1

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

மு.வ உரை உரை:
தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

கலைஞர் உரை:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும், அவர் நமக்கு உதவினால், அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது.

Explanation:
(The gift of) heaven and earth is not an equivalent for a benefit which is conferred where none had been received.

A Thought for Today

"Man's real life is happy, chiefly because he is ever expecting that it soon will be so."
- Edgar Allan Poe

Thought for Today

"It's the possibility of having a dream come true that makes life interesting."
- Paulo Coelho

Thirukural : iniyavai kooral - 10

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

மு.வ உரை உரை:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

கலைஞர் உரை:
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத தின்பதற்குச் சமமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மனதிற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.

Explanation:
To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is riped ones available.

A Thought for Today

"How many things there are concerning which we might well deliberate whether we had better know them."
- Henry David Thoreau