For this Day:

;

Thirukural : Naduvu nilaimai - 5

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

மு.வ உரை உரை:
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.

கலைஞர் உரை:
ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி் காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி் தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

Explanation:
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).

No comments: