For this Day:

;

Thirukural : Naduvu nilaimai - 9

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

மு.வ உரை உரை:
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.

கலைஞர் உரை:
நேர்மையும் நெஞ்சுறுதி்யும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

சாலமன் பாப்பையா உரை:
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி் பிறக்காது; அதுவே நீதி்.

Explanation:
Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.

No comments: