For this Day:

;

Thirukural : Kelvi - 9

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.

மு.வ உரை உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் செ?ற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதி்யான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.

Explanation:
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.

No comments: