For this Day:

;

Thirukural : Therinthu vinaiyaadal - 3

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்  நன்குடையான் கட்டே தெளிவு.

மு.வ உரை உரை:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

கலைஞர் உரை:
அன்பு, அறிவு, செயலாற்றும் தி்றமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்.

சாலமன் பாப்பையா உரை:
நிர்வாகத்தி்ன்மேல் அன்பு, நிர்வாகத்தி்ற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி், பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.

Explanation:
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.

No comments: