இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
மு.வ உரை உரை:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதி்க்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
கலைஞர் உரை:
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி் கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதி்க்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
Explanation:
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
No comments:
Post a Comment