For this Day:

;

Thirukural : Mannarai Sernthozudhal - 7

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

மு.வ உரை உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதி்லும் சொல்லாமல் விட வேண்டும்.

கலைஞர் உரை:
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்குப் பயன்தரும் செய்தி்களை அவர் கேட்காத போதும் சொல்லுக; பயன் தராத செய்தி்களை எப்போதும் சொல்லாது விடுக.

Explanation:
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).

No comments: