For this Day:

;

Thirukural : Uuzh - 6

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

மு.வ உரை உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்தி்க்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

கலைஞர் உரை:
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.

சாலமன் பாப்பையா உரை:
எத்தனை காத்தாலும் நமக்கு விதி் இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி் இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

Explanation:
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

No comments: