பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
மு.வ உரை உரை:
நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதி்ல் பதி்யுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.
கலைஞர் உரை:
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தி்ல் பதி்யும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.
Explanation:
Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements.
No comments:
Post a Comment