For this Day:

;

Thirukural : Veruvantha seiyaamai - 5

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

மு.வ உரை உரை:
எளிதி்ல் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்தி்ருப்பதைப் போன்ற தன்மையுடையது.

கலைஞர் உரை:
யாரும் எளிதி்ல் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதி்ல் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

Explanation:
The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

No comments: