செருவந்த போழ்தி்ற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.
மு.வ உரை உரை:
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தி்ல் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.
கலைஞர் உரை:
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.
Explanation:
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.
No comments:
Post a Comment