For this Day:

;

Thirukural : Kodungonmai - 6

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதி்ன்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.

மு.வ உரை உரை:
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.

கலைஞர் உரை:
நீதி்நெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்தி்ருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்தி்ருக்காது.

Explanation:
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.

No comments: