"Money is like manure. You have to spread it around or it smells."
- J Paul Getty
For this Day:
A Thought for Today
"The greatest discovery of all time is that a person can change his future by merely changing his attitude."
- Oprah Winfrey
Thirukural : Pochaavamai - 10
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
மு.வ உரை உரை:
ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதி்யதை அடைதல் எளிதாகும்.
கலைஞர் உரை:
கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதி்ல் வெற்றி காண்பதி்லேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.
Explanation:
It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it with relentless efforts.
Thirukural : Pochaavamai - 9
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
மு.வ உரை உரை:
தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்தி்ருக்கும் போது, அவ்வாறு சோர்ந்தி்ருந்த காரணத்தால் முற்காலத்தி்ல் அழிந்தவரை நினைக்க வேண்டும்.
கலைஞர் உரை:
மமதையால் பூரித்துப்போய்க் கடமைகளை மறந்தி்ருப்பவர்கள், அப்படி மறந்துபோய் அழிந்து போனவர்களை நினைத்துப் பார்த்துத திருந்திக்்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மகிழ்ச்சியில் மனவலிமை பெறும்பொழுது எல்லாம் முற்காலத்தி்ல் மகிழ்ச்சியால் மறதி் கொண்டு அழிந்தவர்களை நினைவிற் கொள்க.
Explanation:
Let (a king) think of those who have been ruined by neglect, when his mind is elated with joy.
A Thought for Today
"Sometimes we are less unhappy in being deceived by those we love, than in being undeceived by them."
- Lord Byron
Thought for Today
"Only he can take great resolves who has indomitable faith in God and has fear of God."
- Mahatma Gandhi
Thirukural : Pochaavamai - 8
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
மு.வ உரை உரை:
சான்றோர் புகழ்ந்து சொல்லியச் செயல்களைப் போற்றிச் செய்யவேண்டும், அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவர்க்கு ஏழுப் பிறப்பிலும் நன்மை இல்லை.
கலைஞர் உரை:
புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்தி்டல் வேண்டும். அப்படிச் செய்யாமல் புறக்கணிக்கப்பவர்களுக்கு வாழ்க்கையில் உயர்வே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
உயர்ந்தோர் புகழ்ந்து சொன்னவற்றை விரும்பிக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்க மறந்தவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
Explanation:
Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects and fails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.
A Thought for Today
"Do just once what others say you can't do, and you will never pay attention to their limitations again."
- James R. Cook
Thirukural : Pochaavamai - 7
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
மு.வ உரை உரை:
மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
கலைஞர் உரை:
மறதி்யில்லாமலும், அக்கறையுடனும் செயல்பட்டால், முடியாதது என்று எதுவுமே இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மறதி் இல்லாத மனத்தால் எண்ணிச் செய்தால் ஒருவருக்குச் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.
Explanation:
There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinching endeavour.
Thirukural : Pochaavamai - 6
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
மு.வ உரை உரை:
யாரிடத்தி்லும் எக்காலத்தி்லும் மறந்தும்் சோர்திருக்காதத்தன்மை தவறாமல் பொருந்தி்யிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
கலைஞர் உரை:
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தி்யிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
எவரிடத்தி்லேனும் எப்போதும் விடாமல் மறதி் இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.
Explanation:
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons.
Thirukural : Pochaavamai - 5
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்.
மு.வ உரை உரை:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.
கலைஞர் உரை:
முன்கூட்டியே சிந்தி்த்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.
சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்தி்ருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.
Explanation:
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.
Thirukural : Pochaavamai - 4
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
மு.வ உரை உரை:
உள்ளத்தி்ல் அச்சம் உடையவர்க்குப் புறத்தி்லே அரண் இருந்து பயன் இல்லை, அதுபோல் மறதி் உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.
கலைஞர் உரை:
பயத்தி்னால் நடுங்குகிறவர்களுக்குத் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்கான அரண் கட்டப்பட்டிருந்தாலும் எந்தப் பயனுமில்லை. அதைப் போலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி் உடையவர்களுக்கு அந்த நிலையினால் எந்தப் பயனுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் பயம் உள்ளவர்க்கு எத்தகைய பாதுகாப்பாலும் பயன் இல்லை. அதுபோலவே மறதி் உடையவர்க்கும் பாதுகாப்பால் பயன் இல்லை.
Explanation:
Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so the thoughtless has no good (whatever advantages he may possess).
Thirukural : Pochaavamai - 3
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
மு.வ உரை உரை:
மறதி்யால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தி்ல் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
கலைஞர் உரை:
மறதி் உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறதி்யை உடையவர்க்குப் புகழ் உடைமை இல்லை; இது இவ்வுலகத்தி்ல் எந்தத் துறை நுகர்வோர்க்கும் முடிவான கருத்தாகும்.
Explanation:
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Thirukural : Pochaavaamai - 2
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
மு.வ உரை உரை:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி்க் கொன்று விடும்.
கலைஞர் உரை:
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி், புகழை அழித்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி் புகழைக் கெடுத்துவிடும்.
Explanation:
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.
Thirukural : Pochaavamai - 1
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
மு.வ உரை உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்தி்ருக்கும் போது மறதி்யால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
கலைஞர் உரை:
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி்,அடங்காத சினத்தி்னால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி், அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
Explanation:
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy.
Thirukural : Sengonmai - 10
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்.
மு.வ உரை உரை:
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.
கலைஞர் உரை:
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
Explanation:
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.
A Thought for Today
"I am not in this world to live up to other people's expectations, nor do I feel that the world must live up to mine."
- Fritz Perls
Thought for Today
"Drag your thoughts away from your troubles... by the ears, by the heels, or any other way you can manage it"
- Mark Twain
Thirukural : Sengonmai - 9
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
மு.வ உரை உரை:
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.
கலைஞர் உரை:
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.
Explanation:
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
Thirukural : Sengonmai - 8
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
மு.வ உரை உரை:
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி் முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
கலைஞர் உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி் வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி் தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி் தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி் வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தி்த் தானே அழிவான்.
Explanation:
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
A Thought for Today
"When I was young, I observed that nine out of ten things I did were failures. So I did ten times more work."
- George Bernard Shaw
Thirukural : Sengonmai - 7
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
மு.வ உரை உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதி்முறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
கலைஞர் உரை:
நீதி் வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதி்யே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
Explanation:
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
Thirukural : Sengonmai - 6
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
மு.வ உரை உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதி்ருக்குமாயின்.
கலைஞர் உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதி்ருக்க வேண்டும்.
Explanation:
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
Thought for Today
"When we strive to become better than we are, everything around us becomes better too."
-Paulo Coelho
A Thought for Today
"Justice that love gives is a surrender, justice that law gives is a punishment."
- Mahatma Gandhi
Thirukural : Sengonmai - 5
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
மு.வ உரை உரை:
நீதி் முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
கலைஞர் உரை:
நீதி் வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தி்ல் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அரச நீதி்நூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.
Explanation:
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
A Thought for Today
"Men think highly of those who rise rapidly in the world; whereas nothing rises quicker than dust, straw, and feathers."
- Lord Byron
Thought for Today
"This is the highest wisdom that I own; freedom and life are earned by those alone who conquer them each day anew."
- Johann Wolfgang von Goethe
A Thought for Today
"I never called my work an 'art' It's part of show business, the business of building entertainment."
- Walt Disney
Thirukural : Sengonmai - 4
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
மு.வ உரை உரை:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி் உலகம் நிலை பெறும்.
கலைஞர் உரை:
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்களை அணைத்துக் கொண்டு, நேர்மையான ஆட்சியை நடத்தும் சிறந்த ஆட்சியாளரின் கால்களைச் சுற்றியே மக்கள் வாழ்வர்.
Explanation:
The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
Thirukural : Sengonmai - 3
அந்தணர் நூற்கும் அறததிற்்கும் ஆதி்யாய்
நின்றது மன்னவன் கோல்.
மு.வ உரை உரை:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்தி்ற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
கலைஞர் உரை:
ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்தி்ற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
Explanation:
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
Thirukural : Sengonmai - 2
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
மு.வ உரை உரை:
உலகத்தி்ல் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
கலைஞர் உரை:
உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
உயிர்கள் எல்லாம் மழையை எதிர்பார்த்தே வாழும்; குடிமக்களோ ஆளுவோரின் நேர்மையான ஆட்சியை எதி்ர்பார்த்தே வாழ்வர்.
Explanation:
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
A Thought for Today
"A market is never saturated with a good product, but it is very quickly saturated with a bad one."
- Henry Ford
Thought for Today
"What a distressing contrast there is between the radiant intelligence of the child and the feeble mentality of the average adult."
- Sigmund Freud
Thought for Today
"What a distressing contrast there is between the radiant intelligence of the child and the feeble mentality of the average adult."
- Sigmund Freud
Thirukural : Sengonmai - 1
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
மு.வ உரை உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமைப் பொருத்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.
கலைஞர் உரை:
குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்கள் செய்யும் குற்றத்தை ஆய்ந்து எவரிடத்தும் விருப்பு, வெறுப்பு இல்லாமல், நடுநிலையோடு நூல்வழி ஆராய்ந்து, குற்றததிற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதே நேர்மையான ஆட்சி.
Explanation:
To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.
Thirukural : Kodungonmai - 10
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
மு.வ உரை உரை:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
கலைஞர் உரை:
ஓர் அரசு நாட்டை முறைப்படி காக்கத் தவறினால் ஆக்கப்பணிகள் எதுவும் நடக்காது; முக்கியமான தொழில்களும் தேய்ந்து விடும்.
சாலமன் பாப்பையா உரை:
காவல் செய்யவேண்டிய ஆட்சியாளர் மக்களைக் காவாத, போனால், அறனற்ற அவர் நாட்டில் பால் வளம் குறையும். ஞானியர் நூல்களை மறந்துவிடுவர்.
Explanation:
If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.
Thirukural : Kodungonmai - 9
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
மு.வ உரை உரை:
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
கலைஞர் உரை:
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் நீதி் தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
Explanation:
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.
Thought for Today
"Winning is not a sometime thing; it's an all time thing. You don't win once in a while, you don't do things right once in a while, you do them right all the time. Winning is habit. Unfortunately, so is losing."
- Vince Lombardi
Thirukural : Kodungonmai - 8
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின்.
மு.வ உரை உரை:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
கலைஞர் உரை:
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.
சாலமன் பாப்பையா உரை:
தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.
Explanation:
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.
Thought for Today
"I've found that small wins, small projects, small differences often make huge differences."
- Rosabeth Moss Kanter
Thirukural : Kodungonmai - 7
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
மு.வ உரை உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான், நீதி்முறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
கலைஞர் உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் பூமியைக் காப்பர்; அவரையோ அவரது குறையற்ற நேர்மையான ஆட்சி காக்கும்.
Explanation:
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
Thirukural : Kodungonmai - 6
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதி்ன்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
மு.வ உரை உரை:
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
கலைஞர் உரை:
நீதி்நெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர்க்குப் புகழ் நிலைத்தி்ருக்கக் காரணம் நேர்மையான ஆட்சியே. அந்த ஆட்சி இல்லை என்றால் புகழும் நிலைத்தி்ருக்காது.
Explanation:
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.
Thought for Today
"Many men go fishing all of their lives without knowing that it is not fish they are after."
- Henry David Thoreau
A Thought for Today
"The first forty years of life give us the text; the next thirty supply the commentary on it."
- Arthur Schopenhauer
Thirukural : Kodungonmai - 5
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
மு.வ உரை உரை:
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
கலைஞர் உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.
Explanation:
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth.
Thought for Today
"To become different from what we are, we must have some awareness of what we are."
- Eric Hoffer
A Thought for Today
"Once you have had a glimpse of awareness or Presence, you know it firsthand. It is no longer just a concept in your mind."
- Eckhart Tolle
Thirukural : Kodungonmai - 4
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
மு.வ உரை உரை:
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
கலைஞர் உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
மேல்வருவதை எண்ணாது, தவறாக ஆள்பவன் தன் செல்வத்தையும், செல்வம் தரும் குடிமக்களையும் சேர்ந்தே இழந்துவிடுவான்.
Explanation:
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.
Thirukural : Kodungonmai - 3
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
மு.வ உரை உரை:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
கலைஞர் உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டில் நடக்கும் தீமைகளை நாளும் பார்த்து, ஆராய்ந்து, ஏற்று நீதியை வழங்காத ஆட்சியாளன் தன் பதவியை நாளும் இழப்பான்.
Explanation:
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.
Thirukural : Kodungonmai - 2
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
மு.வ உரை உரை:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி் நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
கலைஞர் உரை:
ஆட்சிக்கோல் ஏந்தி்யிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதி்காரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்தி்ய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.
Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says give up your wealth.
A Thought for Today
Satire is a sort of glass, wherein beholders do generally discover everybody's face but their own, which is the chief reason for that kind of reception it meets in the world, and that so very few are offended with it.
-Jonathan Swift, satirist (1667-1745)
Thought for Today
"Art is always and everywhere the secret confession, and at the same time the immortal movement of its time."
- Karl Marx
A Thought for Today
"Most people have no idea of the giant capacity we can immediately command when we focus all of our resources on mastering a single area of our lives."
- Tony Robbins
Thirukural : - 1
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து.
மு.வ உரை உரை:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
கலைஞர் உரை:
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குடிமக்களின் பொருள்மீது ஆசை கொண்டு அவர்களைத் துன்புறுத்தி்த் தவறாக ஆளும் அரசு பகைகொண்டு பிறரைக் கொலை செய்பவரைக் காட்டிலும் கொடியது.
Explanation:
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.
Thirukural : Veruvantha seiyaamai - 10
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
மு.வ உரை உரை:
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்தி்ற்கு சுமை வேறு இல்லை.
கலைஞர் உரை:
கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும். அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.
சாலமன் பாப்பையா உரை:
மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி் நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.
Explanation:
The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).