For this Day:

;

Thirukural : Kaalamaridhal - 7

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

மு.வ உரை உரை:
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தி்ல் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தி்ல் சினம் கொள்வார்.

கலைஞர் உரை:
பகையை வீழ்த்தி்ட அகத்தி்ல் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்தி்ருப்பதே அறிவுடையார் செயல்.

சாலமன் பாப்பையா உரை:
தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்தி்ற்குள் வைத்தி்ருப்பர்.

Explanation:
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

No comments: