For this Day:

;

Thirukural : - 10

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

மு.வ உரை உரை:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தி்ன் அளவு விரைவில் கெடும்.

கலைஞர் உரை:
தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:
பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தி்ன் அளவு, விரைவில் கெடும்.

Explanation:
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

A Thought for Today

"Manners, - the final and perfect flower of noble character."
- William Winter 

Thought for Today

Don't judge men's wealth or godliness by their Sunday appearance.
 -Benjamin Franklin, statesman, author, and inventor (1706-1790) 

A Thought for Today

"The opportunities of man are limited only by his imagination. But so few have imagination that there are ten thousand fiddlers to one composer."
- Charles Kettering

Thirukural : Valiyaridhal - 9

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

மு.வ உரை உரை:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

கலைஞர் உரை:
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் தி்ட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் சொத்தி்ன் மதி்ப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

Explanation:
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

Thirukural : Valiyaridhal - 8

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

மு.வ உரை உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

கலைஞர் உரை:
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதி்ல்லை.

சாலமன் பாப்பையா உரை:
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

Explanation:
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

Thought for Sunday

"Do not let Sunday be taken from you. If your soul has no Sunday, it becomes an orphan. "
- Albert Schweitzer

Thirukural : Valiyaridhal - 7

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

மு.வ உரை உரை:
தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

கலைஞர் உரை:
வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

Explanation:
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

A Thought for Today

"Talent is God given. Be humble.
Fame is man-given. Be grateful.
Conceit is self-given. Be careful."
-DavidRoads

Thirukural : Valiyaridhal - 6

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

மு.வ உரை உரை:
ஒரு மரத்தி்ன் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

கலைஞர் உரை:
தன்னைப்பற்றி அதி்கமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதி்க்கு ஆளாவார்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

Explanation:
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

Thought for Today

"Character develops itself in the stream of life."
- Johann Wolfgang von Goethe

A Thought for Today

"But what is Hope? Nothing but the paint on the face of Existence; the least touch of truth rubs it off, and then we see what a hollow-cheeked harlot we have got hold of."
- Lord Byron

Thirukural : Valiyaridhal - 5

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மு.வ உரை உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதி்யாக ஏற்றினால் அச்சு முறியும்.

கலைஞர் உரை:
மயில் இறகாக இருந்தாலும்கூட அதி்கமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதி்கமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

Explanation:
The axle tree of a cart (bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

Thirukural : Valiyaridhal - 4

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மு.வ உரை உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதி்த்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

கலைஞர் உரை:
மற்றவர்களை மதி்க்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்தி்க் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

Explanation:
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

A Thought for Today

"People often say motivation doesn't last. Neither does bathing—that's why we recommend it daily."
-Zig Zagglar

Thought for Today

"The one exclusive sign of thorough knowledge is the power of teaching."
- Aristotle

A Thought for Today

"Where ignorance is our master, there is no possibility of real peace."
- Dalai Lama

Thirukural : Valiyaridhal - 3

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தி்ன் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

மு.வ உரை உரை:
தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

கலைஞர் உரை:
தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தி்ல் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

Explanation:
There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

Thought for Today

The pessimist complains about the wind;
the optimist expects it to change;
the realist adjusts the sails."

-William Arthur Ward

Thirukural : Valiyaridhal - 2

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

மு.வ உரை உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தி்த்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

Explanation:
There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

Thirukural : Valiyaridhal -1

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

மு.வ உரை உரை:
செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

கலைஞர் உரை:
செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதி்ர்க்கும் எதி்ரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

Explanation:
Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

A Thought for Today

"No matter how good an idea sounds, test it first."
- Henry Bloch

Thirukural : Kaalamaridhal - 10

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

மு.வ உரை உரை:
பொறுத்தி்ருக்கும் காலத்தி்ல் கொக்குப் போல் அமைதி்யாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

கலைஞர் உரை:
காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்தி்ருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தி்ல் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்தி்ப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Explanation:
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.

Mahatma Gandhi's Thought for Today

"Constant development is the law of life, and a man who always tries to maintain his dogmas in order to appear consistent drives himself into a false position."
- Mahatma Gandhi

Thought for Today

"Better a diamond with a flaw than a pebble without."
- Confucius

Thirukural : Kaalamaridhal - 9

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

மு.வ உரை உரை:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி்க் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:
கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்தி்க் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

Explanation:
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).

Thirukural : Kaalamaridhal - 8

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

மு.வ உரை உரை:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

கலைஞர் உரை:
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்தி்டும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

Explanation:
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily brought low.

A Thought for Today

In some circumstances, the refusal to be defeated is a refusal to be educated. 
-Margaret Halsey, novelist (1910-1997) 

Thought for Today

"Guilt: punishing yourself before God doesn't."
- Alan Cohen

A Thought for Today

"Men are more moral than they think and far more immoral than they can imagine."
- Sigmund Freud

Thirukural : Kaalamaridhal - 7

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

மு.வ உரை உரை:
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தி்ல் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தி்ல் சினம் கொள்வார்.

கலைஞர் உரை:
பகையை வீழ்த்தி்ட அகத்தி்ல் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்தி்ருப்பதே அறிவுடையார் செயல்.

சாலமன் பாப்பையா உரை:
தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்தி்ற்குள் வைத்தி்ருப்பர்.

Explanation:
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.

A Thought for Today

"Restlessness is discontent and discontent is the first necessity of progress. Show me a thoroughly satisfied man and I will show you a failure."
- Thomas A Edison

Thought for Today

"A person who can write a long letter with ease, cannot write ill."
- Jane Austen

Thirukural : Kaalamaridhal - 6

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

மு.வ உரை உரை:
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதி்ர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

கலைஞர் உரை:
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி் படைத்தவர்கள் அமைதி்யாக இருப்பது அச்சத்தி்னால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்தி்ருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

Explanation:
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.

A Thought for Today

You can't do anything about the length of your life, but you can do something about its width and depth. 

-H.L. Mencken, writer, editor, and critic (1880-1956) 

Thirukural : Kaalamaridhal - 5

காலம் கருதி் இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

மு.வ உரை உரை:
உலகத்தைக் கொள்ளக் கருதி்கின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதி்க்கொண்டு பொறுத்தி்ருப்பர்.

கலைஞர் உரை:
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதி்ர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

Explanation:
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.

Thought for Today

"I challenge you to make your life a masterpiece. I challenge you to join the ranks of those people who live what they teach, who walk their talk."
- Tony Robbins

A Thought for Today

"The learning and knowledge that we have, is, at the most, but little compared with that of which we are ignorant."
- Plato

Thirukural : Idanarithal - 4

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

மு.வ உரை உரை:
தக்க இடத்தை அறிந்து பொருந்தி்யவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

கலைஞர் உரை:
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தி்ல் தோல்வி அடைவர்.

Explanation:
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

Bhagavad Gita Quote

"Attached action is selfish work that produces Karmic bondage."
-Sri Krishna in Bhagavad Gita

Thought for Today

"Perhaps I know best why it is man alone who laughs; he alone suffers so deeply that he had to invent laughter."
- Friedrich Nietzsche

A Thought for Today

"Money isn't the most important thing in life, but it's reasonably close to oxygen on the "gotta have it" scale."
- Zig Ziglar

Thirukural : Kaalamaridhal - 3

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற?ந்து செயின்.

மு.வ உரை உரை:
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

கலைஞர் உரை:
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற தி்றமைகளுடனும் தந்தி்ரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

Explanation:
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

Thirukural : Kaalamaridhal - 2

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் தி்ருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

மு.வ உரை உரை:
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

கலைஞர் உரை:
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

Explanation:
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).

Thought for Today

"I not only use all the brains that I have, but all that I can borrow."
- Woodrow Wilson

A Thought for Today

"Learning never exhausts the mind."
- Leonardo da Vinci

Thirukural : Kaalamaridhal - 1

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

மு.வ உரை உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

கலைஞர் உரை:
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதி்ரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

Explanation:
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.

A Thought for Today

"From the deepest desires often come the deadliest hate."
- Socrates

Thought for Today

"What is not started today is never finished tomorrow."
- Johann Wolfgang von Goethe

Thirukural : Idanarithal - 10

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

மு.வ உரை உரை:
வேல் ஏந்தி்ய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நில்த்தி்ல் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.

கலைஞர் உரை:
வேலேந்தி்ய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை, சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும்.

சாலமன் பாப்பையா உரை:
பாகனுக்கு அடங்காததும், தன்னை எதி்ர்த்துப் பிடித்த வீரனைத் தன் தந்தத்தால் தாக்கித் தூக்கியதுமான ஆண்யானை, கால் புதையும் சேற்றில் சிக்கிக் கொண்டால், நரிகூட அதைக் கொன்றுவிடும்.

Explanation:
A fox can kill a fearless, warrior-faced elephant, if it go into mud in which its legs sink down.

A Thought for Today

"The value of an idea lies in the using of it."
- Thomas A Edison

Thirukural : Idanarithal - 9

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

மு.வ உரை உரை:
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்தி்ற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

கலைஞர் உரை:
பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதி்ருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்தி்ற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

சாலமன் பாப்பையா உரை:
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்தி்ற்கே சென்று தாக்குவது கடினம்.

Explanation:
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.

Thirukural : Idanarithal - 7

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

மு.வ உரை உரை:
(செய்யும் வழிவகைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தி்ல் பொருந்தி்ச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதி்ல்லை.

கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தி்த்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.

சாலமன் பாப்பையா உரை:
செய்யும் செயலை இடைவிடாமல் எண்ணி, இடம் அறிந்து செயதால், பகைக்குப் பயப்படாத மனஉறுதி் போதும்; வேறு துணை தேவை இல்லை.

Explanation:
You will need no other aid than fearlessness, if you thoroughly reflect (on what you are to do), and select (a suitable) place for your operations.

Thought for Today

"Wealth is like sea-water; the more we drink, the thirstier we become; and the same is true of fame."
- Arthur Schopenhauer

A Thought for Today

"What prudent merchant will hazard his fortunes in any new branch of commerce when he knows not that his plans may be rendered unlawful before they can be executed?"
- James Madison

Thirukural : Idanarithal - 8

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

மு.வ உரை உரை:
சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தி்ல் பொருந்தி் நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

கலைஞர் உரை:
சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தி்ல் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும.்

Explanation:
The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act.

A Thought for Today

"There are two things children should get from their parents:
Roots and Wings."
- Goethe

Thirukural : Idanarithal - 6

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

மு.வ உரை உரை:
வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தி்ல் ஓடமுடியாது.

கலைஞர் உரை:
ஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தி்ல் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர்கள் கடலில் ஒடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தி்ல் ஓடமாட்டா.

Explanation:
Wide chariots, with mighty wheels, will not run on the ocean; neither will ships that traverse the ocean, move on the earth.

Thought for Today


Lead your life like a Dictionary;

Provide meaning to only those who refer you.

A Thought for Today

"It is a waste of energy to be angry with a man who behaves badly, just as it is to be angry with a car that won't go."
- Bertrand Russell

Thirukural : Idanarithal - 5

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.

மு.வ உரை உரை:
ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

கலைஞர் உரை:
தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

Explanation:
In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it.

Thirukural : Idanarithal - 4

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.

மு.வ உரை உரை:
தக்க இடத்தை அறிந்து பொருந்தி்யவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

கலைஞர் உரை:
ஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஏற்ற இடத்தை அறிந்து அதைச் சூழ்ந்து செயல் செய்வார் என்றால், அவரை வெல்ல எண்ணிய பகைவர். அவ் எண்ணத்தி்ல் தோல்வி அடைவர்.

Explanation:
If they who draw near (to fight) choose a suitable place to approach (their enemy), the latter, will have to relinquish the thought which they once entertained, of conquering them.

Thirukural : Idanarithal - 3

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.

மு.வ உரை உரை:
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்தி்ற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்.

கலைஞர் உரை:
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதி்னால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

Explanation:
Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies.

Thirukural : Idanarithal - 2

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

மு.வ உரை உரை:
மாறுபாடு பொருந்தி்ய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி் ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

கலைஞர் உரை:
வரும்பகையை எதி்ர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.

Explanation:
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.

Thirukural : Therinthu Thelithal - 10

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

மு.வ உரை உரை:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:
ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தி்யபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

Explanation:
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.

A Thought for Today

"Wrinkles should merely indicate where smiles have been."
- Mark Twain

Thirukural : Idanarithal - 1

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.

மு.வ உரை உரை:
முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

கலைஞர் உரை:
ஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கருதாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவரை வளைத்து வெல்லும் இடத்தைக் காணும் முன் எந்தச் செயலையும் தொடங்க வேண்டா; பகைவரை அற்பர் என்று இகழவும் வேண்டா.

Explanation:
Let not (a king) despise (an enemy), nor undertake any thing (against him), until he has obtained (a suitable) place for besieging him.