For this Day:

;

Thirukural : Nandriyil selvam - 9

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.

மு.வ உரை உரை:
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி் அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

கலைஞர் உரை:
அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்தி்க் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்தி்டும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி், அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

Explanation:
Strangers will inherit the riches that have been acquired without regard for friendship, comfort and charity.

No comments: