For this Day:

;

Thirukural : Nandriyil selvam - 6


ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.

மு.வ உரை உரை:
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்தி்ற்கு ஒரு நோய் ஆவான்.

கலைஞர் உரை:
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

சாலமன் பாப்பையா உரை:
தானும் அனுபவிக்காமல், தகுதி்யானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.

Explanation:
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.

No comments: