கருமத்தால் நாணுதல் நாணுந் தி்ருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
மு.வ உரை உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
கலைஞர் உரை:
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.
சாலமன் பாப்பையா உரை:
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றெ?ன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
Explanation:
True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
No comments:
Post a Comment