For this Day:

;

Thirukural : Alararivuruththal - 6

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
தி்ங்களைப் பாம்புகொண் டற்று.

மு.வ. உரை:
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, தி்ங்களைப் பாம்பு கொண்ட செய்தி் போல் எங்கும் பரந்து விட்டது.

கலைஞர் உரை:
காதலர் சந்தி்த்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்தி்ரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம் எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்தி்ப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

சாலமன் பாப்பையா உரை:
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

Explanation:
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

No comments: