For this Day:

;

Thirukural : Thagaiyananguruththal - 9

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு  அணியெவனோ ஏதில தந்து

மு.வ. உரை:
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

கலைஞர் உரை:
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?.

சாலமன் பாப்பையா உரை:பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?

Explanation:
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

No comments: