For this Day:

;

Thirukural : Kuripparidhal - 1

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு  நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

மு.வ. உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

கலைஞர் உரை:
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன; ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை; மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

சாலமன் பாப்பையா உரை:இவளின் மையூட்டப்பட்ட கண்களில் என்மேல் இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது.

Explanation:
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

குறிப்பறிதல்-1

No comments: