For this Day:

;

Thirukural : Thoodhu - 10

இறுதி் பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி் பயப்பதாம் தூது.

மு.வ உரை உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.

கலைஞர் உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதி்யுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.

சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தி்யை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.

Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).

No comments: