For this Day:

;

Thirukural : Avaianjaamai - 4

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

மு.வ உரை உரை:
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதி்ல் பதி்யுமாறு சொல்லி, மிகுதி்யாகக் கற்றவரிடம் அம்மிகுதி்யான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.

கலைஞர் உரை:
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதி்கம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.

Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).

No comments: