For this Day:

;

Thirukural : Avaianjaamai - 2

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

மு.வ உரை உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதி்ல் பதி்யுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதி்த்துச் சொல்லப்படுவார்.

கலைஞர் உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தி்ல் பதி்யுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதி்த்துச் சொல்லப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் தி்றம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.

Explanation:
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.

No comments: