"Watch your manner of speech if you wish to develop a peaceful state of mind. Start each day by affirming peaceful, contented and happy attitudes and your days will tend to be pleasant and successful."
- Norman Vincent Peale
For this Day:
Thought for Today
Thirukural : Avaianjaamai - 7
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
மு.வ உரை உரை:
அவையினிடத்தி்ல் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தி்ல் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
கலைஞர் உரை:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்தி்ருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தி்ல் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
A Thought for Today
"Whoever benefits his enemy with straightforward intention that man's enemies will soon fold their hands in devotion."
- Henry Wadsworth Longfellow
Thought for Today
"Common looking people are the best in the world: that is the reason the Lord makes so many of them."
- Abraham Lincoln
Thirukural : Avaianjaamai - 6
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
மு.வ உரை உரை:
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
கலைஞர் உரை:
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சுறுதி் இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்தி்றம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?
Explanation:
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?
A Thought for Today
"Faced with what is right, to leave it undone shows a lack of courage."
- Confucius
Thought for Today
"Motivation is the art of getting people to do what you want them to do because they want to do it."
- Dwight D Eisenhower
Thirukural : Avaianjaamai - 5
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
மு.வ உரை உரை:
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
கலைஞர் உரை:
அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் தி்றமும் கற்றிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியோர் அவையில் பயப்படாமல் பதி்ல் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்தி்ரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
Explanation:
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
Thirukural : Avaianjaamai - 4
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
மு.வ உரை உரை:
கற்றவரின் முன் தான் கற்றவைகளை அவருடைய மனதி்ல் பதி்யுமாறு சொல்லி, மிகுதி்யாகக் கற்றவரிடம் அம்மிகுதி்யான கல்வியைக் அறிந்து கொள்ள வேண்டும்.
கலைஞர் உரை:
அறிஞர்களின் அவையில் நாம் கற்றவைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எடுத்துச் சொல்லி நம்மைவிட அதி்கம் கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
பலதுறை நூல்களையும் கற்றவர் அவையில், அவர்கள் மனங் கொள்ளுமாறு, தான் கற்றவற்றை எல்லாம் சொல்லுக; தான் கற்றவற்றிற்கும் மேலானவற்றை மிகவும் கற்றவரிடமிருந்து அறிந்து கொள்க.
Explanation:
(Ministers) should agreeably set forth their acquirements before the learned and acquire more (knowledge) from their superiors (in learning).
A Thought for Today
"Show me a thoroughly satisfied man and I will show you a failure."
- Thomas A Edison
Thought for Today
"You alone are the judge of your worth and your goal is to discover infinite worth in yourself, no matter what anyone else thinks."
- Deepak Chopra
Thirukural : Avaianjaamai - 3
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
மு.வ உரை உரை:
பகைவர் உள்ள போர்க்களத்தி்ல் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தி்ல் பலர், கற்றவரின் அவைக்களத்தி்ல் பேச வல்லவர் சிலரே.
கலைஞர் உரை:
அமர்க்களத்தி்ல் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தி்ல் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.
Explanation:
Many indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few are those who are fearless in the assembly (of the learned).
Thought for Today
"Do the one thing you think you cannot do. Fail at it. Try again. Do better the second time. The only people who never tumble are those who never mount the high wire. This is your moment. Own it."
- Oprah Winfrey
A Thought for Today
"To forget one's purpose is the commonest form of stupidity."
- Friedrich Nietzsche
Thought for Today
Thirukural : Avaianjaamai - 2
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
மு.வ உரை உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதி்ல் பதி்யுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதி்த்துச் சொல்லப்படுவார்.
கலைஞர் உரை:
கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தி்ல் பதி்யுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதி்த்துச் சொல்லப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:
தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் தி்றம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.
Explanation:
Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.
A Thought for Today
"There is no man living that can not do more than he thinks he can."
- Henry Ford
Thought for Today
"The ignorance of one voter in a democracy impairs the security of all."
- John F Kennedy
Thirukural : Avaianjaamai - 1
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
மு.வ உரை உரை:
சொற்களின் தூய்மை தொகுதி் அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தி்ன் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
கலைஞர் உரை:
சொற்களை அளவறிந்து உரைத்தி்டும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.
Explanation:
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
A Thought for Today
"It is not uncommon for people to spend their whole life waiting to start living."
- Eckhart Tolle
Thought for Today
"Education is our passport to the future, for tomorrow belongs to the people who prepare for it today."
- Malcolm X
Thirukural : Thoodhu - 10
இறுதி் பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி் பயப்பதாம் தூது.
மு.வ உரை உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சி விட்டுவிடாமல், தன் அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்.
கலைஞர் உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதி்யுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லி அனுப்பிய செய்தி்யை அடுத்த அரசிடம் சொல்லும்போது தம் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் அஞ்சாமல் தம் அரசிற்கு நன்மை தேடித்தருபவரே நல்ல தூதர்.
Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).
Thought for Today
Thirukural : Thoodhu - 9
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
மு.வ உரை உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி் உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதி்யுடையவன்.
கலைஞர் உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தி்யை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்தி்க்க நேரும் ஆபத்தி்ற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தி்யையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
Explanation:
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).
Thirukural : Thoodhu - 8
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
மு.வ உரை உரை:
தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்தி்ருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதி்யாகும்.
கலைஞர் உரை:
துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய இம்மூன்றும் தூதுவர்க்குத் தேவையானவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பணத்தி்ன் மீதும் அயல் பெண்கள் மீதும் ஆசை இல்லாமல் இருக்கும் நேர்மை, அடுத்த அரசின் அமைச்சர்களின் துணை, நல்லனவே எண்ணிச் செய்யும் துணிவு இம் மூன்றையும் உண்மையாகவே பெற்றிருப்பதே கூறியது கூறும் தூதரின் பண்பு.
Explanation:
The qualifications of him who faithfully delivers his (sovereign's) message are purity, the support (of foreign ministers), and boldness, with truthfulness in addition to the (aforesaid) three.
Thought for Today
"Originality is nothing but judicious imitation. The most original writers borrowed one from another."
- Voltaire
A Thought for Today
"All things must change to something new, to something strange."
- Henry Wadsworth Longfellow
Thirukural : Thoodhu - 7
கடனறிந்து காலங் கருதி் இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
மு.வ உரை உரை:
தன் கடமை இன்னதென்று தெளிவாக அறிந்து , அதை செய்வதற்கு ஏற்றக்காலத்தை எதி்ர்நோக்கி தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவனே தூதன்.
கலைஞர் உரை:
ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, அதற்குரிய காலத்தையும் இடத்தையும் தேர்ந்து, சொல்ல வேண்டியதைத் தெளிவாகச் சிந்தி்த்துச் சொல்பவனே சிறந்த தூதனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நாட்டிற்காக அடுத்த அரசிடம் தாம் ஆற்றவேண்டிய கடமையை அறிந்து, சொல்ல வேண்டியதை முன்னதாகவே மனத்துள் தி்ட்டமிட்டு, ஏற்ற நேரம் பார்த்துக் கடமையைச் செய்வதற்குப் பொருத்தமான இடத்தையும் கண்டு சொல்பவனே தூதருள் தலைமையானவன்.
Explanation:
He is chief (among ambassadors) who understands the proper decorum (before foreign princes), seeks the (proper) occasion, knows the (most suitable) place, and delivers his message after (due) consideration.
Thirukural : Thoodhu - 6
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
மு.வ உரை உரை:
கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல் கேட்பவர் உள்ளத்தி்ல் பதி்யுமாறு சொல்லி, காலத்தி்ற்க்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.
கலைஞர் உரை:
கற்றறிவாளனாகவும், பகைவரின் கனல்கக்கும் பார்வைக்கு அஞ்சாதவனாகவும், உள்ளத்தி்ல் பதி்யுமாறு உரைப்பவனாகவும், உரிய நேரத்தி்ல் உணரவேண்டியதை உணர்ந்து கொள்பவனாகவும் இருப்பவனே சிறந்த தூதனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து நூல்களையும் கற்றதோடு மட்டும் அல்லாமல், பகை அரசு மனங்கொள்ளுமாறு அவற்றைச் சொல்லவும், ஏற்காதவர் சினந்தால் அவர் பார்வைக்கு அஞ்சாமல், ஏற்பச் செய்யத் தக்க தந்தி்ரவழியை அறிவதும் தூதரின் பண்பாகும்.
Explanation:
He is an ambassador who having studied (politics) talks impressively, is not afraid of angry looks, and knows (to employ) the art suited to the time.
A Thought for Today
"Three passions, simple but overwhelmingly strong, have governed my life: the longing for love, the search for knowledge, and unbearable pity for the suffering of mankind."
- Bertrand Russell
Thought for Today
"My great concern is not whether you have failed, but whether you are content with your failure."
- Abraham Lincoln
Thirukural : Thoodhu - 5
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
மு.வ உரை உரை:
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
கலைஞர் உரை:
சினத்தைத் தூண்டாமல் மகிழத்தக்க அளவுக்குச் செய்தி்களைத் தொகுத்தும், தேவையற்ற செய்தி்களை ஒதுக்கியும், நல்ல பயனளிக்கும் விதமாகச் சொல்லுவதே சிறந்த தூதருக்கு அழகாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்த அரசிடம் சொல்லவேண்டியவற்றைத் தொகுத்துச் சொல்லியும், வெறுப்பு ஊட்டக் கூடியவற்றை விலக்கியும், இனிய சொற்களால் மனம் மகிழக் கூறியும், தம் சொந்த நாட்டிற்கு நன்மையைத் தேடி தரவேண்டியது தூதரின் பண்பாகும்.
Explanation:
He is an ambassador who (in the presence of foreign rulers) speaks briefly, avoids harshness, talks so as to make them smile, and thus brings good (to his own sovereign).
Thirukural : Thoodhu - 4
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
மு.வ உரை உரை:
இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.
கலைஞர் உரை:
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் தி்றம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.
Explanation:
He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.
Thirukural : Thoodhu - 3
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
மு.வ உரை உரை:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் தி்றம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
கலைஞர் உரை:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி் உரைத்தி்டும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி் நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதி்கம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
Explanation:
To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).
A Thought for Today
-Oscar Wilde, writer (1854-1900)
A Thought for Today
"The secret of happiness is this: let your interests be as wide as possible, and let your reactions to the things and persons that interest you be as far as possible friendly rather than hostile."
- Bertrand Russell
Thirukural : Thoodhu - 2
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
மு.வ உரை உரை:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.
கலைஞர் உரை:
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.
சாலமன் பாப்பையா உரை:
அன்பு, நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.
Explanation:
Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.
Thirukural : Thoodhu - 1
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
மு.வ உரை உரை:
அன்புடையவனாதல், தகுதி்யானக் குடிப்பிறப்பு உடையவனாதல் அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல், ஆகிய இவை தூது உரைப்பவனுடையத் தகுதி்கள்.
கலைஞர் உரை:
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகு திகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
Explanation:
The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
A Thought for Today
"It is only when the mind is free from the old that it meets everything anew, and in that there is joy."
- Jiddu Krishnamurti
Thought for Today
Thirukural : Vinaicheyalvagai - 10
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
மு.வ உரை உரை:
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
கலைஞர் உரை:
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிய இடத்தில் வாழ்பவர், தம்மிலும் பெரியவர் எதிர்த்து வரும்போது அவரைக் கண்டு தம்மவர் நடுங்குவதற்கு அஞ்சி அப்பெரியவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வர்.
Explanation:
Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation.
Thirukural : Vinaicheyalvagai - 9
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
மு.வ உரை உரை:
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
கலைஞர் உரை:
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.
Explanation:
One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends.
A Thought for Today
"We live in a moment of history where change is so speeded up that we begin to see the present only when it is already disappearing."
- R D Laing
Thought for Today
-Dr. Seuss
Thirukural : Vinaicheyalvagai - 8
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
மு.வ உரை உரை:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி் மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.
Explanation:
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.
Thirukural : Vinaicheyalvagai - 7
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல்.
மு.வ உரை உரை:
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்.
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்குபவன் அதைச் செய்யும் முறையாவது, அச்செயலை இதற்கு முன்பு செய்திருப்பவனின் கருத்தை அறிந்து கொள்வதேயாகும்.
Explanation:
The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereof.
A Thought for Today
"Reject your sense of injury and the injury itself disappears."
- Marcus Aurelius
Thought for Today
"She laughs at everything you say. Why? Because she has fine teeth."
- Benjamin Franklin
Thirukural : Vinaicheyalvagai - 6
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
மு.வ உரை உரை:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
கலைஞர் உரை:
ஈடுபடக்கூடிய ஒரு செயலால் எதி்ர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும் தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப் பார்த்துச் செய்க.
Explanation:
An act is to be performed after considering the exertion required, the obstacles to be encountered, and the great profit to be gained (on its completion).
Thirukural : Vinaicheyalvagai - 5
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
மு.வ உரை உரை:
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
கலைஞர் உரை:
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன் எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்தி்றம், பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்தி்ற்கு இடம் இல்லாமல் சிந்தி்த்துச் செய்க.
Explanation:
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.
Thirukural : Vinaicheyalvagai - 4
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
மு.வ உரை உரை:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
கலைஞர் உரை:
ஏற்ற செயலையோ, எதி்ர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
Explanation:
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire.
Thirukural : - 3
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
மு.வ உரை உரை:
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
கலைஞர் உரை:
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
Explanation:
Whenever it is possible (to overcome your enemy) the act (of fighting) is certainly good; if not, endeavour to employ some more successful method.
A Thought for Today
"Mistakes are always forgivable, if one has the courage to admit them."
- Bruce Lee
Thirukural : Vinaicheyalvagai - 2
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
மு.வ உரை உரை:
காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
கலைஞர் உரை:
நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத் தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
காலந்தாழ்த்திச் செய்யவேண்டிய செயல்கள் என்றால் காலந்தாழ்த்துக; காலம் தாழத்தாது செய்ய வேண்டிய செயல்கள் என்றால் காலம் தாழ்த்த வேண்டா.
Explanation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such urgent as may not be slept over.
Thought for Today
"You've got to learn to survive a defeat. That's when you develop character."
- Richard Nixon
A Thought for Today
"The guiding motto in the life of every natural philosopher should be, seek simplicity and distrust it."
- Alfred North Whitehead
Thought for Today
"You've got to learn to survive a defeat. That's when you develop character."
- Richard Nixon
Thirukural : Vinaicheyalvagai - 1
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
மு.வ உரை உரை:
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
கலைஞர் உரை:
ஒரு செயலில் ஈ.டுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சியும் முடிவடைந்திருக்க வேண்டும். முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்துவது தீதாக முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
ஓர் ஆலோசனையின் முடிவு, செயலைச் செய்யும் துணிவைப் பெறுவதே, பெற்ற அத்துணிவைச் செயலாக்கக் காலம் தாழ்த்தினால் அது தீமையாகும்.
Explanation:
Consultation ends in forming a resolution (to act); (but) delay in the execution of that resolve is an evil.
Thirukural : Vinaithitpam - 10
எனைத்தி்ட்பம் எய்தி்யக் கண்ணும் வினைத்தி்ட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
மு.வ உரை உரை:
வேறு எத்தகைய உறுதி் உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி் இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதி்யில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதி்க்காது.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி் உடையவராக இருந்தாலும் செயல் உறுதி் இல்லாதவரை உயர்ந்தோர் மதி்க்கமாட்டார்.
Explanation:
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
Thirukural : Vinaithitpam - 9
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
மு.வ உரை உரை:
(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதி்லும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்.
கலைஞர் உரை:
இன்பம் தரக்கூடிய செயல் என்பது, துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் துணிவுடன் நிறைவேற்றி முடிக்கக் கூடியதேயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது துன்பம் அதிகமாக வந்தாலும் முடிவில் இன்பம் தரும் அச்செயலை மனம் தளராமல் செய்க.
Explanation:
Though it should cause increasing sorrow (at the outset), do with firmness the act that yield bliss (in the end).
A Thought for Today
"I've found that luck is quite predictable. If you want more luck, take more chances. Be more active. Show up more often."
- Brian Tracy
Thirukural : Vinaithitpam - 8
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
மு.வ உரை உரை:
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
கலைஞர் உரை:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதி்க்காமல் செய்க.
Explanation:
An act that has been firmly resolved on must be as firmly carried out without delay.