For this Day:

;

A THOUGHT FOR TODAY

"Spend the afternoon. You can't take it with you."
-Annie Dillard, author (b. 30 Apr 1945)

Thirukural : Alararivuruththal - 6

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
தி்ங்களைப் பாம்புகொண் டற்று.

மு.வ. உரை:
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, தி்ங்களைப் பாம்பு கொண்ட செய்தி் போல் எங்கும் பரந்து விட்டது.

கலைஞர் உரை:
காதலர் சந்தி்த்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்தி்ரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம் எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்தி்ப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.

சாலமன் பாப்பையா உரை:
நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

Explanation:
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

Thought for Today

A bookstore is one of the only pieces of evidence we have that people are still thinking.
-Jerry Seinfeld, comedian (b. 29 Apr 1954)

Thought for Today

"Never do anything against conscience even if the state demands it."
- Albert Einstein

A Thought for Today

"I don't like to commit myself about heaven and hell - you see, I have friends in both places."
- Mark Twain

Thirukural : Alararivuruththal - 5

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.

மு.வ. உரை:
காமம் அலரால் வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.

கலைஞர் உரை:
காதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
கள் உண்பவர்களுக்குக் குடித்து மகிழும்போது எல்லாம் கள் உண்பது இனிதாவது போல் எங்கள் காதல் ஊருக்குள் பேசப்படும்போது எல்லாம் மனத்தி்ற்கு இனிதாய் இருக்கின்றது.

Explanation:
As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour.

A Thought for Today

"Reason has always existed, but not always in a reasonable form."
- Karl Marx

Thought for Today

"An optimist may see a light where there is none, but why must the pessimist always run to blow it out?"
- Rene Descartes

Thirukural : Alararivuruththal - 4

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

மு.வ. உரை:
எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

கலைஞர் உரை:
ஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

Explanation:
Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away.

A THOUGHT FOR TODAY

"Language is the armoury of the human mind; and at once contains the trophies of its past, and the weapons of its future conquests."
-Samuel Taylor Coleridge, poet, critic, and philosopher (1772-1834)

Thought for Today

"I don't think about financial success as the measurement of my success."
-Christie Hefner

Thirukural : Alararivuruththal - 3

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

மு.வ. உரை:
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

கலைஞர் உரை:
எமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா? அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே!

சாலமன் பாப்பையா உரை:
எங்களக்குள் காதல் இருப்பதை இந்த ஊர் அறிந்து பேசியதும் நல்லதே, (தி்ருமணத்தைச்) செய்ய முடியுமா என்றிருந்த நிலை போய்ச் செய்தது போல் ஆயிற்று.

Explanation:
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already).

Thirukural : Alararivuruththal - 2

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததி்வ் வூர்.

மு.வ. உரை:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி் அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

கலைஞர் உரை:
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

சாலமன் பாப்பையா உரை:
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்தி்க்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.

Explanation:
Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me.

Thought for Today

"I've stopped apologizing to myself for having this great period of success and financial acceptance."
-Robert Plant

Thirukural : Alavarivuruththal - 1

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.

மு.வ. உரை:
(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

கலைஞர் உரை:
எம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
ஊருக்குள் பலர் எங்கள் காதலைப் பற்றிப் பேசுவதால்தான் அவளை இன்னும் பெறாத என் உயிரும் நிலைத்து இருக்கிறது; பேசும் பலரும் இதை அறியமாட்டார்; இது நான் செய்த பாக்யம்.

Explanation:
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of.

A THOUGHT FOR TODAY

The habit of reading is the only enjoyment in which there is no alloy; it lasts when all other pleasures fade.
-Anthony Trollope, novelist (24 Apr 1815-1882)

A THOUGHT FOR TODAY

Words without thoughts never to heaven go.
-Shakespeare, poet and dramatist (23 Apr 1564-1616)

Thought for Today

"People of conscience need to break their ties with corporations financing the injustice of climate change”

-Archbishop Desmond Tutu

Thirukural : Naanuthuravuraiththal -10

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.

மு.வ. உரை:
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதி்ரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.

கலைஞர் உரை:
காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!

Explanation:
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered.

A Thought for Today

There is a very real danger that financial regulation will become a wolf in sheep's clothing.
-Henry Paulson

Thought for Today

A man can be destroyed but not defeated.
#ErnestHemingway

Thirukural : Naanuthuravuraiththal -9

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.

மு.வ. உரை:
அமைதி்யாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி் என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

கலைஞர் உரை:
என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் தி்ரிகின்றது போலும்!

சாலமன் பாப்பையா உரை:
என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

Explanation:
My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

A THOUGHT FOR TODAY

"Here is where people,
One frequently finds,
Lower their voices
And raise their minds."
-Richard Armour, author, on libraries (1906-1989)

THOUGHT FOR TODAY

"Everybody's talking about people breaking into houses but there are more people in the world who want to break out of houses."
-Thornton Wilder, writer (1897-1975)

Thirukural : Naanuthuravuraiththal - 8

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.

மு.வ. உரை:
இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்தி்ருத்தலைக் கடந்து மன்றத்தி்லும் வெளிப்படுகின்றதே.

கலைஞர் உரை:
பாவம்; இவர், மனத்தி்ல் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்தி்ற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.

சாலமன் பாப்பையா உரை:
இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

Explanation:
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

A Thought for Today

"You cannot escape the responsibility of tomorrow by evading it today."
-Abraham Lincoln

Thirukural : Naanuthuravuraiththal-7

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தி்ல்.

மு.வ. உரை:
கடல் போன்ற காமநோயால் வருந்தி்யும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.

கலைஞர் உரை:
கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தி்னாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்தி்ருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தி்ல் வேறு இல்லை.

Explanation:
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust.

Thirukural : Naanuthuravuraiththal -6

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.

மு.வ. உரை:
மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதி்யாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.

கலைஞர் உரை:
காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதி்யாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

சாலமன் பாப்பையா உரை:
அவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதி்ல்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.

Explanation:
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse.

A Thought for Today

I hated every minute of training, but I said, 'Don't quit. Suffer now and live the rest of your life as a champion.'
-Muhammad Ali

Thought for Today

What can be asserted without proof can be dismissed without proof.
-Christopher Hitchens, author and journalist (13 Apr 1949-2011)

Thirukural : Naanuthuravuruththal - 5

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

மு.வ. உரை:
மடலோறுதலோடு மாலைக்காலத்தி்ல் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

கலைஞர் உரை:
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.

சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்தி்ருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.

Explanation:
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.

Thought for Today

"If you create incredible value and information for others that can change their lives - and you always stay focused on that service - the financial success will follow."
-Brenden Burchard

Thirukural : Naanuthuravuruththal-4

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.

மு.வ. உரை:
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.

கலைஞர் உரை:
காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.

சாலமன் பாப்பையா உரை:
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.

Explanation:
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust.

A Thought for Today

"Try not to become a man of success, but rather try to become a man of value."
-Albert Einstein

THOUGHT FOR TODAY

"Bad weather always looks worse through a window."
-Tom Lehrer, singer-songwriter and mathematician (b. 9 Apr 1928)

Thirukural : Naanuthuravuruththal -3

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

மு.வ. உரை:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

கலைஞர் உரை:
நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.

சாலமன் பாப்பையா உரை:
நாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.

Explanation:
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful.

Thirukural : Naanuthuravuraiththal - 2

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.

மு.வ. உரை:
(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி் விட்டு மடலூரத் துணிந்தன.

கலைஞர் உரை:
எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

சாலமன் பாப்பையா உரை:
காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

Explanation:
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse.

A Thought for Today

"A financial crisis is a great time for professional investors and a horrible time for average ones."
-Robert Kiyosaki

Thirukural : Naanuthuravuraiththal- 1

காமம் உழந்து வருந்தி்னார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.

மு.வ. உரை:
காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தி்னவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.

கலைஞர் உரை:
காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

Explanation:
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse.

THOUGHT FOR TODAY

"For me, words are a form of action, capable of influencing change."
-Ingrid Bengis, writer and teacher (b. 1944)

A THOUGHT FOR TODAY

"Pleasure may come from illusion, but happiness can come only of reality."
-Nicolas de Chamfort, writer (6 Apr 1741-1794)

Thirukural : Kaatharsirappuraiththal - 10

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதி்லர் என்னும்இவ் வூர்.

மு.வ. உரை:
காதலர் எப்போதும் என் உள்ளத்தி்ல் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் அதை அறியாமல் பிரிந்து வாழ்கின்றார், அன்பில்லாதவர் என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

கலைஞர் உரை:
காதலர், எப்போதும் உள்ளதோடு உள்ளமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அதை உணராத ஊர்மக்கள் அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ்வதாகப் பழித்துரைப்பது தவறு.

சாலமன் பாப்பையா உரை:
என்னவர் எப்போதும் என் நெஞ்சிற்குள்ளேயே மகிழ்ந்து இருக்கிறார். இதை அறியாத உறவினர் அவருக்கு அத்தனை அன்பு இல்லை என்கின்றனர்.

Explanation:
My lover dwells in my heart with perpetual delight; but the town says he is unloving and (therefore) dwells afar.

A Thought for Today

Never bear more than one trouble at a time. Some people bear three kinds -- all they have had, all they have now, and all they expect to have.
-Edward Everett Hale, author (3 Apr 1822-1909)

Thirukural : Kaatharsirappuraiththal - 9

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்தி்ற்கே
ஏதி்லர் என்னும்இவ் வூர்.

மு.வ. உரை:
கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

கலைஞர் உரை:
கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லதாவர் என்று அவரைக் கூறும்.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதி்ல்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

Explanation:
I will not wink, knowing that if I did, my lover would hide himself; and for this reason, this town says, he is unloving.

Thought for Today

"A financial crisis is a great time for professional investors and a horrible time for average ones."
-Robert Kiyosaki

Thirukural : Kaatharsirappuraiththal - 8

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

மு.வ. உரை:
எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார், ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சு கின்றோம்.

கலைஞர் உரை:
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்தி்ருப்பவர்களே காதலர்களாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
என்னவர் என் நெஞ்சிலேயே வாழ்வதால் சூடாக உண்டால் அது அவரைச் சுட்டுவிடும் என்று எண்ணி உண்ணப் பயப்படுகிறேன்.

Explanation:
As my lover is in my heart, I am afraid of eating (anything) hot, for I know it would pain him.

Quote of the Day

01 April, 2015
"Fools are without number."
- Desiderius Erasmus

A THOUGHT FOR TODAY

"Make no judgments where you have no compassion."
-Anne McCaffrey, writer (1 Apr 1926-2011)

Thirukural : Kaatharsirappuraiththal - 7

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

மு.வ. உரை:
எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதி்னால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.

கலைஞர் உரை:
காதலர் கண்ணுக்குள்ளேயே இருக்கிற காரணத்தி்னால், மைதீட்டினால் எங்கே மறைந்துவிடப் போகிறாரோ எனப் பயந்து மை தீட்டாமல் இருக்கிறேன்.

சாலமன் பாப்பையா உரை:
என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.

Explanation:
As my lover abides in my eyes, I will not even paint them, for he would (then) have to conceal himself.