ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
மு.வ. உரை:
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதி்ல்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.
கலைஞர் உரை:
ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தி்த்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
உயிரும் உடம்பும் இணைந்தி்ருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
Explanation:
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
No comments:
Post a Comment