For this Day:

;

Thirukural : Kollaamai - 4

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

மு.வ உரை உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.

Explanation:
Good path is that which considers how it may avoid killing any creature.

Thought for Today

"Opportunities come infrequently. When it rains gold, put out the bucket, not the thimble"
-Warren Buffet

Thirukural : Kollaamai - 3

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

மு.வ. உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

கலைஞர் உரை:
அறங்களின் வரிசையில் முதலில் கொல்லாமையும் அதற்கடுத்துப் பொய்யாமையும் இடம் பெறுகின்றன.

சாலமன் பாப்பையா உரை:
உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.

Explanation:
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.

Thirukural : Kollaamai - 2

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.

மு.வ. உரை:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

கலைஞர் உரை:
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈ.டானது வேறு எதுவுமே இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதி்யவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.

Explanation:
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.

Thought for Today

"Silence is golden, and gold is up these days, so silence is a solid investment."
-Jarod Kintz

Thirukural : Kollaamai - 1

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

மு.வ. உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

கலைஞர் உரை:
எந்த உயிரையும் கொல்லாதி்ருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.

Explanation:
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.

Thirukural : Innaaseiyaamai - 10

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

மு.வ. உரை:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

கலைஞர் உரை:
தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்து சேரும்; எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

Explanation:
Sorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.

A Thought for Today

Entrepreneurial Tip

"Impossible is not a fact, it's an opinion."

To chasing your dreams,

Dale Partridge
Chief Entrepreneur

Thirukural : Innaaseiyaamai - 9

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

மு.வ. உரை:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

கலைஞர் உரை:
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

Explanation:
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening.

A Thought for Today

"When you find an idea that you just can’t stop thinking about, that’s probably a good one to pursue."
-Josh James

Thirukural : Innaaseiyaamai - 8

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

மு.வ. உரை:
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

கலைஞர் உரை:
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?

Explanation:
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

Thought for Today

"Even if you don’t have the perfect idea to begin with, you can likely adapt."
-Victoria Ransom

Thirukural : Innaaseiyaamai - 7

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

மு.வ. உரை:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்தி்லும் எவரிடத்தி்லும் மனதால் எண்ணி உண்டாகின்ற துன்பச்செயலைச் செய்யாதி்ருத்தலே நல்லது.

கலைஞர் உரை:
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால் கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
எவ்வளவு சிறிதாயினும், எவருக்கு என்றாலும், எப்பொழுது ஆனாலும் சரி, மனத்தால் கூடத் தீமையைச் செய்யா தி்ருப்பதே உயர்ந்தது.

Explanation:
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time.

A Thought for Today

Every man is guilty of all the good he didn't do.
 -Voltaire, philosopher (1694-1778)

Thirukural : Innaaseiyaamai - 6

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

மு.வ. உரை:
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தி்ல் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

கலைஞர் உரை:
ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

Explanation:
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow.

Thought for today

The truth isn't always beauty, but the hunger for it is.
-Nadine Gordimer, novelist, Nobel laureate (1923-2014)

A Thought for Today

"Think no vice so small that you may commit it, and no virtue so small that you may over look it."
- Confucius

Thirukural : Innaaseiyaamai - 5

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதி்ன்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

மு.வ. உரை:
மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதி்க் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.

கலைஞர் உரை:
பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதி்க் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?

Explanation:
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?

Thought for Today

"The simple act of paying positive attention to people has a
great deal to do with productivity."
-Tom Peters

A Thought for Today

"Wonder what your customer really wants? Ask. Don’t tell."
-Lisa Stone

Thirukural : Innaaseiyaamai - 4

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

மு.வ. உரை:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

கலைஞர் உரை:
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

சாலமன் பாப்பையா உரை:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

Explanation:
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.

A Thought for Today

"Life isn't about finding yourself. Life is about creating yourself."
- George Bernard Shaw

Thought for Today

You cannot shake hands with a clenched fist. 
-Indira Gandhi, prime minister of India (1917-1984) 

Thirukural : Innaaseiyaamai - 3

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.

மு.வ. உரை:
தான் ஒன்றும் செய்யாதி்ருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

கலைஞர் உரை:
யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதி்லாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நாம் ஒரு தீமையும் செய்யாதி்ருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.

Explanation:
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow.i

A Thought for Today

Entrepreneurial Tip:
The greatest weapon against stress is our ability to choose one thought over another.

-Dale Partridge

Thought for Today

"Never prove people right. Never prove them wrong. Prove instead that you make your own path in life."
- Katina Ferguson

Thirukural : Innaa seiyaamai - 2

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தி்ன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மு.வ. உரை:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதி்லும் அவனுக்கு தி்ரும்ப துன்பம் செய்யாதி்ருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

கலைஞர் உரை:
சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போது அந்தத் துன்பத்தை அவனுக்குத் தி்ரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதே சிறந்த மனிதரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதி்லுக்குத் தீமை செய்யாதி்ருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Explanation:
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

Thought for Today

"All differences in this world are of degree, and not of kind, because oneness is the secret of everything."
- Swami Vivekananda

A Thought for Today

"Tomorrow is the most important thing in life. Comes into us at midnight very clean. It's perfect when it arrives and it puts itself in our hands. It hopes we've learned something from yesterday."
- John Wayne

Thirukural : Innaaseiyaamai -1

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

மு.வ. உரை:
சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதி்ருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

கலைஞர் உரை:
மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதி்ருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

Explanation:
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness.

Thought for Today

"I`d like to live as a poor man with lots of money."
- Pablo Picasso

A Thought for Today

"The secret of life is not enjoyment but education through experience."
- Swami Sivananda

Thirukural : Vegulaamai - 10

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.

மு.வ. உரை:
சினத்தி்ல் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

கலைஞர் உரை:
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

Explanation:
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).

A Thought for Today

Art of maintaining relationship is like a musical instrument.
First, you learn to play by rules;
then, you must forget the rules & play by heart!

Thought for Today

"Sustaining a successful business is a hell of a lot of work, and staying hungry is half the battle."
-Wendy Tan White

Thirukural : Vegulaamai - 9

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின்.

மு.வ. உரை:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதி்ருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

கலைஞர் உரை:
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

Explanation:
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.

A Thought for Today

Every problem has (N+1) solutions: where, N is the number of solutions that you have tried and 1 is that you have not tried.

Thirukural : Vegulaamai - 8

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று.

மு.வ. உரை:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதி்லும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதி்ருத்தல் நல்லது.

கலைஞர் உரை:
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி் அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதி்ருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

Explanation:
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.

Thought for Today

For making soap, oil is required.
But to clean oil, soap is required. This is the irony of life!

A Thought for Today

"Don't judge each day by the harvest you reap, but by the seeds you plant."
-Robert Louis Stevenson, novelist, essayist, and poet (1850-1894)

Thirukural : Vegulaamai - 7

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

மு.வ. உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

கலைஞர் உரை:
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தி்ல் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்தி்லிருந்து தப்ப முடியாது.

Explanation:
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.

Thought for Today

Patience is also a form of action.
-Auguste Rodin, sculptor (1840-1917)

Thirukural : Vegulaamai - 6

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.

மு.வ. உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

கலைஞர் உரை:
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

Explanation:
The fire of anger will burn up even the pleasant raft of friendship.

A Thought for Today

Stop saying "I wish" and start saying "I will".
~Dale Partridge #Entrepreneurial_Tip

Thought for Today

"Don't be afraid to give your best to what seemingly are small jobs. Every time you conquer one it makes you that much stronger. If you do the little jobs well, the big ones will tend to take care of themselves."
- Dale Carnegie

Thirukural : Vegulaamai - 5

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

மு.வ. உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

கலைஞர் உரை:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

Explanation:
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

A Thought for Today

"After silence, that which comes nearest to expressing the inexpressible is music."
- Aldous Huxley

Thought for Today

"I, for one, thoroughly believe that no power in the universe can withhold from anyone anything they really deserve."
- Swami Vivekananda

Thirukural : Vegulaamai - 4

நகையும் உவகையும் கொல்லும் சினத்தி்ன் 
பகையும் உளவோ பிற.

மு.வ. உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

கலைஞர் உரை:
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்தி்ரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தி்ல் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

Explanation:
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?

A Thought for Today

"Once you become predictable, no one's interested anymore."
- Chet Atkins

Thought for Today

"The best way out is always through."
- Robert Frost

Thirukural : Vegulaamai - 3

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

மு.வ. உரை:
யாரிடத்தி்லும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

கலைஞர் உரை:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

Explanation:
Forget anger towards every one, as fountains of evil spring from it.

Thought for Today

"I never took a day off in my twenties. Not one."
-Bill Gates

Thirukural : Vegulaamai - 2

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

மு.வ. உரை:
பலிக்காத இடத்தி்ல் (தன்னை விட வலியவரிடத்தி்ல்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்தி்லும் (மெலியவரித்தி்லும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

கலைஞர் உரை:
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தி்ல் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தி்ல் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

Explanation:
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

A Thought for Today

Heavy rains remind us of challenges in life.
Never ask for a lighter rain, just pray for a better umbrella.
That is Attitude!

Thought for Today

I have always found that mercy bears richer fruits than strict justice.
 -Abraham Lincoln, 16th US President (1809-1865)

Thirukural : Vegulaamai - 1

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் 
காக்கின்என் காவாக்கா.

மு.வ. உரை:
பலிக்கும் இடத்தி்ல் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தி்ல் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?

கலைஞர் உரை:
தன் சினம் பலிதமாகுமிடத்தி்ல் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தி்ல் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தி்ல் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?

Explanation:
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?

A Thought for Today

"Always deliver more than expected."
-Larry Page

Entrepreneurial Tip


Discipline is just choosing between what you want now and what you want most.

Thirukural : Vaaimai - 1

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

மு.வ. உரை:
யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிடத் எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.

கலைஞர் உரை:
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:
சிறந்தவை என்று நான் கண்டு அறிந்த நூல்களுள் சொல்லப்பட்டவற்றுள், உண்மையைவிட, நல்லதாகச் சொல்லப்பட்ட அறம் வேறு ஒன்றும் இல்லை.

Explanation:
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness.

A Thought for Today

"Our greatest weakness lies in giving up. The most certain way to succeed is always to try just one more time."
-Thomas A Edison

Thirukural : Vaaimai - 9

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

மு.வ. உரை:
(புறத்தி்ல் உள்ள இருளை நீக்கும்) விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு (அகத்து இருள் நீக்கும்) பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும்.

கலைஞர் உரை:
புறத்தி்ன் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தி்ன் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.

சாலமன் பாப்பையா உரை:
உலகத்து இருட்டைப் போக்கும் விளக்குகள், விளக்கு ஆகா; பொய் சொல்லாமை என்னும் விளக்கே சான்றோர்க்கு விளக்கு ஆகும்.

Explanation:
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise.

Thought for Today

"Life is too short, or too long, for me to allow myself the luxury of living it so badly."
- Paulo Coelho

Thirukural : Vaaimai - 8

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

மு.வ. உரை:
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

கலைஞர் உரை:
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்

.Explanation:
Purity of body is produced by water and purity of mind by truthfulness.

A Thought for Today

"All our words are but crumbs that fall down from the feast of the mind."
-Kahlil Gibran, poet and artist (1883-1931)

Thought for Today

"The way to get started is to quit talking and begin doing."

-Walt Disney

Thirukural : Vaaimai - 7

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று.

மு.வ. உரை:
பொய்யாமை ஆகிய அறத்தை உண்மையாகவே போற்றி வாழ முடிந்தால் மற்ற அறங்களைச் செய்தலும் நல்லது ஆகும்.

கலைஞர் உரை:
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

Explanation:
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue.