For this Day:

;

Thirukural : Saandraanmai - 4

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

மு.வ உரை உரை:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

கலைஞர் உரை:
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

சாலமன் பாப்பையா உரை:
பிற உயிர்களைக் கொல்லாதி்ருப்பது தனத்தி்ற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதி்ருப்பது சான்றாண்மைக்கு அழகு.

Explanation:
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.

No comments: