பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
மு.வ உரை உரை:
செல்வம் பெருகியுள்ள காலத்தி்ல் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தி்ல் பணியாத உயர்வு வேண்டும்.
கலைஞர் உரை:
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தி்ல் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தி்ல் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.
Explanation:
In great prosperity humility is becoming; dignity, in great adversity.
No comments:
Post a Comment