For this Day:

;

Thirukural : Perumai - 4

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.

மு.வ உரை உரை:
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப்போல் பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும

கலைஞர் உரை:
தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல,சிறந்து நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழ்பவனுக்கே பெருமை உண்டு.

Explanation:
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.

Thought for Today

"If you still look cute at the end of your workout, you didn't train hard enough."

A Thought for Today

"I never looked at the consequences of missing a big shot... when you think about the consequences you always think of a negative result."
-Michael Jordan

Thirukural : Perumai - 3

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.

மு.வ உரை உரை:
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர், கீழ் நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ் மக்கள் அல்லர்.

கலைஞர் உரை:
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈ.டுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்புகள் ( பெருமைகள்) இல்லாதவர் உயர்ந்த பதவியில் இருந்தாலும் பெருமைக்கு உரியவர் அல்லர்; சிறிய பதவியில் இருந்தாலும் உயர்வான பண்புகளை உடையவர் பெருமை குறைந்தவர் அல்லர்.

Explanation:
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.

A Thought for Today

Everybody, soon or late, sits down to a banquet of consequences. 
-Robert Louis Stevenson, novelist, essayist, and poet (1850-1894)

Thought for Today

"Excess of liberty, whether it lies in state or individuals, seems only to pass into excess of slavery."
-Plato

Thirukural : Perumai - 2

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான்.

மு.வ உரை உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்தி்ருப்பதி்ல்லை.<b

கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற தி்றமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமம??; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

A Thought for Today

Permanent good can never be the outcome of untruth and violence.
-Mahatma Gandhi (1869-1948) 

A Thought for Today

"Sometimes something worth doing is worth overdoing."
- Stanislaw Lec

Thought for Today

"When you play, play hard; when you work, don't play at all."
-Theodore Roosevelt

A Thought for Today

"From the errors of others, a wise man corrects his own."
- Publilius Syrus

Thirukural : Perumai - 1


ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதி்றந்து வாழ்தும் எனல்.

மு.வ உரை உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதி்யே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

கலைஞர் உரை:
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

Explanation:
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).

Thought for Today

"I never did a day's work in my life. It was all fun."
-Thomas A Edison

Thirukural : Maanam - 10

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

மு.வ உரை உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏந்தி் நிற்பார்கள்.

கலைஞர் உரை:
மானம் அழியத்தக்க இழிவு வந்ததே என்று உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடியவர்களின் புகழை உலகம் எக்காலமும் போற்றி நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
தனக்கு இகழ்ச்சி வரும்போது உயிர்வாழாத மானம் மிக்க மனிதரின் புகழ் வடிவைப் பெரியோர் தொழுது பாராட்டுவர்.

Explanation:
The world will (always) praise and adore the fame of the honourable who would rather die than suffer indignity.

"இரண்டணா" – சுஜாதா

'இரண்டணா' சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் தொகுப்பில் 24-வது கதையாக இடம் பெற்றுள்ளது. வெளி வந்த வருடம் 1998. (இந்தத் தொகுப்பில் மொத்தம் 34கதைகள்)

இரண்டணா–சுஜாதா

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துக்கு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம். இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நெளிநெளிகள்-இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபக்கத்தில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்துக்கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை தூக்கிப் பார்த்தால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்

இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள். நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலந்தைப்பழம் லேக்கா உருண்டை-கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார். அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார் . வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வறுக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டு வாங்கலாம். ரங்கராஜாவில் 'காப்டன் மார்வல் 'படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர்-சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம் விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞ்சுவதுடன்-ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்னவெல்லாம்இரண்டணாவில் வாங்கலாம்!

அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன். சொல்கிறேன். பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத்து-அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றது.நான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான்.ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து "மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்" என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக்காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான். ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இந்த-அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார். சாதி வழக்கத்துக்கு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார். சன்னமான குரலில் வரவேற்பார். எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும் கண்ணெதிரே ,இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக்கொண்டு இருப்பார்.அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்.

"என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா " என்றார்

அப்போதுதான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து "என்ன எண்ணை பாட்டி?"

"உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைத்-தவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா"

மீண்டும் ஓடிப்போய் " ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா"

"நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா" நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல" ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு" இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா"

"நீ சொல்லவே இல்லையே பாட்டி" என்றேன் நியாயம் தானே "காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப்போறே " இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது/

ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முடடியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்துதான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது . மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில் அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளைவிட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக தூக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம்-வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூக்கு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பலவித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க "வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை , மனுசனை பாம்பாக்குவேன் பாம்பை-மனுசனாக்குவேன் "ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கொண்டிருக்க-மோடி மஸ்தான் என்னையே பார்த்து "பயப்படாத பக்கத்ல வந்து குந்து" என்று என்னை அழைத்தான்/ அந்த பரட்டைத்தலை சிறுமி சின்ன பல்வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்

ஆழாக்கு எண்ணெயை மறந்தேன். முதல் வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டுவிட்டேன். அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்.

"கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகில போட்டுப்பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன் … இது என்ன?" என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்.

"ஒரணா" "என்னது ஒக்காளியா" என்று கேட்க சபையில் சிரிப்பு "நெருப்பில அரதம்வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாரும்-பார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன்.மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன்.தண்ணில நடப்பேன். நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?" என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி "பாழும் வவுத்துக்காக!"

"நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப்புள்ளையை பந்தாடப் போறேன்" எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித்தான்.

நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கியமானேன் "தகிரியமுள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க" என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால்வந்து நின்றான். அந்தப் பையனை கூப்பிட்டு அவன்முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப்போக அழுக்குத் துண்டால்-போர்த்திப் படுக்க வைத்தான் "யார் வூட்டுப் புள்ளையோ இது" என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான். அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான். பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது. த என்று அதை அதட்டினான். உள்ளுணர்வில் அஙகிருந்து விலகவேண்டும என்றுதான் தோன்றியது. ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன். சன்மத்துககு இந்த இடத்தைவிட்டு விலகப் போவதில்லை.கீரிப்பிள்ளை ஒன்றுக்குப்போனது. அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருந்து கயிற்றுக்கு எவ்வி அதன்மேல லாவகமாக நடந்தாள்.அதன்பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ்-பண்ணி அவளை சுற்றினான்.இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான்.எனக்கு மிகவும் கவலையாக இருந்தது "யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?"

"வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா" என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுந்திருக்க"ஏய்!" என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் "பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்டேன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு" என்று கையில் அந்த பேனைக்கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான்.படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது."இதான் உனக்காகும் ராத்தரி" அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கிப்போய் நின்றோம். மௌனமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம்-வந்தான். நான் என்னிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை. உடுக்கை அடித்துக் கொண்டே சுற்றி-வந்தான். கீரி சுற்றிக் கொண்டு இருந்தது. வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை.மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன்போல நடந்து வந்தேன். வீட்டின் அருகில் வந்தபோதுதான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க "எங்கே இரண்டணா" என்பது-மட்டுமின்றி எங்கே கிண்ணி? கிண்ணியையும் வைத்துவிட்டு வந்துவிட்டேன். பாட்டி சமையலறையிலிருநது குரல் கொடுத்தாள்" ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ" என்றாள்.மீண்டும் தெருக்கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக்காரன் சாமக்கிரியைகளை கவர்ந்துகொண்டு சென்றிருக்க வேண்டும்.வெறிச்சோடியிருந்தது தெரு. போய்விட்டான்.

நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம்எதிரொலித்தது. சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன்.தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போட்டிருக்க-மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. வித்தைக்காரன் அருகில் சென்றேன்.அந்தப்பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பதுபோல் "வா தம்பி" "நான் வந்து கீழ சித்திரைவீதில வித்தை-பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டங்க.அந்த கிண்ணி என்னுது" "தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒருகண்டிசன் "என்ன "எங்கூட வரியா வித்தைகாட்ட லால்குடி-பிச்சாண்டார்கோவில் இந்தபக்கம் குளித்தலை அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும்-போகலாம்" என்றாள். பைஜாமா-சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்.

"ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா" என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன். "என் கிண்ணியை கொடு" " கொடுக்கறேன் கொடுக்கறேன் " அவன் என்னிடம் அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப்போது நீட்டி நீட்டி கொடுப்பதுபோல் கொடுத்து-கையை இழுத்துக் கொண்டான் நான் பெரிசாக அழ ஆரம்பித்ததும் கொடுத்தான் "கிண்ணியை கொடுத்துட்டு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா " நான் வீட்டுக்கு திரும்பும்போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் "வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா" என்றாள் நான் ஓடிவந்து அவசரமாக என் உண்டியலை உடைத்து எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.

பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன். தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால்புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழன்று-சுழன்று ஆட…. எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.

தொடர்புடைய பதிவுகள்:

நூல் அறிமுகம் : ஸ்ரீரங்கத்துக் கதைகள் — – பா.ராகவன்

என் முதல் தொலைக்காட்சி அனுபவம்! – சுஜாதா

வேதாந்தம் – சுஜாதா

உஞ்சவிருத்தி – சுஜாதா

ஸ்ரீரங்கத்து தேவதைகள் – கதையா ? கற்பனையா ?  

ஓலைப்பட்டாசு — சுஜாதா

A Thought for Today

"Success is how high you bounce when you hit bottom."
–General George Patton

Thirukural : Maanam - 9

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

மு.வ உரை உரை:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

கலைஞர் உரை:
உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.

Explanation:
Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.

Open your mouth thoughtfully

Open your mouth thoughtfully
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Once an old man spread rumours that his neighbor was a thief.

As a result, the young man was arrested. Days later the young man was proven innocent.

After being released he sued the old man for wrongly accusing him.

In the court the old man told the Judge: "They were just comments, didn't harm anyone."

The judge told the old man: "Write all the things you said about him on a piece of paper. Cut them up and on the way home; throw the pieces of paper out. Tomorrow, come back to hear the judgment."

Next day, the judge told the old man: "Before receiving the judgment, you will have to go out and gather all the pieces of paper that you threw out yesterday."

The old man said: "I can't do that! The wind spread them and I won't know where to find them."

The judge then replied: "The same way, simple comments may destroy the honour of a man to such an extent that one is not able to fix it. If you can't speak well of someone, rather don't say anything."

"Let's all be masters of our mouths, so that we won't be slaves of our words."
-----+--------+---------+--------+-----

Thirukural : Maanam - 8

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.

மு.வ உரை உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ.

கலைஞர் உரை:
சாகாமலே இருக்க மருந்து கிடையாது. அப்படி இருக்கும்போது உயிரைவிட நிலையான மானத்தைப் போற்றாமல், வாழ்க்கை மேம்பாட்டுக்காக ஒருவர், தமது பெருமையைக் குறைத்துக் கொள்வது இழிவான செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
குடும்பப் பெருமைக்கான மானம் அழிய நேர்ந்தபோது இறந்து போகாமல் இந்த உடம்பைக் காத்துவாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்து ஆகுமோ?

Explanation:
For the high-born to keep their body in life when their honour is gone will certainly not prove a remedy against death.

A Thought for Today

"Ask yourself whether the dream of heaven and greatness should be waiting for us in our graves - or whether it should be ours here and now and on this earth."
-Ayn Rand

A Thought for Today

"If you only believe that you're an artist when you have a big advance in your pocket and a single coming out, I would say that's quite soulless. You have to have a sense of your own greatness and your own ability from a very deep place inside you. I am the one with the litmus test in my hands of what people need to hear next."
-Lady Gaga

Thought for Today

"The harder you work, the harder it is to surrender."
-Vince Lombardi

Thirukural : Maanam - 7

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

மு.வ உரை உரை:
மதி்யாதவரின் பின் சென்று ஒருவன் உயிர்வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது.

கலைஞர் உரை:
தன்னை மதி்க்காதவரின் பின்னால் சென்று உயிர் வாழ்வதைவிடச் செத்தொழிவது எவ்வளவோ மேல்.

சாலமன் பாப்பையா உரை:
இகழுபவர் பின்னே சென்று அவர் தரும் பொருளை, பதவியைப் பெற்று உயிர்வாழ்வதைக் காட்டிலும் அவன் இறந்துபோனான் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாம்.

Explanation:
It is better for a man to be said of him that he died in his usual state than that he eked out his life by following those who disgraced him.

A Thought for Today

"You wouldn't worry so much about what others think of you if you realized how seldom they do"
-Eleanor Roosevelt

Thought for Today

"In time we hate that which we often fear."
-William Shakespeare

Thirukural : Maanam - 6

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று

மு.வ உரை உரை:
மதி்யாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன?

கலைஞர் உரை:
இகழ்வதையும் பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால் என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.

சாலமன் பாப்பையா உரை:
உயிர் வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும் சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.

Explanation:
Of what good is it (for the high-born) to go and stand in vain before those who revile him ? it only brings him loss of honour and exclusion from heaven.

From Thirukural : Maanam - 5

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

மு.வ உரை உரை:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

கலைஞர் உரை:
குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

Explanation:
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.

Thirukural : Maanam - 4

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

மு.வ உரை உரை:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

கலைஞர் உரை:
மக்களின் நெஞ்சத்தி்ல் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து தாழ்ந்தி்டும்போது, தலையிலிருந்து உதி்ர்ந்த மயிருக்குச் சமமாகக் கருதப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

Explanation:
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.

Bhagavad Gita Quote


There is neither Self-knowledge nor Self-perception to those whose senses are not under control. Without Self-perception there is no peace; and without peace there can be no happiness.

Thirukural - Maanam : 3

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

மு.வ உரை உரை:
செல்வம் பெருகியுள்ள காலத்தி்ல் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தி்ல் பணியாத உயர்வு வேண்டும்.

கலைஞர் உரை:
உயர்ந்த நிலை வரும்போது அடக்க உணர்வும், அந்த நிலை மாறிவிட்ட சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தி்ல் பிறந்து மானம் காக்க எண்ணுவோர் செல்வம் நிறைந்த காலத்தி்ல் பிறரிடம் பணிவுடனும், வறுமை வந்த காலத்தி்ல் தாழ்ந்து விட்டுக் கொடுக்காமலும் நடந்து கொள்ள வேண்டும்.

Explanation:
In great prosperity humility is becoming; dignity, in great adversity.

Thought for Today

"All philosophy lies in two words, sustain and abstain."
-Epictetus

Thirukural - Maanam: 2

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

மு.வ உரை உரை:
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தி்ல் ஈ.டுபடமாட்டார்.<

சாலமன் பாப்பையா உரை:
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.

Explanation:
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.

A Thought for Today

"When we seek to discover the best in others, we somehow bring out the best in ourselves."
– William Arthur Ward

From Thirukural - Maanam

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்  குன்ற வருப விடல்.

மு.வ உரை உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

கலைஞர் உரை:
கட்டாயமாகச் செய்து தீர வேண்டிய செயல்கள் என்றாலும்கூட அவற்றால் தனது பெருமை குறையுமானால் அந்தச் செயல்களைத் தவிர்த்தி்டல் வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்தி்ற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.

Explanation:
Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.

Thirukural - Kudimai 10

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்
வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு.

மு.வ உரை உரை:
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

கலைஞர் உரை:
தகாத செயல் புரிந்தி்ட அஞ்சி நாணுவதும், எல்லோரிடமும் ஆணவமின்றிப் பணிவுடன் நடந்து கொள்வதும் ஒருவரின் நலத்தையும் அவர் பிறந்த குலத்தையும் உயர்த்தக் கூடியவைகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் தனக்கு நன்மை வேண்டும் என்று எண்ணினால் அவனிடம் நாணம் இருக்க வேண்டும். நற்குடும்பத்தவன் என்ற பெயர் வேண்டும் என்றால், எல்லாரிடமும் பணிவு இருக்க வேண்டும்.

Explanation:
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all.

Thought for Today

"Little things affect little minds."
-Benjamin Disraeli

From Thirukural !

நிலத்தி்ல் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தி்ல் பிறந்தார்வாய்ச் சொல்.

மு.வ உரை உரை:
இன்ன நிலத்தி்ல் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

கலைஞர் உரை:
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தி்ல் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தி்ன் இயல்பை அதி்ல் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தி்ன் இயல்பை அதி்ல் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

Explanation:
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

A Thought for Today

"The Constitution only gives people the right to pursue happiness. You have to catch it yourself."
-Benjamin Franklin

A Thought for Today

"Our tendency is to be interested in something that is growing in the garden, not in the bare soil itself. But if you want to have a good harvest, the most important thing is to make the soil rich and cultivate it well."
- Shunryu Suzuki

A Thought for Today

"Obey the principles without being bound by them."
- Bruce Lee

Thought for Today

If you do not tell the truth about yourself you cannot tell it about other people. 
-Virginia Woolf, writer (1882-1941) 

A Thought for Today

"I never considered a difference of opinion in politics, in religion, in philosophy, as cause for withdrawing from a friend."
-Thomas Jefferson

A Thought for Today

"There are two rules to success: 1) Never tell everything you know."
–Nick Tart

Thought for Today

"And it comes from saying no to 1,000 things to make sure we don't get on the wrong track or try to do too much. We're always thinking about new markets we could enter, but it's only by saying no that you can concentrate on the things that are really important."
-Steve Jobs

A Thought for Today

"The story of the Zen Master whose only response was always "Is that so?" shows the good that comes through inner nonresistance to events, that is to say, being at one with what happens.
The story of the man whose comment was invariably a laconic "Maybe" illustrates the wisdom of nonjudgment, and the story of the ring points to the fact of impermanence which, when recognized, leads to nonattachment. Nonresistance, nonjudgement, and nonattachment are the three aspects of true freedom and enlightened living."
-Eckhart Tolle

Thought for Today

"A desire arises in the mind. It is satisfied immediately another comes. In the interval which separates two desires a perfect calm reigns in the mind. It is at this moment freed from all thought, love or hate."
-Swami Sivananda

A Thought for Today

"Art washes away from the soul the dust of everyday life."
-Pablo Picasso

Thought for Today

"To achieve, you need thought. You have to know what you are doing and that's real power."
-Ayn Rand

A Thought for Today

"Kindness is the language which the deaf can hear and the blind can see."
-Mark Twain

Thought for Today

"Please don't ask me to do that which I've just said I'm not going to do, because you're burning up time. The meter is running through the sand on you, and I am now filibustering."
-George H W Bush

Thought for Today

"In the long run, men hit only what they aim at. Therefore, they had better aim at something high."
-Henry David Thoreau

A Thought for Today

"A successful person is one who can lay a solid foundation from the bricks others have thrown at them."
– Luke Shaw

Thought for Today

"The healthiest response to life is joy."
-Deepak Chopra