For this Day:

;

Thirukural : Pirivaattraamai - 4

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

மு.வ. உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி்மொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

கலைஞர் உரை:
பிரிந்தி்டேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதி்ல் என்ன குற்றமிருக்க முடியும்?

சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?

Explanation:
If he who bestowed his love and said fear not should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?

No comments: