For this Day:

;

Swami Vivekananda's Golden Words

விவேகானந்தர் பொன்மொழிகள் 

1. இந்தியாவில் மதம் ஒன்றுதான் வாழ்க்கையாக உள்ளது.

2. நமது நாடு வாழ வேண்டுமானால் மதமே தேசிய
வாழ்க்கையின் முதுகெலும்பாக அமைய வேண்டும்.

3. மதத்தில் மூடக் கொள்கைகள் இருப்பதைப் போலவே
விஞ்ஞானத்திலும் மூடக் கொள்கைகள் உண்டு.

4. ஒரு மதம் மற்றொரு மதத்தைத் தாழ்வாக எண்ணி,
அதன்மேல் ஆதிக்கம் செலுத்துவதை விட்டுவிட வேண்டும்.

5. உலக மதங்களின் தத்துவங்களை உணர்ந்தால்
மனிதனே தெய்வமாகலாம்.

6. மிருகத்தை மனிதனாக்குவதும் மனிதனைத்
தெய்வமாக்குவதும் மதம்.

7. தங்கள் மதமே சிறந்து விளங்க வேண்டும்; மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு
பகைமையை உருவாக்கும்.

8. உலகம் ஒரு குடும்பம்; உலக மதங்கள் பலவாயினும் அவை அனைத்தும் இறைவனை அடைவதற்கு துணை செய்பவை.

9. மதங்கள் யாவையும் உலகளாவிய பரந்த மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும்.

10. கடவுளை தாம் விரும்பும் உருவத்தில் ஒவ்வொரு மத வழக்கப்படி ஒவ்வொருவரும் வணங்கலாம்.

No comments: