For this Day:

;

Thought for Today

"Life is a tragedy when seen in close-up, but a comedy in long-shot."
- Charlie Chaplin

A Thought for Today

"A man can be himself only so long as he is alone."
- Arthur Schopenhauer

Thirukural : Veruvantha seiyaamai - 9

செருவந்த போழ்தி்ற் சிறைசெய்யா வேந்தன்  வெருவந்து வெய்து கெடும்.

மு.வ உரை உரை:
முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தி்ல் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

கலைஞர் உரை:
முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

சாலமன் பாப்பையா உரை:
நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

Explanation:
The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

A Thought for Today

"An idea is a point of departure and no more. As soon as you elaborate it, it becomes transformed by thought."
- Pablo Picasso

Thirukural : Veruvantha seiyaamai - 8

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.

மு.வ உரை உரை:
அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தி்ன் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

கலைஞர் உரை:
கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்தி்ற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தி்த் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

Explanation:
The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.