Part-2 & 3 உங்களுக்கு டயபடிஸா…? -சுஜாதா
BaalHanuman posted: " டயபடிஸ் ஒரு நோய் அல்ல. ஒரு குறை. கையில்லை. கால் இல்லை என்பது போல் இன்சுலின் இல்லை. அதை செயற்கையாக வெளியிலிருந்து கொடுக்கிறோம். அவ்வளவுதான் அலோபதியின் ஆதார சிகிச்சை முறை. அதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இது ரொம்ப நாளாக மாறவில்லை. 25-10-1988 ?எனக" டயபடிஸ் ஒரு நோய் அல்ல. ஒரு குறை. கையில்லை. கால் இல்லை என்பது போல் இன்சுலின் இல்லை. அதை செயற்கையாக வெளியிலிருந்து கொடுக்கிறோம். அவ்வளவுதான் அலோபதியின் ஆதார சிகிச்சை முறை. அதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இது ரொம்ப நாளாக மாறவில்லை. 25-10-1988 ?எனக்கு டயபடிஸ் இருந்தால், உங்களால் கண்டுபிடிக்க முடியுமா ? !சுலபம். போன தடவை பார்த்ததற்கு, இந்தத் தடவை கொஞ்சம் சுருங்கித் தெரிவீர்கள். காபிக்கு ஷுகர் போடலாமா என்று கேட்டால், சற்று தாமதித்துக் கொஞ்சம் போடலாம் என்பீர்கள். நொறுக்குத் தீனி கொண்டு வைத்தால், கறிவேப்பிலையைக் கூட விட்டு வைக்காமல் சாப்பிட்டு விடுவீர்கள். இனிப்பு ஏதாவது கொண்டு வந்தால், கண்கள் பிரகாசமடையும். கல்யாணச் சாப்பாட்டில் இலை ஆரம்ப நிலைக்கு வந்ததுபோல், சுத்தமாக அத்தனையும் சாப்பிடுவீர்கள். அடிக்கடி தண்ணீர் குடிப்பீர்கள். ராத்திரி ஒரு முறையாவது புலி துரத்துகிற மாதிரி பயங்கரக் கனவு கண்டு எழுந்திருப்பீர்கள். அரைமணிக்கு ஒரு முறையாவது மூத்திரம் போவீர்கள். மனைவி – கணவனுக்குத் தெரியாமல் சாக்லேட், மைசூர்பா சாப்பிடுவீர்கள். காலை அடிக்கடி காலால் சொரிந்து கொள்வீர்கள். கண்ணைப் பார்த்ததும் கண்டு பிடித்து விடலாம் முதன்முறையாக. வருடாந்திரச் செக்கப்பில் ரத்தப் பரிசோதனை பண்ணிப் பார்த்தால் தெரிந்துவிடும். (ஜூனியர் விகடன் 2003) டயபடிஸ் புராணம் தொடரும்… | | | | |
No comments:
Post a Comment