ஆசிரியர் தினம்
1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவர் கல்லூரிப் படிப்பை முடித்ததும் வெளிநாட்டுக்கு மேற்படிப்புக்காகச் சென்றார். படித்து முடிந்ததும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தார். அப்போது அவருடைய திறமை, புத்திக்கூர்மை, நிர்வாகத் திறமை ஆகியவற்றைக் கண்ட அறிஞர் ஒருவர், அமெரிக்காவின் உட்ரோ வில்சன் பேராசிரியர் பதவியிலிருந்து ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்தது போல ராதாகிருஷ்ணனும் உயர்வார் என்று கூறினார். அவர் கூறியது போலவே நடந்தது.
1950-ஆம் ஆண்டு டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரானார். பின்னர் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரானார். ஆயினும் அவர் ஒரு பேராசிரியர் போல உடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்திய நாட்டின் தத்துவ ஞானியாகப் போற்றப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் "தி ஹிந்து வ்யூ ஆஃப் லைஃப் அண்ட் இண்டியன் ஃபிளாஸபி' உட்பட 18 நூல்களை எழுதியுள்ளார்.
1954-ஆம் ஆண்டு "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது. 1975 வரை வாழ்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் இறுதிவரை நாட்டு நலனுக்காகவும் கல்விப்பணிக்காகவும் பலப் பல அரிய செயல்களைச் செய்துள்ளார்.
No comments:
Post a Comment